IPL திருவிழா - 3

162 ஓட்டங்கள் இன்று எட்டும் கனியா...??, இல்லை எட்டாக் கனி தானோ...??
 
என் மனைவிக்கு நான் மேட்ச் பார்க்கவில்லை என்று தெரிந்தால் கிரிக்கெட் கனெக்ஷனை கட் செய்துவிடுவார்கள்.

என்ன கொடுமை இது, கனெக்ஷனை காப்பாத்த எப்படியெல்லாம் கஸ்ரப்படுறார் நம்ம ஆரென் அண்ணா..!! :lachen001::lachen001::icon_rollout:
 
162 ஓட்டங்கள் இன்று எட்டும் கனியா...??, இல்லை எட்டாக் கனி தானோ...??

முரளி விஜய், சுரேஷ் ரெய்னாவால கனியை எட்டிப் பறிச்சிட்டாங்க....

எல்லாத்தைவிட சந்தோஷம் அந்த அதிகப்பிரசங்கி வினைய் குமாருக்கு அடிச்சாங்க ஆப்பு....ரொம்ப சந்தோஷம்.:icon_b:
 
Last edited:
நேற்றைய தினம் மும்பை அணிக்கும் டெக்கான் அணிக்கும் இடையேயான போட்டியில் ஆவேசமான ஆட்டத் திறனிலும் தலை முடி அசைவிலும் சில ஆண்டுகளுக்கு முன்னைய தோனியை ஞாபகமூட்டும் சவுரவ் திவாரியும் அமைதியாக நின்று ஆக்ரோசமாக பந்துகளை எல்லைக் கோடுகளுக்கு வெளியே செலுத்தும் அம்பாடி ராயுடுவும் மீண்டும் ஒரு முறை தம்மை நிரூபித்திருந்தார்கள்.

இளமைத் துடிப்பும் அனுபவ முதிர்ச்சியும் சரியான விகிதத்தில் சேர்கையில் வெற்றிகள் இலகுவாமென்பதை இந்த பருவத்தின் மும்பை அணி நிரூபித்து வருகிறது, இதே வேளை விஜயின் அதிவேக அதிரடியால் முன்னேறிக் கொண்டிருக்கின்றது சென்னை அணி இந்த வெற்றி தொடரட்டும் என்பதே ஒவ்வொரு ரசிகனின் கனவாகவும் இருக்கின்றது.
 
ஓவியன்,

திவாரியும், ராயுடுவும் விஜயும் என்னதான் ஆடினாலும் ரோஹித் சர்மாவைத்தான் இந்த அணியில் தேர்வு செய்வார்கள். ரோஹித்துக்கு யார் சப்போர்ட் செய்கிறார்கள் என்பது ஒரு புதிராகவே எனக்கு இருக்கிறது (நம்ம பிஜிகேவிடம்தான் இந்த புதிருக்கு பதில் கேட்கவேண்டும்)
 
மகத்தான வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸிற்கு என் வாழ்த்துக்கள்.

அபிஷேக் நய்யாரை மூன்றாவது ஆட்டக்காரராக உள்ளே கொண்டு வந்தது தவறு என்று நினைக்கிறேன். அதே மாதிரி டுமினி வந்த இடத்தில் போலார்ட் வந்திருக்கவேண்டும். டெண்டுல்கர் இந்த இரண்டு இடத்திலும் கொஞ்சம் சொதப்பிவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்.

மற்றபடி ரெய்னாவின் இரண்டு காட்சுகளைக் கோட்டைவிட்டதாலும் மும்பை தோற்றதற்கு மற்றொரு காரணம்.

சென்னை மிகவும் சிறப்பாக விளையாடியது. அஸ்வின் ஒரு தேர்ந்த பந்துவீச்சாளர் என்று தன்னை மறுபடியும் நிரூபித்துவிட்டார். அவருக்கு இந்திய அணியில் இடம் கொடுத்து அவருடைய கெளரவத்தை குறைக்கமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.

இனிமேலாவது டயத்துக்கு தூங்க போங்கப்பா.

இன்னும் தூக்கக்கலக்கத்தில்
ஆரென்
 
அபாரமான வெற்றி... உண்மை தான் இனியாவது நேரத்துக்கு தூங்கனும்...
 
அபிஷேக் நய்யாரை மூன்றாவது ஆட்டக்காரராக உள்ளே கொண்டு வந்தது தவறு என்று நினைக்கிறேன். அதே மாதிரி டுமினி வந்த இடத்தில் போலார்ட் வந்திருக்கவேண்டும். டெண்டுல்கர் இந்த இரண்டு இடத்திலும் கொஞ்சம் சொதப்பிவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்.

மற்றபடி ரெய்னாவின் இரண்டு காட்சுகளைக் கோட்டைவிட்டதாலும் மும்பை தோற்றதற்கு மற்றொரு காரணம்.

அந்த தவறினை சச்சினே கூறினார். உள்ளே சில தொடர்பாடல் பிரச்சனை இருந்திருக்கிறது. ஆனாலும் கடசி நேரத்தில் பொலாட் எடுத்த முடிவு தவறு. இரண்டாவது ஓட்டம் எடுத்து ராயுடு ஐ அவுட்டாக்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 2 ஓவரின் பொலாட் இனால் அடிக்கக்கூடிய ஓட்ட எண்ணிக்கையே இருந்தது. அவசரப்பட்டதால் வந்த வினை...

சென்னையின் ஓட்ட எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். ஹெய்டனின் ஓட்டம் சரியாகவே இல்லை... 30க்கும் மேலான பந்துகளை எதிர்கொண்டு 12 ஓட்டங்களை பெற்றது 20-20க்கு எடுத்தது ரொம்ப ஓவர்...

