இராசகுமாரன்
Administrator
இந்தப் பகுதியின் நோக்கம்/வரைமுறைகள்
நண்பர்களே..!
'கவிஞன்' என்ற சொல்லைத் தாங்க பல தமிழ் மன்ற உறுப்பினர்கள் கூச்சப் படக் கூடும். தயங்காதே நண்பர்களே!! உங்களது கவிதைகள் மசாலா பத்திரிக்கைகளில் வரும் கவிதைகளுக்கு சிறிது சளைத்ததல்ல. அவற்றின் தரம் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ் மன்றத் தோழர்கள், கவிதை உலகில் சிறகடித்து பறக்கும் காலம் வந்து விட்டது. அதனால், கவிதைக்கு தனிப் பகுதி ஒதுக்கியதுடன், அதன் படைப்பாளிகளுக்கும் அவர்களுடைய படைப்புகளை தொகுத்து வழங்க, ஒரு தனியிடம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இந்த பகுதியின் நோக்கம்;
1) நமது மன்றத்து கவிஞர்களுக்கு, அவர்களுடைய கவிதைத் தொகுப்புகளை ஒரே திரியில் சுட்டிகளாக கோர்த்து வைக்க வசதியளித்தல்.
2) அதன் மூலம் புதியவர்கள், கவிதைகளை தேட அதிக நேரம் செலவிடவேண்டாம்.
3) இங்குள்ள கவிஞர்களைப் பற்றி புதியவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தல்.
3) கடைசியாக, அவர்கள் என்ன மாதிரியான படைப்புகளை ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதாகும்.
வரைமுறைகள்:
1) தமிழ் மன்றத்தில் ஒரு கவிதை/பாடல் படைத்திருந்தாலும், இங்கே உங்கள் பெயரில் ஒரு தனி திரி துவங்க தகுதியுடையவராகிறீர்கள். ஒரு கவிஞருக்கு ஒரு திரி மட்டும் போதும். அதற்கு மேல் துவங்க வேண்டாம்.
2) உங்கள் கவிதைத் தொகுப்பு சுட்டிகளை கொடுக்குமுன், உங்களைப் பற்றியும், உங்கள் விருப்பம், ஆர்வம் பற்றியும் சிறிது கூறுங்களேன்.
3) நீங்கள் படைத்த கவிதைகளை சுட்டிகளுடன் கொடுக்கவும். (சுட்டிகளை எவ்வாறு இணைப்பது என்று தெரியாதவர்கள், நிர்வாக உதவியாளர்களின் உதவியை நாடலாம்)
4) நீங்கள் படைத்த கவிதைகள் மட்டுமல்லாது, நீங்கள் இங்கே ரசித்த, மற்றும் உங்கள் சிந்தனையை தூண்டிய படைப்புகளையும் பட்டியலிட்டு கொடுக்கலாம்.
5) கடைசியாக, நீங்கள் படித்த சிறந்த புத்தகங்கள், மற்றும் ஆசிரியர்களையும் நமது மன்றத்து உறுப்பினர்களுக்கு அறிமுகப் படுத்தி விட்டுச் செல்லுங்கள். அது கவிதை தொகுப்பாகவும் இருக்கலாம், வேறு வகை புத்தகங்களாகவும் இருக்கலாம்.
6) உங்கள் புதிய படைப்புகளை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை சுட்டிகளை சேர்க்கவும் அல்லது மேம்படுத்தவும்.
வெகு நாட்களாக மன்றம் வராமல் இருக்கும் பழைய உறுப்பினர்களில் தொகுப்பை, நிர்வாக உதவியாளர்கள் கோர்த்து வழங்குவார்கள்.
உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..

Last edited: