பணவீக்கம்

சிவா.ஜி

நட்சத்திரப் பதிவாளர்
பணவீக்க விகிதம் என்று எதை சொல்லுகிறார்கள்.நீண்ட நாட்களாக இதில் எனக்கு சந்தேகம்.அது அதிகமானால் நல்லதா குறைந்தால் நல்லதா?தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.
 
பணவீக்கம் அதிகரிப்பது என்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சியைக் குறிக்கும்.

விரிவான விளக்கத்திற்கு மன்ற உறவுகள் உதவவேண்டும்...
 
பணவீக்கம் ஒரு உதாரணம்
இன்றைய நிலை:
100 ரூபாய் மதிப்புள்ள பொருளை நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்க முடியம்

பணவீக்கம் அதிகரித்தால்:
உம்மிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் அதே சமயம்
100 ரூபாய் பொருளை நீங்கள் 1000 ருபாய் கொடுத்து வாங்க வேண்டி வரும்.

இதனால் தான் பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கவேண்டியது அவசியம்.(எப்போதோ படித்தது)
 
எளிமையான புரியும்படியான விளக்கத்துக்கு நன்றி சக்தி.
 
பணவீக்கம் என்றால் என்ன ?
ஏதாவது ஒன்று ஊதிப் பெருப்பதையோ, குண்டாவதையோ இன்ஃப்ளேஷன் என்று கூறுவோம். பொருளாதாரத்தில் இதற்கு இரண்டு பொருள் உண்டு. எல்லாப் பொருள்கள் மற்றும் சேவைகளின் பொதுவான விலை ஏறிவிடுவது... அல்லது பணத்தின் புழக்கம் அதிகரிப்பது. அதனால்தான், அதற்குப் பணவீக்கம் என்று பெயர். இதில் முரண்பாடான விஷயம் என்னவென்றால், பணத்தின் புழக்கம் அதிகம் ஆகும் போது, அதன் மதிப்புக் குறைந்து போகிறது என்பதுதான். தேவைக்கு அதிகமாக ஒரு விஷயம் கிடைக்குமென்றால், அதன் மதிப்பு சரிந்துவிடுவது இயல்புதானே!

பணப்புழக்கம் அதிகமாக இருக்குமானால், மக்களின் கையில், பர்ஸ?களில், வங்கிக் கணக்குகளில் பணம் அதிகமாக இருக்குமானால், அவர்கள் செலவழிக்கத் தொடங்குவார்கள். மேன்மேலும் பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். அதனால், அவற்றின் விலைகள் உயரத் தொடங்கும். பொருள்கள் மற்றும் சேவைகளின் இந்தப் பொதுவான விலை மாற்றத்தைத்தான் பணவீக்கம் என்கிறோம்.
இப்போது இந்தியாவின் பணவீக்கம் 7 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட சில பொருள்கள் மற்றும் சேவைகளின் தொகுதியின் மதிப்புக் கூட்டிய சராசரி விலை (வெயிட்டட் ஆவரேஜ் பிரைஸ்) சென்ற ஓராண்டில் 7% அதிகரித்திருக்கிறது. இந்த ?மதிப்புக் கூட்டிய சராசரி? என்ற வார்த்தைகளைப் புரிந்து கொள்ள சின்ன உதாரணம் போதும். ஒரு கூடை பழங்களின் விலை, சென்ற ஆண்டு 100 ரூபாயாக இருந்து, இந்த ஆண்டு 110 ரூபாய். ஆக விலையேற்றம் பெற்றிருந்தால், கடந்த ஓராண்டில் அதன் பணவீக்க விகிதம் 10%.

பணவீக்கம் எவ்வாறு அளவிடப்படுகிறது ?
வீட்டுக்கு வீடு, பொருள்களின் முக்கியத்துவம் மாறுபடும். இந்த முக்கியத்துவத்தைத்தான் ஒவ்வொரு பொருளோடும் சேர்க்கப்படும் ?வெயிட்? என்று சொல்கிறோம். மத்திய புள்ளியியல் துறை, மக்கள் மத்தியில் சில கணக்கெடுப்புகளை நடத்தி, ஒவ்வொரு பொருளுக்கும் இருக்கக்கூடிய ?வெயிட்டை? அளவிடுகிறது. விலை மாற்றத்தோடு இந்த வெயிட்டையும் பெருக்கினால் கிடைப்பதே வெயிட்டட் சராசரி விலை மாற்றம். பணவீக்கம் இதனடிப்படையில்தான் அளவிடப்படுகிறது.

