முரளிராஜா
New member
விரும்பிய செல்போன் சேவைக்கு மாறிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டதால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ள நிறுவனம் மத்திய அரசின் பிஎஸ்என்எல்தான்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 131581 வாடிக்கையாளர்களை இழந்துள்ளது பிஎஸ்என்எல்.
விரும்பிய சேவைக்கு மாறிக் கொள்ளலாம் என்ற வசதி அறிமுகமானதிலிருந்து பிஎஸ்என்எல் சேவையிலிருந்து மட்டும் 223,824 வாடிக்கையாளர்கள் வேறு சேவைக்கு மாறிக் கொண்டனர்.
ஆனால் வேறு நெட்வொர்க்குகளிலிருந்து பிஎஸ்என்எல்லுக்கு மாறிக் கொண்டவர்கள் 92,243 பேர் மட்டுமே. இதன் மூலம் 131,581 வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் இழந்துள்ளது.
இது மிகப் பெரிய இழப்பாகும். பிஎஸ்என்எல்லை விட மலிவான கட்டண திட்டத்தை போட்டியாளர்கள் அறிவித்துள்ளதாலேயே இந்த நிலை என்று பிஎஸ்என்எல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் பிஎஸ்என்எல்லின் கட்டணத் திட்டமே பலருக்குத் தெரியவில்லை. இங்கு கனெக்ஷன் பெறுவதும் கடினமான முறையாக உள்ளது. வாடிக்கையாளர் சேவையில் உள்ள மந்தமான போக்கும் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் வாடிக்கையர் தரப்பில்.
மத்திய அரசின் இன்னொரு நிறுவனமான எம்டிஎன்எல் 5869 வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
நன்றி; தட்ஸ்தமிழ்