எந்த மின்னஞ்சல் சேவை சிறந்தது?

எந்த மின்னஞ்சல் சேவை சிறந்தது?

  • யாஹூ

    Votes: 16 25.0%
  • ஹாட்மெயில்

    Votes: 5 7.8%
  • ஜிமெயில்

    Votes: 40 62.5%
  • ரீடிஃப் மெயில்

    Votes: 1 1.6%
  • சிஃபி மெயில்

    Votes: 0 0.0%
  • ஏ ஓ எல் மெயில்

    Votes: 0 0.0%
  • நெட்ஸ்கேப்

    Votes: 0 0.0%
  • கவாஃப்

    Votes: 0 0.0%
  • பிற இலவச சேவை

    Votes: 1 1.6%
  • பிற கட்டண சேவை

    Votes: 1 1.6%

  • Total voters
    64

leomohan

New member
எந்த மின்னஞ்சல் சேவை சிறந்தது?

நாம் பல மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்துகிறோம். இதில் எந்த மின்னஞ்சல் சேவை சிறந்தது, வசதியானது, வேகமாக தரவிறக்கம் ஆகக்கூடியது. மொத்ததில் உங்களுக்கு பிடித்த சேவை எது? வாருங்கள் வாக்களித்து விவாதிக்கலாம்.
 
google சிறந்தது.... காரணம் அது 2 GB.. நிறைய வசதிகள் புதுப்பிக்கபட்டுக்கொண்டே இருக்கிறது..
 
முன்பு வசதி குறைவாக இருந்தாலும் அதிக இடத்துக்காக (2 ஜீ.பி) ஜீ,மெயிலை பிடித்துப்போட்டேன்..
ஆனால் இப்போது வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு இடமும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது...(2.7 ஜீ.பிக்கு மேல்)
சந்தேகமில்லாமல் கூகுலின் ஜீ மெயில் தான் சிறந்தது
 
ஜீமெயில் நன்றாக இருக்கிறது. நான் உபயோகித்ததில் பிடித்தது ஜிமெயில்.
 
ஜிமெயில் வந்த பிறகு ஹாட்மெயிலும், யாஹீவும் காணாமல் போய்விட்டன. இப்பொழுது அனைவரும் உபயோகிப்பது ஜிமெயில் என்றே நினைக்கிறேன். காரணம் அதிகமான கோப்புகளை ஜிமெயில் மூலம் அனுப்ப வசதியாக இருப்பதால் என்று நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்
 
திறக்க ரொம்ப நேரம் ஆவதால் எனக்கென்னவே G-மெயில் பிடிப்பதில்லை. யாஹ?வின் பழைய பிரதிதான் சிறந்ததாக எண்ணுகிறேன்
 
யாமும் யாஹூ தான் மற்றதைவிட இது எனக்கு பழகி போச்சுங்க...அதான்
 
எவ்வளவு புதிய சேவைகள் வந்தாலும், நான் பல வருடங்களாக உபயோகித்து வரும் ஹாட்மெயில் தான் எனக்கு சிறந்ததாக படுகிறது.
 
என்னப்பா இது , ஜிமெயில் ஓவியா மாதிரி ஓட்டு வாங்கி குவிச்சிக்கிட்டிருக்கு. மத்ததை கண்டுக்கவே மாட்டேங்குறாங்களே :D
 
என்னப்பா இது , ஜிமெயில் ஓவியா மாதிரி ஓட்டு வாங்கி குவிச்சிக்கிட்டிருக்கு. மத்ததை கண்டுக்கவே மாட்டேங்குறாங்களே :D

மன்மதன் சார். ஓவியாவும் சிறந்தவர். அவரைப்போல ஜி.மெயிலும் சிறந்தது. சிறந்தவர்கள் ஓட்டு குறைவாக வாங்க இது என்ன வழமையான அரசியம் ஓட்டெடுப்பா? நம்ம மன்றத்து ஓட்டெடுப்பு.
 
