உபுண்டு 9.10 - பாதுகாப்பான கோப்புறைகளை உருவாக்க

அன்பு நண்பர்களே,

லினக்ஸில் பயனாளர்கள் ஒவ்வொரும் தனித்தனியே நுழைய இயலும். ஒருவேளை ஒரே பெயரில் பலர் பயன்படுத்த வேண்டியதிருக்கும் நிலையில் தனிப்பட்ட கோப்புகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள தனிப்பட்ட கோப்புறைகளை (ஃபோல்டர்) உருவாக்கிக் கொள்ள முடியும். இதை விண்ஜிப் போன்றவைகளினாலும் செய்ய முடியும் என்றாலும், வெகு எளிதாக இந்த வசதியை நாம் உபுண்டுவில் ஏற்படுத்திக்கொள்ள முடியும். இந்த கோப்புறைகளை கடவுச்சொல் கொடுத்தும் பாதுகாக்கலாம்.

இதற்கு Applications - Ubuntu Software Center - சென்று Cryptkeeper என்பதை தேர்ந்தெடுத்து நிறுவ வேண்டும் (இணைய இணைப்பு அவசியம் என்பதை நினைவில் கொள்க.)

screenshot_007.png


பின்னர் applications -- system tools -- cryptkeeper என்பதை தேர்ந்தெடுக்க்க வேண்டும்.

மேலிருக்கும் கருவிப்பட்டையில் இரண்டு சாவிகள் அடங்கிய ஒரு ஐகான் தோன்றும்.
screenshot_008.png


அதை சொடுக்கினால் வரும் ஜன்னலில் புதிய கோப்புறையை உண்டாக்க வேண்டும்.

Name என்ற இடத்தில் வேண்டிய பெயரைக் கொடுக்கவும்.
பெயரைக் கொடுத்த பின்னர் Forward என்ற பொத்தானை அழுத்தவும்.

screenshot_002.png


வரும் திரையில் புதிய கடவுச்சொல்லை இருமுறை கொடுத்து பின்னர் Forward பொத்தானை அழுத்துங்கள். புதிய கோப்புறை உண்டாகி விடும்.

நாம் உண்டாக்கிய இந்த கோப்புறை /home/username என்பதிற்குள் இருக்கும்.

இந்த கோப்புறைக்குள் நாம் வேண்டிய கோப்புகளை வைத்து பாதுகாப்பாக பூட்டி விடலாம்! இந்த கோப்பினை மறைக்க, மீண்டும் பார்க்க வேண்டுமெனில் கருவிப்பட்டையில் இருக்கும் சாவி ஐகானை சொடுக்கும் போது வரும் தேர்வில் தேர்ந்தெடுக்கலாம்.

உண்டாக்கிய கோப்புறையை திறக்க முற்பட்டால் கடவுச்சொல்லைத் தர வேண்டியதிருக்கும்.
 
நன்றி பாரதி அண்ணா.. கணினியின் பாதுகாப்பை இன்னும் எப்படி அதிகமாக்குவது என்பதைப் பற்றி அண்ணனோடு சேர்ந்து நானும் தொடர்கிறேன்.. நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் எல்லாம் இருக்கு.. நேரம் கிடைக்கும் போது எழுதுறேன்..
 
கண்டிப்பாக எழுதுங்கள் ஆதன். கற்றுக்கொள்ள நானிருக்கிறேன்.
 
Back
Top