இந்த ஆடைகள் யாரைக் குறிவைத்து தயாரிக்கப்படுகின்றன? இனளைஞர்கள்? இளைஞிகள்? குழந்தைகள்? வியாபாரக்காந்தங்கள்?
எந்த நாடு? என்ன செக்மெண்ட். உதாரணமாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மலிவு விலை என்றால் மெட்ராஸ் என்ற பெயரை இணைத்தல் நலம்.
மலிவு விலை அல்ல என்றால் மெட்ராஸ் வேண்டாம்.. ஏனென்றால் மெட்ராஸ் மலிவு விலை துணிகளுக்குப் பெயர் போனது.
ஆடையின் வகையைப் பொருத்து பெயர் மாறலாம். கலாச்சார ஆடை எனில் கலாச்சார சின்னம் இணைத்தல் நலம். கேஸூவல் வேர் என்றால் கீதமக்கா சொல்லும் வகையான பெயர்கள் பொருந்தும்.
உங்கள் ஆடையின் சிறப்புத் தன்மைக்கும் பெயருக்கும் சம்பந்தம் இருக்க வேண்டும். வித்தியாச வர்ணங்கள் இருந்தால் பெயரில் கலர் இருக்க வேண்டும்.
Checks 'n Stripes
Dark Shades
இப்படி ஆடையின் தன்மை விளங்குமாறும் வைக்கலாம்.
இப்படி செய்து லோகோவை அதற்குத் தகுந்த மாதிரி டிசைன் செய்தால்.. பெயரே தரம் சொல்லும். மனதில் தங்கும்.
நீங்கள் சொன்னபிறகு நிறைய தகவல்கள் கொடுத்திருக்கவேண்டும் என்று இப்பொழுது தோணுகிறது.
முதலில்,
இது ஆண்களுக்கான ரெடிமேட் ஆடையகம் (Showroom), ஆண்களில் குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து தயாரிக்கப்படும். ஒரு கவர்ச்சிகரமான ஆங்கிலப் பெயரையே இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகிறார்களெனத் தெரிகிறது. மிகத் தரமான துணி, தையல், மற்றும் ஆடையின் தரமான இறுதித் தோற்றம் ஆகியவற்றால் இதன் விலையும் கூடுதலாகவே இருக்கும். சரியாகச் சொல்லவேண்டுமென்றால் பீட்டர் இங்க்லண்ட், லூயிஸ் பிலிப் போன்ற மாதிரியான தரம், அதனைவிட சற்றே குறைந்த விலை...
ஃபார்மலுக்கு தனியேவும், கேஸுவலுக்குத் தனியேவும் வைக்கலாம் என்பது நிறுவனத்தாரின் கருத்து.
(நிறுவனத்திற்கான ஆலோசனை மற்றும் வடிவமைப்பு பிரிவில் அடியேனும் உள்ளேன்!!)
FRYSK என்பது நிறுவனத்தின் பெயர். இப்பெயரிலேயே அல்லது Frysk Club என்று காஸுவல்ஸ் வைக்கலாமே என்று ஆலோசனை அளித்தேன்.. பரிசீலனையில் உள்ளது. ஃபார்மல்ஸுக்கு என்று தனியேவும், ஒரு கம்பீரமான, ஆங்கிலேயத்தனமான பெயர் இருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள்.
ஆடைக்கு வைக்கப்படும் பெயரை முறைப்படி ரிஜிஸ்தர் செய்து விளம்பரம் செய்ய முடிவெடுத்துள்ளார்கள்.
ஆடை, இந்தியாவை குறிவைத்து தயாரிக்கப்படுகிறது.!
இப்போதைக்கு வந்த பெயர்கள்
PANWEAR
cuts & carves
tailormade
pinstripe
scarecrow dressings
cushy costumes
cosy & cushy
your choice
dress to the nines
glamourous zone
Checks 'n Stripes
Dark Shades
Fanta C
Boracay Suits
Alphine George
Silver Lining
Emperor look
@வெற்றி.
பெயர் தெரிவானால் பரிசு உண்டு! ஆடை தயாராகும் வரை காத்திருக்கவேண்டும்!