பணவீக்கம் என்பது ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
பணவீக்கம் ஏழைகளை பாதிக்கக்கூடியது. ஏழ்மையானவர்களும் மத்தியதரக் குடும்பங்களும் அரிசி, கோதுமை, பால், மீன், காய்கறிகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காகத்தான் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகின்றன. இதுபோன்ற அத்தியாவசிய பொருள்களின் விலைகள் ஏறுமானால், அது ஏழ்மையானவர்களையே அதிகம் பாதிக்கும்.
அரசு எப்படி இந்தப் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தும்?
இதற்கு, பணவீக்கத்தின் பொருளாதார அர்த்தத்தைப் பார்த்துவிடுவோம். உபரியாகப் புழங்கும் பணம்தான், பொருள் மற்றும் சேவைகளின் தேவையை அதிகப்படுத்திவிடும். அதனால், அரசு பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். கடன்கள் மீதான வட்டிவிகிதத்தை உயர்த்துவதன் மூலம், ரிசர்வ் வங்கி இதைச்செய்ய முயற்சிக்கிறது. வட்டிவிகிதங்கள் உயரும்போது, மக்கள் கடன் வாங்குவதை தள்ளிப் போடுவார்கள். அதோடு, அந்தப் பணத்தை தங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பார்கள். அதன்மூலம் சேமிப்பு உயரும்.
------------
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கும் சில அதிரடி நடவடிக்கைகள், வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. ஏழைகளின் வாங்கும் சக்தியை பணவீக்கம் குறைத்துவிடுமென்றால், அந்தவகை உயர் வளர்ச்சிக்கு அர்த்தமே இல்லை. பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டுமென்றால், ரிசர்வ் வங்கியை சுதந்திரமாக தனித்தன்மையுடன் இயங்க அனுமதிக்கவேண்டும்.
அரசு, பொறுப்புடன் செலவுகளை மேற் கொள்ளவேண்டும். அதேசமயம், பொருளா தாரத்தில், தேவையும் உற்பத்தியும் சம அளவு பெருகும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதை எல்லாம் இந்திய அரசு புரிந்துகொண்டுள்ளது. அதனாலேயே, அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்தப் பணவீக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று உறுதியாக நம்பலாம்.

எப்போதோ படித்தது சிவா.ஜி உங்களுக்கு உதவும் என்ற நோக்கில் இங்கே வெட்டி ஒட்டியிருக்கேன்.

நன்றி : நாணயவிகடன்
பதிப்பு : மார்ச் 2007
 
மிக்க நன்றி கேசுவர். மிகவும் அழகாக தெளிவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள்.
 
வர, வர நம் மன்றம் கேட்டதை கொடுக்கும் "அட்சய பாத்திரம்" ஆகி வருகிறது. இதற்கு மணிமேகலைகளாக இருக்கும் மன்ற உறுப்பினர்கள் தான் காரணம் என்பதை மறுக்க இயலாது.

இது வெட்டி ஒட்டப்பட்ட பகுதி என்றாலும் கருத்துள்ள ஒரு விஷயத்தை, சரியான நேரத்தில் கொடுத்த கேஷ்வர் அவர்களுக்கு நன்றிகள்..!!
 
எதோ நம்மால் ஆன உதவி இதயம்,,,நான் பங்குச்சந்தையைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டு ....அப்ப அப்ப கிடைக்கும் தகவல்களை சேர்த்துக்கொண்டுயிருக்கிறேன்...இன்னமும் தெரிந்தபாடுயில்லை , பங்குச்சந்தையையில் சேர்த்தபாடுயில்லை !!!!:)
 
கேசுவர்ஜி

நன்றாகவே வெட்டி ஒட்டி இருக்கிறீர்கள். நன்றி.

