வீடியோ - விதிமுறைகள்.

அன்பு நண்பர்களே,

மன்றத்தை நாம் சில விதிமுறைகளை பின்பற்றி சீராக நடத்தி வருகிறமாதிரி, மன்றத்தின் புதிய வசதிகளை சில விதிமுறைகளை கொண்டு பயன்படுத்துவோம்.

புதிதாக இணைக்கப்பட்ட வசதிகள்

வீடியோ & பொம்மைகள் (ஸ்மைலீஸ்)

-----------------------------முன்னோட்டத்திற்கு இங்கே செல்லவும்


விதிமுறைகள்

1] கண்டிப்பாக வீடியோவை கையெழுத்தாக உபயோகிக்கக்கூடாது. இது நம் தளத்தின் வேகத்தை குறைக்கும்.

2] ஆபாசமான, மற்றவரை இழிவுபடுத்தும், சாதி மதங்கள் சம்பந்தப்பட்ட, சட்டத்திற்கு புறம்பாக இருக்கும் எந்த வீடியோவையும் இணைக்கக்கூடாது.

3] வீடியோவை பற்றிய குறிப்பு கண்டிப்பாக இருக்கவேண்டும்.

4] காப்பிரைட் உள்ள வீடியோக்களை அப்லோட் செய்து இங்கே இணைக்கவேண்டாம்.

5] சொந்த வீடியோவாக இருப்பின் குறிப்புகளை விளக்கமாக கொடுக்கலாம்.

6] நீண்டதொரு வீடியோவை கொடுக்கும் போது அதன் கால அளவை குறிப்பிடவும்.

7] வீடியோவை இணைக்கும் போது அதன் முகவரியை சுட்டியாக (உ.தா இப்படி) கொடுக்கவும். வீடியோ பிடித்திருந்தால் மன்றத்தினர் அந்த தளத்திற்கே சென்று பதிவிறக்கம் செய்ய ஏதுவாக இருக்கும்

8] ஒரே பதிவில் அதிக ஸ்மைலீஸ் கொண்டு பதியாதீர்கள். வெறும் ஸ்மைலீஸ் கொண்டு பதில் சொல்வதை கூடுமானவரை தவிர்க்கவும்

9] பதிவிற்கு தகுந்த ஸ்மைலீஸ் பயன்படுத்தவும். குறிப்புக்கு இங்கே செல்லவும்..

10] உங்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த தேவைகளை நன்றாக பயன்படுத்தி மகிழுங்கள். கூடுமானவரை தமிழ் வீடியோவை பயன்படுத்துங்கள்.


உபயோகிக்கும் முறை


மேலே இருக்கும் 'M' பட்டனை சொடுக்கினால் என்று வரும். அதன் இடையில் நீங்கள் விரும்பிய வீடியோவின் இணையப்பக்கத்தை கொடுக்கவேண்டும்.

வீடியோ வசதியை அவரவர் இஷ்டம் போல் உபயோகிக்க வேண்டுமென்றால், அதற்கான முறை பின்வருமாறு: (Suitable for advanced users)

[media.="width,height,autostart,loop"]URL ADDRESS[/media]

Width = அகலத்தில் எவ்வளவு பெரியதாக தெரியவேண்டும். (எதுவும் கொடுக்காவிடில் தற்போது உள்ள Default அகலம் 320 எடுத்துக் கொள்ளப்படும்)

Height = அகலத்தை குறிப்பிட்டால் உயரத்தையும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். (கொடுக்காவிடில் Default உயரம் 240 எடுத்துக் கொள்ளப்படும்)

உதாரணம்: [media.="640,480"]URL ADDRESS[/media]

AutoStart = வீடியோ தானாக துவங்க வேண்டுமா, அல்லது பயனாளர்கள் சொடுக்கிய பின் துவக்க வேண்டுமா என்று பதிப்பவர்களே முடிவு செய்யலாம்.

தானாக துவங்கு என்பதற்கு 1, true, yes எது வேண்டுமென்றாலும் கொடுக்கலாம். துவங்காதே என்பதற்கு: 0, false, no என்பதில் ஏதாவது ஒன்று கொடுக்கலாம்.