ப்ராட்பாண்ட் இருந்தால் ஜீமெயில் இயங்குகிறது. Datacard-ல் லேசில் இறக்க முடிவதில்லை.

பயன்படுத்துவது எதற்காக? உடனடியாகப் பார்க்க வேண்டும்; செய்தி அனுப்ப வேண்டும். இவைகள் Datacard-ல் முடிகிறது -- யாஹ?, ஹாட்மெயில், ரீடி?ப்மெயில், இன்னபிற.

எனது வாக்கு ஜீமெயிலுக்கு இல்லை.

===கரிகாலன்
 
நான் ரொம்ப நாள் யாஹூ விசுவாசி
ஆனாலும் ஜிமெயிலுக்குக் குத்திட்டேன்.
 
மன்மதன்;180666 said:
என்னப்பா இது , ஜிமெயில் ஓவியா மாதிரி ஓட்டு வாங்கி குவிச்சிக்கிட்டிருக்கு. மத்ததை கண்டுக்கவே மாட்டேங்குறாங்களே :D

குவலிட்டி மாமு :D :D

மன்மதன் சார். ஓவியாவும் சிறந்தவர். அவரைப்போல ஜி.மெயிலும் சிறந்தது. சிறந்தவர்கள் ஓட்டு குறைவாக வாங்க இது என்ன வழமையான அரசியம் ஓட்டெடுப்பா? நம்ம மன்றத்து ஓட்டெடுப்பு.

அப்பாடி ஜில்லுனு ஒரு அய்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். ரொம்ப நன்றிங்கோய்.......:D

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நண்பரே. ஏதோ அனைவருடன் ஒற்று போகிறேன். சுயனலவாதியல்ல. நான் சமாதான விரும்பி. :) அன்பு பாசத்திற்க்கு அடிமை. :)

நமது மன்றதின் மேல் தங்கள் கொண்டுல்ல மதிப்புக்கு மிக்க நன்றி. நல்லதே செய்து நல்லதை காப்போம். தமிழ் தொண்டு பெருக பாடு படுவோம். :)
 
Last edited:
நான் ரொம்ப நாள் யாஹூ விசுவாசி
ஆனாலும் ஜிமெயிலுக்குக் குத்திட்டேன்.

இங்கேயும் அதேதான்.....இல்ல இல்ல என் ரூட்ட காபி அடிச்சேலா???

இப்ப காப்பி எப்படி போடறதுனு ஒரு பதிவு வறப்போகுதமே...:D

யாஹுவும் அருமைதான்.

ஜீமெய்ல் அதிக வசதி. என் நல்ல ஓட்டு ஜிமெய்லுக்கே
 
Last edited:
நாம் பல மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்துகிறோம். இதில் எந்த மின்னஞ்சல் சேவை சிறந்தது, வசதியானது, வேகமாக தரவிறக்கம் ஆகக்கூடியது. மொத்ததில் உங்களுக்கு பிடித்த சேவை எது? வாருங்கள் வாக்களித்து விவாதிக்கலாம்.

அப்படியே உங்க பதிவையும் போட்ட சந்தோஷப் படுவோம்.

இந்த பொண்ணு என்னமோ கங்கனம் கட்டிகிட்டு நம்மளையே வலச்சு வலச்சு கேக்குதேனு அழாதீங்க.

உங்க ஆதங்கதயும் கேக்கனும்'னு ஒரு ஆசைதான். அதான்.....

சிரித்து கொண்டே ஒரு பதிவ போட்டுட்டுப் போங்க சார். :)
 
எனக்கு பிடித்தது யாகூ காரணம் பயன் படுத்த எளது மற்றும் பைல் தரைவிறக்க வேகம் கூட ஆனாலும் தமிழ் பயன் படுத்த சிறந்தது ஜிமெயில் ஆகவே எனது வேட்டு ஜிமெயிலுக்கே
 