கடந்த ஓராண்டாக ரிஸர்வ் வங்கி, நாட்டுக்குள்ளே வரும் அந்நியச் செலாவணியை -- டாலரை -- வாங்கிக் குவித்து வருகிறது.

தற்போதைய இருப்பு சுமார் $208 பில்லியன்.

டாலரை வாங்க வாங்க, ரூபாய் புழக்கம் அதிகரிக்கிறது. விலைவாசி ஏறுகிறது. விலைவாசியைக் குறைக்க தாங்கள் எழுதியது போல் வட்டி விகிதத்தை, CRR, Reporate, இத்யாதிகளை அதிகமாக்குகிறது. அப்படியும் விலைவாசி குறைந்தபாடில்லை.

கவனித்திருக்கலாம்... இரண்டு மாதங்களாக ரூபாய் மதிப்பு டாலருக்கிணங்க அதிகரித்திருக்கிறது. $1 = ரூ.45 லிருந்து, $1 = ரூ. 40க்கு வந்துவிட்டது.

அதாவது டாலர் வாங்குவதை சற்றே நிறுத்தியுள்ளது.

இறக்குமதியாகும் பொருள்களின் விலை இறங்குகிறது. அதை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஏனைய பொருள்களின் விலை குறையத் துவங்கியுள்ளது.

இதனால்தான் மார்ச் '07 கடைசி வாரத்தில் 6.46%-ஆக இருந்த விலைவாசி உயர்வு, கடந்த வாரம் 5%-க்குக் குறைவாக ஆகியுள்ளது.

இன்னும், பருவ மழை ஒழுங்காகப் பெய்தால் விலைவாசி மேலும் குறைய வாய்ப்புண்டு.

===கரிகாலன்
 
நல்ல விளக்கம் கரிகாலன்.இந்த இந்திய ரூபாய் மதிப்புயர்வினால் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் எங்களைப்போல உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.இருந்தாலும் ஒரு சமாதானம்.நம் நாட்டின் பண மதிப்பு உயர்கிறதே என்று.
 
நன்றி கரிகாலன், பருவமழை வரவேற்போம், நமது பொருளாதாரம் மின்னட்டும்...நான் இதில் கத்துக்குட்டி தான் ,
------
கடந்த ஓராண்டாக ரிஸர்வ் வங்கி, நாட்டுக்குள்ளே வரும் அந்நியச் செலாவணியை -- டாலரை -- வாங்கிக் குவித்து வருகிறது.

தற்போதைய இருப்பு சுமார் $208 பில்லியன்.
-----
இறக்குமது/ஏற்றுமதி டாலரில் தான் குறிப்பிடபடுக்கிறது என்று அறிவேன்,
ஆகையால் இதற்கும் நாம் கையிருப்பு டாலர்க்கும் என்ன சம்பந்தம் அண்ணா ?
 
கேசுவர்ஜி

டாலர் வரத்து அதிகரிக்க அதிகரிக்க ரூபாய் புழக்கம் அதிகரிக்கிறது.

நமது ஏற்றுமதிகள் அதிகரிக்கின்றன.

தொழில் பெருகுகிறது. வணிகம் பெருகுகிறது. மேலும் மேலும் ஆட்கள் வேலைக்கு அமர்த்தப் படுகிறார்கள். தேவைகள் அதிகரிக்கின்றன. தேவைகளைப் பூர்த்தி செய்யாவிடில், விலை அதிகரிக்கிறது.

ரிஸர்வ் வங்கி டாலர்கள் வாங்குவதை சற்றே நிறுத்தினால் என்ன நடக்கிறது என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

ஏற்றுமதியாளர்களுக்கு வருத்தம்தான். வெளியூரிலிருந்து இந்தியாவுக்கு தங்களது சம்பாத்தியத்தை அனுப்புவோரும் வருத்தமடைகின்றனர்.

தாங்கள் கேட்ட கேள்வி இருப்புக்கும் விலைவாசிக்கும் என்ன சம்பந்தம்?