ஒவ்வொரு வருடமும் திறமையாக விளையாடிய அணி கோப்பையை வெல்லாமலே சென்றுவிடுகிறது. முதலாவது தடவை சென்னை. இரண்டாவது டெல்லி. இந்த தடவை மும்பை... சச்சினின் உழைப்பு வீணாணது சற்றே வருத்தம்...

இன்று இங்கு விடுமுறை என்பதால் தப்பித்தேன். படுக்கும் போது காலை 6மணி... :D

கடைசியில் ஏதோ உருக உருக மோடி பேசினாரே... ஏதாவது பிரச்சனையா??? அடுத்த முகாமையாளராக அவர் இருக்கப்போவதில்லை என்று பேசிக்கொண்டிருந்தார்கள் தெ.கா வில்
 
"ஜெயித்தது நாங்கதானுங்கோ......."சென்னை சூப்பர் கிங்ஸ்.....(எங்கேயோ எப்போவோ கேட்ட குரலில்.....!!!!!)....:D:D:D
வெற்றி புன்னகையுடன்
மணியா...:D:D:D
(அப்பப்போ ஃபோனில் எனக்கு உற்சாகம் அளித்து ஆலோசனைகளும் கூறிக்கொண்டிருந்த ஆரெனுக்கு என் நன்றிகள்.....)
 
தூக்கம் கெட்டு பார்கனுமான்னு நெனச்சுக்கிட்டே பார்த்தேன்..

ஆனா ஜெயிச்சுக்காட்டிட்டாங்க...
 
"ஜெயித்தது நாங்கதானுங்கோ......."சென்னை சூப்பர் கிங்ஸ்.....(எங்கேயோ எப்போவோ கேட்ட குரலில்.....!!!!!)....:D:D:D
வெற்றி புன்னகையுடன்
மணியா...:D:D:D
(அப்பப்போ ஃபோனில் எனக்கு உற்சாகம் அளித்து ஆலோசனைகளும் கூறிக்கொண்டிருந்த ஆரெனுக்கு என் நன்றிகள்.....)
ஆரென் ஆலோசனைப்படி தான் ஜெயித்தோமோ??? :D:D:D
ஆரெனுக்கு நன்றி பல. இனிமேல் விட்ட கதையை சீக்கிரமா தொடருவார் என நம்பலாம்.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..!!! தலை, மும்பை ஃபைனல் மேட்சுக்கு வந்திருக்கலாம்..
 
சென்னைக்கு வெற்றி தேடித்தந்த சுரேஷ் மற்றும் தோனிக்கு ஒரு ஓ போடுங்க*
 
ஐயா, அடுத்த வருஷம் ஃபைனல் சென்னையிலயாம்..

வந்துருவமல்ல....

(மணியாவுக்கு இப்பவே கிலி பிடிக்க ஆரம்பிச்சாச்சு!!!)
 
ஆரென் ஆலோசனைப்படி தான் ஜெயித்தோமோ??? :D:D:D
ஆரெனுக்கு நன்றி பல. இனிமேல் விட்ட கதையை சீக்கிரமா தொடருவார் என நம்பலாம்.

என்னது ஆரென் கதை விட்டாரா?

சொல்லவே இல்ல....:lachen001::lachen001::lachen001::lachen001:
 
]

ஐயா, அடுத்த வருஷம் ஃபைனல் சென்னையிலயாம்..

வந்துருவமல்ல....

(மணியாவுக்கு இப்பவே கிலி பிடிக்க ஆரம்பிச்சாச்சு!!!)

:D:D:D ஏன்.....???? நீங்க உங்க ஊரில பண்ணியதை நாங்க பண்ணமாட்டோமா என்ன....:rolleyes::rolleyes:
குண்டு மணியா.....:D:D:D
 
]

:D:D:D ஏன்.....???? நீங்க உங்க ஊரில பண்ணியதை நாங்க பண்ணமாட்டோமா என்ன....:rolleyes::rolleyes:
குண்டு மணியா.....:D:D:D

GOOD - U மணியவா..!!! இல்லாம இருந்தா "திமிரு" வடிவேல் கணக்கா
"குட்டு" மணியா ஆயிடுவீங்க..

இப்பதான் கட்டினீங்க... இடிக்கறதுக்கு எதுக்கு கட்டணும்? ஒரு டிக்கட் எடுத்தா பத்தாது?
 
GOOD - U மணியவா..!!! இல்லாம இருந்தா "திமிரு" வடிவேல் கணக்கா
"குட்டு" மணியா ஆயிடுவீங்க..

இப்பதான் கட்டினீங்க... இடிக்கறதுக்கு எதுக்கு கட்டணும்? ஒரு டிக்கட் எடுத்தா பத்தாது?

முழுவதும் கட்டலையே.....!!!! எப்படியும் மீதியை இடிச்சாகணுமே....!!!!
அன்புடன்
ஒல்லி மணியா...:D
 
முழுவதும் கட்டலையே.....!!!! எப்படியும் மீதியை இடிச்சாகணுமே....!!!!
அன்புடன்
ஒல்லி மணியா...:D

முழுசா கட்டலியா? அப்ப "கோயிங் ஸ்டெடி" அப்படின்னு சொல்லுங்க...

ஸ்டெடி தாமரை
 
என்னது ஆரென் கதை விட்டாரா?

சொல்லவே இல்ல....:lachen001::lachen001::lachen001::lachen001:

உண்மையைச் சொல்லி போரடித்துவிட்டது, அதனாலே கொஞ்சம் கதை விடுகிறேன். அவ்வளவுதான்.
 
Back
Top