IPL திருவிழா - 3

தான் சந்தித்த முதல் இரு போட்டிகளிலும் வெற்றியீட்டிய கொல்கத்தா அணி, தொடர்ச்சியாக மூன்று தோல்விகளைச் சந்தித்துள்ளது. நேற்றைய போட்டியில் போட்டியின் கடைசிப் பந்து வரை ஹெயில் ஆட்டமிழக்காமல் இருந்தும் ஓட்டங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தமை மும்பை அணியின் வெற்றிக்குக் காரணமாகியது...

நேற்றைய போட்டியில், காயமடைந்த அம்பாடி ராயூடுவுக்குப் பதிலாக உள்ளே வந்த டவான் நல்ல ஆரம்பத்தை சச்சினுடன் இணைந்து கொடுத்திருந்தார். மறுபடி ராயுடு உள்ளே வருகையில் வெளியே போவது யார்...??, அதனையறிந்து சதிஸூம் நேற்று நன்றாக விளையாடி இருந்தார்...
 
சந்திரசேகர் கணபதியை ஏன் இதுவரை சென்னை குழு உபயோகப்படுத்தவில்லை என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. இவர் திறமையன ஆல்ரவுண்டர், இவருக்கு பதில் தியாகி, கோணி போன்றவர்களை உள்ளே இறக்கினார்கள்.

அதே மாதிரி விஜய்க்கு பதில் அருண் கார்த்திக்கை உள்ளே கொண்டு வரலாம்.

ஜஸ்டின் கெம்பிற்கு பதில் யார் உள்ளே வருவார்கள் என்று தெரியவில்லை.
 
இன்றைக்கும் சூப்பர் ஓவர் வருமா?
சூப்பர் ஓவர் சூப்பர் சஸ்பென்ஸாக இருக்கிறது..!! :-)
 
இன்றைக்கும் சூப்பர் ஓவர் வருமா?
சூப்பர் ஓவர் சூப்பர் சஸ்பென்ஸாக இருக்கிறது..!! :-)
ஆஹா நாம இரண்டாவதாக பேட் செய்ய போகிறோம் என்ற நம்பிக்கையிலா?
 
நேற்றைய போட்டியில் பிடிகளை தவற விட்டு வெற்றியையும் தவற விட்டாச்சு, சென்னை அணிக்காக துடுப்பெடுத்தாடியவர்களில் பத்ரிநாத்தைத் தவிர வேறு யாருக்கும் வெற்றிபெற வேண்டுமென்ற ஆர்வம் இருந்தாகத் தெரியவில்லை.
 
காரணம் ரொம்ப சிம்பிள் ஓவியன். போட்டி நடந்த இடம் பெங்களூரு.....வெறியர்கள் நிரம்பியிருக்கும் ஊர். தப்பித்தவறி சென்னை அணி ஜெயித்துவிட்டால்....மிகப்பெரிய கலவரம் ஏற்படும். போதாக்குறைக்கு மல்லையா வேறு முறைத்துக் கொண்டே இருக்கிறார்.

பெங்களூர் அணியினர் யாருமே விளையாட்டுவீரர்களாக விளையாடவில்லை. அவர்களது முகங்களைப் பார்த்தாலே தெரிந்தது...வெறித்தனம். மல்லையாவின் மிரட்டலுக்கு ஆளாகி...எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்ற கட்டாயத்தில் இருந்தார்கள்.

மொத்தத்தில் நேற்று நடந்த போட்டி....கிரிக்கெட்டை...ஜென்டில்மேன்ஸ் கேம் என்று சொல்ல முடியாதவாறு செய்துவிட்டது.
 
இந்தக் கோணத்தில் நான் சிந்திக்கவில்லை சிவா, அடிக்கடி தொலைக்காட்சியில் விஜய் மல்லையாவின் முகம் தெரிந்த போது ஏன் இப்படி முறைத்துக் கொண்டிருக்கிறாரென நினைத்தது இப்போது கொஞ்சம் விடயத்தை விளங்க வைக்கின்றது.
 
இடையிடையே காண்பித்த ஸ்ரீகாந்தின் முகத்திலும் தெரிந்த உணர்ச்சி...தோல்வியை எதிர்பார்த்தே அமர்ந்திருக்கிறார் என்பதை தெளிவாகக் காட்டியது. சென்னை அணியினரின் முகபாவங்களும் அவர்களையறியாமலேயே அந்த உண்மையை பறைசாட்டிக்கொண்டிருந்தன.
 
