Barfi! - இந்தி திரைப்படம்

ஆதவா

New member
Burfi

தமிழ் சினிமாக்களில் வழக்கமாகச் சொல்லப்படுவது “இது போன்ற கதை இதுவரை வரவில்லை”, “நிச்சயம் பார்க்கவேண்டிய படம்” போன்ற நிச்சயமற்ற வாக்குறுதிகள். சென்று பார்த்தவர்களைச் செறுப்பால் அடித்து துரத்தி விட்ட படங்களே ஏராளம்.

பர்ஃபி ஒரு இனிமையான இளமையான புதுமையான திரைப்படம். காட்சிகள் ஒவ்வொன்றும் இளமை ததும்பி வழியும் கிராமத்துப் பெண்ணை ஒத்து இருக்கிறது. ட்ரைலர் பார்க்கும் பொழுதே படத்தைப் பார்த்துவிடவேன்டும் என்று நினைத்திருந்தேன். நல்லவேளையாக எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தது உண்மையில் ஒரு ஆச்சரியம்.

ஒரு சில சீன்கள் சில ஆங்கில படங்களீல் இருந்து சுட்டது போல் இருந்தது.

தவற விடக்கூடாத படம். ரன்பீர் கபூர் மற்றும் பிரியங்கா சோப்ராவின் நடிப்பு அட்டகாசம். ரவிவர்மன் எனும் ஒளிப்பதிவாளர்..... சொல்லக்கூடாது.. போய் பாருங்கள்!!!

நேரம் கிடைத்தால் பெரிய விமர்சனமே போடலாம்!!

@ மதி, மற்றும் இந்தி நாட்டில் இருக்கும் ஆதி.... கமான்.. படத்தை மிஸ் பண்ணிடாதீங்க



Trailer

http://www.youtube.com/watch?v=yZxrao3zou4
 
Last edited:
இந்த வார இறுதியில் போய் பார்க்கிறேன் ஆதவா
 
கொஞ்சமாக எழுதி நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டீர்கள். முடிந்தால் நான் பார்க்கிறேன்.
 
'கஹானி' படம் பார்த்தே ஹிந்தி படங்கள் மீதான எனது பார்வை சமீபத்தில் மாறியது. இப்படமும் அந்த பார்வையைத் தக்கவைக்கும் என நம்புகிறேன்..
 
இந்த திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப்படங்களுக்கான ஆஸ்கர் பிரிவில் இந்தியாவின் சார்பில் அனுப்பப்படுகிறது!! - ஒரு தகவலுக்கு...
 
இந்த திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப்படங்களுக்கான ஆஸ்கர் பிரிவில் இந்தியாவின் சார்பில் அனுப்பப்படுகிறது!!
இதற்காக நேற்று Z-செய்திகள் தொலைகாட்சியில் வறுத்தெடுத்துவிட்டார்கள்... கிரிக்கெட் துறையை சாராதவர்கள் கிரிக்கெட் அணியை தேர்ந்தெடுக்கும் குழுவில் அங்கம் வகிப்பதும்... விளையாட்டுதுறையை சாராதவர்கள் ஒலிம்பிக் விளையாட்டு குழுதேர்வில் இடம்பெறுவதும்... கலைத்துறை அனுபவமற்றவர்கள் ஆஸ்கர் படக்குழு தேர்வில் இடம்பெற்றிருப்பதும்... இந்தியாவிற்க்கு புதிதல்ல என்ற ரீதியில் கடுமையாக தாக்கியிருந்தார்கள்..!!

என்னை பொறுத்தவரை, ”காதல் புனிதமானது தெய்வீகமானது” என்ற ரீதியில் வரும் படங்களின் வரிசையில் இதையும் சேர்க்கலாம் என்று தோன்றுகிறது... ”ஹிஸிகே ஸாத் ஹர்பல் ஜீனா.. ஔர் ஸாத்மேயி மர்ஜானா”- இந்த ஒருவரி கதையை வித்தியாசமான திரைக்கதை மற்றும் காட்சியமைப்பில் வெளிப்படுத்தியது ஈர்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது..!! கூடவே ரன்பீரின் நடிப்பும்..!!

