dhilipramki
New member
iOS - Android, ஏன் iPhone தரத்தில் விஞ்சியதாயிருக்கிறது?
ஒன்றே ஒன்று கண்ணே கண்ணென்று சொல்வது போல், கீழ் காணப்போகும் விடயம் ஒன்று போதும், அதாவது, iOS5 விடம் நீங்கள் உங்கள் குரலில் அநேகமாக எதைக்கேட்டாலும், உடனே iPhone பதிலளிக்கும். இப்பொழுது வானிலை என்ன, எத்தனை குறுந்தகவல் வந்து இருக்கிறது. நாளை காலை 9 மணிக்கு ஆர்ப்பொலியை (alarm) தயார் செய்.... போன்ற கேள்விகளை கெட்டு கொண்டே இருக்கலாம். பதில் உடனே மிகத் துல்லியமாய் வெளிவரும்.(இது உலகில் iPhone 4Sஇல் மட்டுமே இருக்கிறது.)
நிலையாயிருத்தல்- அதாவது, iOS ஒருத்தயாரிப்பிடமிருந்து வருகிறது, ஆனால் Android அவ்வாறு இல்லை. Android
வகை OS கள் அவரவர்க்கேற்ப மாற்றம் செய்யபடுகிறது.
iOS இல் பயனர் இடைமுகம் (user interface) மிக அர்புதுமாகவும், மிக எளிய வகையிலும் பயன்படுத்த இயலுகிறது, மற்றும் நேர்த்தியான ஆற்றலுடையது.Android ஐ விட அதிகபடியான பயன்பாட்டு தளங்கள் (Applications) இருக்கிறது, இலவச தளங்களும் மிகுந்து இருக்கிறது.
iOS இல் தீங்குநிரலுக்கு (malware) வழியே இல்லை. ஆனால், Android-லோ மூன்றாந்தரப்பு அங்கரிக்கப் படாதவைகள்
உள்ளது, மற்றும் இணையத்திலிருந்து இறக்கம் செய்வதற்கும் எவ்வித இடர்காப்புறுதி இல்லாததால், எவ்வைகை
வைரஸ்களும் பாதிக்கப்படலாம்.
iTunes Media Manager இருப்பதால், உங்கள் ஊடகங்களை எளிய முறையில் நிர்வகிக்க முடியும். iTunes இருப்பதால்
உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் கணிணி இல்லாமல் நீங்கள் உங்களின் விலைக்கு வாங்கப்பட்ட அல்லது
தரவிறக்கம் செய்யப்பட்டவைகளை அடையலாம்.
ஆப்பிள் நிறுவனம் மின்கல நிர்வாகத் திறமையை உபயோகிக்க சில விடயங்களை புகுத்தியுள்ளது. ஆனால் Android இயங்குதளத்தில் அவ்வாறு ஒன்று காணபடுவதில்லை. iPad தொடர்ந்து பத்து மணிநேரம் இயங்கும் என்பது ஆச்சரியம்.
iOS க்கு உலகில் உள்ள எந்த ஆப்பிள் ஆதரவுக் குழுமம் மையத்திலும் உங்கள் உதவியை நாடலாம். ஆனால் Android OS கள் அவ்வாறு இல்லாமல், நீங்கள் யாரிடம் வாங்குநீர்களோ அவர்களிடம் அந்த குறிப்பிட்ட OS மாடலுக்கு நீங்கள் உதவியை நாட வேண்டும்.
iOS யில் Find My iPhone என்ற ஒரு பயன்பாட்டு தளம் இருப்பதால், களவுப் பொண்ண உங்களின் iPhoneஐ விரைவில்
கண்காணித்து பெற்று விடலாம். அந்த பயன்பாட்டை நீங்கள் இயக்கி வைத்திருக்கும் பொழுது, நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு வினாடியும் உங்களின் தடத்தை பின்தொடர முடியும். ஒரு வேலை உங்களின் iPhone கலவுப்போனால், அதைக்கொண்டு கண்டுவிடலாம். அது சுவிட்ச் ஆப் செயப்படாலும் GPRS இயங்கிக்கொண்டே இருக்கும்.
முன்பே கூறியது போல iTunes இருப்பதால் நீங்கள், உங்களுக்கு தேவையான பாடல்கள், காணொளிகள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் ஒருமித்த வரிசைப்படி அமைத்துகொள்ளமுடியும். அல்லது தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். iTunes களஞ்சிய கிடங்குமூலம் உங்களின் தேவையை பூர்த்திசெய்திட முடியும்.
AirPlay என்ற பயன்பாட்டுத் தளம் இருப்பதால், கம்பியில்லா ஒளிபரப்பையும், மற்ற i கருவிகளுக்கு உங்களின் கோப்புகளையும் மற்ற ஒலி-ஒளிகளையும் எளியமுறையில் பரிமாற்றம் செய்யமுடியும்.
மேற் எடுத்துக்காட்டப் பட்ட விடயங்களை விட இன்னும் ஏராளம் இருக்கிறது. இது போன்றவற்றைகளால்
Androidலிருந்து iOS வேறுப்பட்டு உலகில் முதன்மையாக திகழ்கிறது.
Androidலிருந்து iOS வேறுப்பட்டு உலகில் முதன்மையாக திகழ்கிறது.