1990/91-ல் கையிருப்பு ஒரு பில்லியன் கூடக் கிடையாது. அடகுக் கடையில் வைப்பதுபோல், நமது நாட்டுத் தங்கத்தை விமானத்தில் ஏற்றி Bank of England-இடம் அடகு வைத்து அந்நியச்செலாவணி பெற்றோம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு இல்லாத நிலை.

இன்று கையில் 208 பில்லியன் என்றால், காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம் இல்லையா!!

===கரிகாலன்
 
விளக்கங்களை இன்னும் பரிமாறிக்கொள்ளுங்கள் நண்பர்களே...
 
கரிகாலன் அண்ணே , சுப்பரான விளக்கம் ,,,தெளிவு பிறக்குது ...சரியா சொன்னிங்க,
பொதுமான கையிருப்பு நமது மனநிலையை தெம்பா வச்சியிருக்கும் அதன் முலம் நம்பிக்கை பெருக்கும் பல துறைகளில் காலை நுழைக்க வழி வகுக்கும்...
 
கரிகாலன் ஒவ்வொரு விஷயத்தையும் இத்தனை தெளிவாகவும் அதோடு மிக எளிமையாகவும் விளக்கியுள்ளீர்கள்.மிக்க நன்றி.
 
பொதுமான கையிருப்பு இருந்தால் அது வளர்ச்சிக்கு வித்துடும்...
ஒன்னுமே இல்லைனா நாம் வளர்ச்சியை யோச்சிக்கவே முடியாது அன்றாட சாப்பாடை பற்றி தான் நமது சிந்தனையிருக்கும்.
நமக்கிட்ட 208 பில்லியன் டாலர் இருக்கா கரிகாலன் அண்ணே ...
அப்படினா இப்போ இந்தியா பொருளாதாரத்தில் உண்மையாகவே மின்ன ஆரம்பிச்சிருக்கா அண்ணே ?
 
பணவீக்கதை பற்றி நல்ல தகவல் கிடைத்தது

எனக்கு காமர்ஸ் பத்தி அவ்வளவா தெரியாது,
ஆனா டி.ஏ விகிதத்தை அதிகரிக்க அரசு அதிகாரிகள் பனவீக்கத்தை கூட்டி காட்டுவார்கள் என்று கேள்விபட்டிருகிறேன்
அது உன்மையா
 
லொல்லுவாத்தியார்ஜி!

அவ்வளவு சுலபம் அல்ல.

Cost of Living Index-ல் இன்ன இன்ன சமாசாரங்களுடைய விலைகளைப் பட்டியலிடவேண்டும் என்று தீர்மானிக்க ஒரு நிபுணர்கள் குழு இருக்கிறது. அரசைச் சேராதவர்களும் இக்குழுவில் இருக்கிறார்கள்.

இவர்கள் தீர்மானித்த பொருள்களின் விலை ஏற்றம்/குறைவு ஒவ்வொரு நாளும் கணக்கிடப்படுகிறது. வாரமுடிவில் எவ்வளவு வீக்கம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.

===கரிகாலன்
 
கேசுவர்ஜி

1990/91-ல் கையிருப்பு ஒரு பில்லியன் கூடக் கிடையாது. அடகுக் கடையில் வைப்பதுபோல், நமது நாட்டுத் தங்கத்தை விமானத்தில் ஏற்றி Bank of England-இடம் அடகு வைத்து அந்நியச்செலாவணி பெற்றோம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு இல்லாத நிலை.

===கரிகாலன்

விளக்கங்கள் அருமை..
சரிண்ணே..நம்ம கிட்ட பணம் இல்லன்னா..அரசே அச்சடிச்சிக்கலாமே..எதுக்காக நகைய அடகு வச்சு கடன் வாங்கணும்..?
 
விளக்கங்கள் அருமை..
சரிண்ணே..நம்ம கிட்ட பணம் இல்லன்னா..அரசே அச்சடிச்சிக்கலாமே..எதுக்காக நகைய அடகு வச்சு கடன் வாங்கணும்..?
ப்ரேம்... உங்க கேள்விக்கான பதில் இந்த தொடுப்புல இருக்குன்னு தோணுது.. கொஞ்சம் பாருங்க..!!
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=392561&postcount=180
 
Back
Top