இலியானா அவ்வப்போது தன் தாயிடம் “நீ அப்பாவை காதலிக்கிறியாம்மா”-ன்னு கேட்டு தன்நிலையை நியாயப்படுத்துவதை காலாச்சார காவலர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது சந்தோசமான விசயம்..!! வழக்காம ப்ரியங்கா மேலவர அந்த ஃபீலிங் இறுதிவரை நமக்கு வரமா பார்த்துக்கொண்ட அந்தவொரு பக்குவத்துக்காகவே இயக்குனரோட திறமையை மெச்சி இந்தபடத்தை ஆஸ்காருக்கு அனுப்பலாம்..!!:)
 
இந்த படம் ஒரு ஃபீல்குட்... அவ்வளவே சுபி. ஆஸ்கர் அனுப்புமளவுக்கு இதில் எதுவுமில்லை. வழக்கு எண் அனுப்பியிருக்கலாம்.. தேர்விலாவது போயிருக்கும்.

தவிர இப்படம் நிறைய ஆங்கிலப்படங்களிலிருந்து சுட்டதாம். எனக்குத் தெரிந்தே மூன்று படங்கள்!!

அவன் படத்தை சுட்டு அவனுக்கே போட்டுகாமிச்சு பரிசு கொடுடான்னா.....

இந்திய சினிமாவுக்கு இதைவிட கேவலம் வேற எதுவுமில்லை.
 
இந்த படம் ஒரு ஃபீல்குட்... அவ்வளவே சுபி. ஆஸ்கர் அனுப்புமளவுக்கு இதில் எதுவுமில்லை. வழக்கு எண் அனுப்பியிருக்கலாம்.. தேர்விலாவது போயிருக்கும்.

தவிர இப்படம் நிறைய ஆங்கிலப்படங்களிலிருந்து சுட்டதாம். எனக்குத் தெரிந்தே மூன்று படங்கள்!!

அவன் படத்தை சுட்டு அவனுக்கே போட்டுகாமிச்சு பரிசு கொடுடான்னா.....

இந்திய சினிமாவுக்கு இதைவிட கேவலம் வேற எதுவுமில்லை.

நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன் ஆதவா. காப்பின்னு. Youtube ல வீடியோ போட்டுருக்காங்க. நெறைய சார்லி சாப்ளின் படத்துல இருந்து எடுத்த மாதிரி அதுல சொல்லிருந்தாங்க. நான் இன்னும் Barfi பாக்கல. அதனால முடிவா எதுவும் சொல்ல முடியல. நாளைக்கு பாத்துட்டு வந்துட்டு சொல்றேன். :)
 
மூன்றாம் பிறை, மெட்டி, பூவே பூச்சூடவா போன்ற படங்களைப் பார்க்கும் போது வந்த மன ஒன்றுதலை இந்தப்படமும் கொடுப்பதால் அந்த பட வரிசையில் இதனையும் சேர்க்கலாம். அவ்வளவே...!!

மாற்றுத் திறனாளிகளை கொச்சைப்படுத்தாமல் மிகவும் நேர்த்தியாக காட்டுவது ஒரு ப்ளஸ் பாயிண்ட்.

ரன்பீர் மற்றும் ப்ரியங்காவின் மாறுபட்ட நடிப்பைக் காணமுடிந்தது ஒருவிதத்தில் நிம்மதி!!

ஆனாலும், ஆஸ்கார் தேர்வுக்கு அனுப்புவது சரியல்ல என்பது என் கருத்து...!!
 
சமீபத்தில் பேஸ்புக் நண்பர் அனுப்பிய செய்தியில்: கூகுளில் காப்பி என்று தட்டினால் அதற்கு பர்ஃபி என்று வருகிறதாம். எங்கிருந்தோ கதையைச் சுட்டிருக்கிறார்கள்.
 
Back
Top