உதாரணம்1: [media.="640,480,0"] URL ADDRESS [/.MEDIA]
உதாரணம்2: [media.="640,480,true"] URL ADDRESS [/.MEDIA]

Loop = ஒருமுறை மட்டும் ஓடினால் போதுமா? அல்லது தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கவேண்டுமென்றால் எத்தனை முறை தொடர்ந்து ஓட வேண்டும் என்பதை நம்பர் கொடுத்து நிர்ணயிக்கலாம்.

உதாரணம்1: [media.="640,480,0,3"]URL ADDRESS[/media]
உதாரணம்2: [media.="640,480,true,1"]URL ADDRESS[/media]


தொடர்பு வலைத்தளங்கள்


வீடியோ இணைப்பு வசதி கீழ்க்கண்ட தளங்களுக்கு மட்டுமே:

CurrentTV (http://www.current.tv/)
DailyMotion (http://www.dailymotion.com/)
FreeVideoBlog (http://video.freevideoblog.com/)
Google (http://video.google.com/)
iFilm (http://www.ifilm.com/)
MetaCafe (http://www.metacafe.com/)
MyVideoDe (http://www.myvideo.de/)
Sharkle (http://www.sharkle.com/)
Vimeo (http://www.vimeo.com/)
vSocial (http://www.vsocial.com/)
Youtube (http://www.youtube.com/)

நன்றி. வணக்கம்.

.
 
Last edited by a moderator:
அனைவருக்கும் அவசியம் தேவையான வழிமுறைகள்.. நன்றி மன்மதன்
 
அனைவருக்கும் ஏற்ற எளிதான விதிமுறைகள்.
அனைவரும் சரியாக உபயோகித்தால்.... எல்லாருக்கும் இன்பமே..
 
நன்றி மன்மதன்

இவை அனைத்தும் மன்றத்தின் வளர்ச்சிக்கும் மற்றும் பயனைடயபோகும் சக மக்களுக்கு மிகவும் அவசியமான விதிமுறைகளே.

அனைவரும் சரியாக உபயோகித்து. நல்ல பெயரை அடைவோமாக.

இன்பமே சூழ்க.
 
ஆதவா;182875 said:
ஒரு தடவைக்கு இரண்டு தடவப்பா!! அதக் கவனிக்கலயா? :082502now_prv:
அட ஆமாய்யா!!
எதிரொலி விளைவோ??? :icon_blush: :lachen001: :lachen001:
 
அட ஆமாய்யா!!
எதிரொலி விளைவோ??? :icon_blush: :lachen001: :lachen001:

இருக்கலாம்... ஏற்கனவே அவரு ஓடறார்ல... அதனால அழுத்தி ரெண்டு தடவ சொல்றாரு....:lachen001:
 
ஆதவா;182887 said:
இருக்கலாம்... ஏற்கனவே அவரு ஓடறார்ல... அதனால அழுத்தி ரெண்டு தடவ சொல்றாரு....:lachen001:
10 ஆயிரங்கள் தொட அந்த ஓட்டம்!!!:lachen001:
 
நண்பர்கள் வீடியோ திரி துவங்கும் போது தலைப்பில் '(V)' என்பதை சேர்த்துக்கொண்டு ஆரம்பியுங்கள்.

உ.தா : இந்த திரி
 
உங்கள் நெறிப்படுத்தலில் வெற்றிகரமாக இணைத்துவிட்டேன்.

ஆனாலும்,

இணைப்பு வசதியை
www.hi5.com
இற்கும் விரிவாக்க முடியுமா..?

அல்லாவிடில் hi5இலுள்ள ஒளிப்பதிவொன்றை மற்றவற்றைப்போல் இணைக்க முடியாதா?

இணைத்தது, இப்படி வருகின்றது...
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=211737&postcount=24

என்ன செய்யவேண்டும்? விளக்குங்களேன்.
நன்றி...
 
Last edited:
பயனுள்ள தகவல்களை இரத்தினச் சுருக்கமாக ஒரே இடத்தில் தந்திருப்பது மிகவும் பிரயோசனமானதே. தேவைப்படும்போது வந்து பார்த்து தெளிவுடன் செய்ய வழிகோலும்.

நன்றி
 
ஆனால் எனது கேள்விக்கு தீர்வு யாருமே தரவில்லையே...
 
Last edited:
Back
Top