ஏற்கனவே ஜிமயிலுக்கு ஓட்டு போட்டுவிட்டேன்.. இதுநாள்வரை யாஹீ மட்டுமே உபயோகித்து வந்தேன். யாஹூவில் எனக்கு கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட முகவரிகள் இருக்கின்றன.. அதிர்ச்சியாக இருக்கிறதா? சும்மா சாதனைக்கு.. என் முகவரி shanrah2002 எனக்கு ஒரு ஆசை.. shanrah1900 லிருந்து shanrah2000 வரைக்கும் கணக்கு ஏற்படுத்தவேண்டுமென்று.. எல்லாம் முடிந்துவிட்டது.இதுபோக தளங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு கணக்கு ஏற்படுத்தினேன். ஏற்படுத்தியதோடு சரி/ அதன்பிந்தான் தெரிந்தது. உபயோகத்தில் இல்லையென்றால் எடுத்துவிடுவார்கள் என்று/
ஆனாலும் முதன்முதலாக ஏற்படுத்திய கணக்க்கைத் தான் இன்னமும் உபயோகிக்கிறேன்.

யாஹூ விலிருந்து ஜிமயிலுக்கு மாற அழைப்பிதழ்கள் நிறைய வந்தன. ஆனால் நீண்ட நாட்கள் மறுத்துவிட்டேன். எல்லாவற்றிர்கும் யாஹூவே கொடுத்து இருந்தமையாலும் யாஹூ சர்வீஸ் பல (இசை, குழுமம் போன்றவை) உபயோகித்துக்கொண்டிருந்தமையாலும் மறுத்துவந்தாலும் போன வருடம்தான் உபயோகித்துப் பார்க்கலாம் என்ற எண்ணமே வந்தது.

உபயோகத்தில் என்னை பொறுத்தவரை யாஹூவை விட ஜிமயிலே சிறந்தது. இதற்கு பல காரணங்கள் உண்டு. எனக்கு மயில் விரித்ததும் உள்பெட்டி செய்திகள் உடனே படிக்கவேண்டுமென்ற ஆவல் இருக்கும். அதனை பூர்த்தி செய்கிறது ஜிமயில். உனிகோடு சப்போர்ட், நிறைய இடம், குறைவான விளம்பரங்கள். சீக்கிரமே திறந்திடும் நுட்பம். உடனடி அப்டேட், மயிலிலேயே அரட்டை வசதி., இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

நேற்றுகூட யாஹூ திறந்தால் நான்கைந்து பக்கங்கள் சென்று விளம்பரங்கள் படித்து பின் இன்பாக்ஸ் செல்ல வேண்டி இருக்கிறது.
யாஹூ மெல்ல அதன் சாம்ராஜ்யத்தை இழந்துவருகிறது. உடனே விழித்து எழுந்தால்தான் உண்டு.

ஒரு சின்ன குறிப்பு : ஜிமயில் பிராட்பேண்டுக்கு மட்டும் திறக்கும் என்று ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.... என் செல்ஃபோனில் மிக அருமையாக ஜிமயில் வேலைசெய்கிறது யாஹூவைவிட மிக மிக வேகமாக. செல் மூலம் கணிணி இணைத்தாலும் அங்கேயும் வேகம் காட்டுகிறது ஜிமயில்.. ஜிமயிலை இதுவரை பிராட்பேண்ட் 512, 256 மற்றும் ISDN 128 மற்றும் சாதாரண 64 kbps வேகங்களில் உபயோகித்திருக்கிறேன்... எல்லாவற்றிலும் வேகம்........... யாஹூவைவிட
 
ஓவியா;180914 said:
இங்கேயும் அதேதான்.....இல்ல இல்ல என் ரூட்ட காபி அடிச்சேலா???

இப்ப காப்பி எப்படி போடறதுனு ஒரு பதிவு வறப்போகுதமே...:D

யாஹுவும் அருமைதான்.

ஜீமெய்ல் அதிக வசதி. என் நல்ல ஓட்டு ஜிமெய்லுக்கே
காப்பி பதிவு போட உங்களுக்குச் சொல்லியா தரணும்???
நீங்க ஏன் இந்த முயற்சி எடுக்கக் கூடாது??? :D
 
Back
Top