உன்னிடம்
முகர்ந்து
முகம் திருப்பிய காற்றைத்
தன்னுள்வாங்கி,
உன் இதய வழி,
உன்னுள்ளே வந்தான்
ஒரு மனிதன்..,
சக மனிதக் கழிவையும்
சுத்திகரிக்க...
இழிந்தவன்..,
எனத் தள்ளி வைத்துக்
கரித்துக் கொட்டினர்
சக மனிதர்...
சோறு கொடுத்த பேறு,
சாக்கடை உனக்கு...
சேறு பூசிக்கொள்கின்றது,
மனிதம்...