சென்னை அணிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் பிரச்சனை. அதனாலே கடந்த மூன்று மேட்சும் தோற்றுவிட்டார்கள்.

இப்போ டக் போலிங்கரை சென்னை கிங்ஸ் புக் செய்திருப்பதாக நியூஸ் வந்துள்ளது. இதனால் இவர்கள் வெற்றி வாய்ப்பு பெருகும் என்றே நினைக்கிறேன்.
 
இனி வெற்றி பெற்றாலும்....பிரயோசனமுண்டா ஆரென்....???
 
சென்னை இனி வரும் எட்டு போட்டிகளில் ஆறு போட்டிகளை வென்றாக வேண்டும் அல்லது அடுத்த அணியினை நம்பி இருக்க வேண்டும்
 
இன்னும் ஆறு ஆட்டம்தான் வெல்லவேண்டும். வென்றால் எளிதில் இறுதிச் சுற்றுக்குப் போகமுடியும். இல்லையென்றால் மற்றவர்களின் காலை வாறிவிடவேண்டும்
 
இன்று மும்பை இண்டியன்ஸுக்கும் பஞ்சாப் கிங்ஸுக்கும் மேட்ச் நடக்கப்போகிறது. இன்று பஞ்சாப் ஜெயிக்கும் என்றே நினைக்கிறேன். யுவராஜின் அபாரமான ஆட்டத்தைப் பார்க்கமுடியும்.

அதே மாதிரி நாளை நடக்கும் பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கிடையேயான மாட்சில் சென்னை அணி வெல்லும். கணபதி சந்திரசேகருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். அனிருதாவிற்கு சான்ஸ் கிடைக்குமா
 
இன்னுமா...சென்னை அணியை நம்புறீங்க ஆரென்.....!!!

ஹய்யோ....ஹய்யோ.....!!

டெஸ்ட் மேட்ச்சுல வெளையாடுற மாதிரி வெளையாடுறாங்க....இவிங்கபோய்.....!!!

போங்க ஆரென் காமெடி பண்ணாதீங்க...!!
 
இன்னுமா...சென்னை அணியை நம்புறீங்க ஆரென்.....!!!

ஹய்யோ....ஹய்யோ.....!!

டெஸ்ட் மேட்ச்சுல வெளையாடுற மாதிரி வெளையாடுறாங்க....இவிங்கபோய்.....!!!

போங்க ஆரென் காமெடி பண்ணாதீங்க...!!

சிவா,

நீங்கள் நையாண்டி பண்ணினால் ரோசகாரப் புள்ளைங்க வென்றிடுவாங்கனு நம்பித் தானே இப்படி பேசுறீங்க...???
:icon_rollout::D:D
 
இல்லை ஓவியன். போன நாலு மேட்ச்சையும் பார்த்து நொந்துபோய்த்தான் இப்படிச்சொன்னேன். இனி இவங்க எப்படியும் ஜெயிக்க மாட்டாங்க. அதுவும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக் கிட்ட...ம்ஹீம்.....முடியவே முடியாது.
 
அது என்னவோ உண்மைதான், இப்போதெல்லாம் நான் மும்பை அணிக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறனாக்கும்..!! :icon_ush:
 
காசு விளையாடுவதால், காசால் விளையாடுறாங்களோ னு தோணுது..
 
Last edited:
இடைத்தேர்தலைவிட....காசுப் புழக்கம் கொடிகட்டிப் பறக்குது.....இது விளையாட்டில்லை....வியாபாரம்...என ஒவ்வொரு அங்குலத்திலும் பறைசாற்றுகிறார்கள்.
 
நேத்து நம்ம நண்பர் ஒருவருக்கு ஃபோன் போட்டு என்னங்க இப்படி ஆடுறாங்க நான் மேட்சை பார்க்கவே முடியாமல் செய்துவிடுவாங்க போலிருக்கு, என் மனைவிக்கு நான் மேட்ச் பார்க்கவில்லை என்று தெரிந்தால் கிரிக்கெட் கனெக்ஷனை கட் செய்துவிடுவார்கள், ஒரு மேட்சாவது ஜெயிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னேன். ஏன் வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுர என்று அவர் சொல்லி ஃபோனை வைத்துவிட்டார். என்னத்த சொல்றது, அதான் நம்ம டீமுக்கு நானே வாழ்த்துச் சொன்னேன்.
 
Back
Top