உபுண்டு 9.10 இல் இணைய இணைப்பு எப்படி

sekar98425

New member
நண்பர்களுக்கு வணக்கம் நான் புதிதாக உபுண்டு9.10 நிறுவி உள்ளேன் அதில்b.s.n.l பிராடுபேண்ட் இணைப்பு எவ்வாறு ஏற்படுத்துவது என்று தெரியவில்லை .தெரிந்த நண்பர்கள் முழுவதுமான விளக்கம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
 
நீங்க static IP பயன்படுத்துறீங்களா Dynamic IP யா ?


Modem bsnl கொடுத்ததா ? எஈங்க வாங்குனதா ?

அவங்க தந்த மோடம், ஐபி டைனமிக் எனில்.. ஒன்றும் செய்ய தேவையில்லை.. நேரடியா கேபிளை செருகி பயன்படுத்த வேண்டியதுதான்..
 
Last edited:
உங்கள் BSNL மோடம் விண்டோஸில் தானகவே இயங்குகிறதா?. இல்லை டெஸ்க்டாப்பில் நீங்கள் இனையம் உபயோகப்படுத்தும் முன் இனையத்தை கணக்ட் செய்ய ஏதாவது சார்கட்(PPPOE யூசர் நேம் பாஸ்வேர்டு) உபயோகிக்கிறீர்களா?.

அப்படி என்றால், லினக்ஸில் நீங்கள் தானகவே இனைய இனைப்பு பெற முடியாது, பாரதி அண்ணா சொன்ன மாதிரி இண்டர்நெட்டிற்கான கேபிள் மாட்டியபின் டெர்மினலில் சென்று sudo pppoeconf என்று டைப் செய்து பின் வருவனவற்றில் கேட்கும் தகவல் தாருங்கள்.

எதற்கும் இனைய இனைப்பு வழங்குநர்களிடம் முறைப்பாடு செய்து அவர்கள் இலவச ஆலோசனை பெறுங்கள். இந்த மாதிரி நுகர்வோர் சேவைக்கும் சேர்த்து தான் அவர்கள் நம்மிடம் பணம் வாங்குகிறார்கள் என்பதை மறவாதீர்கள்.
 
அன்பு நண்பரே,
பொதுவாக இணைய இணைப்பு தானாகவே ஏற்படுத்தப்பட்டு விடும். உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை விளக்கமாக கூற இயலுமா..?
அல்லது கீழ்க்கண்ட சுட்டியில் கார்மிக் 9.10 என்பதை தேர்வு செய்து, பதிவிறக்கி நிறுவுங்கள்.
http://packages.ubuntu.com/
உங்கள் பிரச்சினை தீர்ந்ததா என அறியத்தாருங்கள்.
 
Back
Top