சைவ வினா விடை

சிவபெருமான் படத்தையும் சிவலிங்கத்தையும் வழக்கம் போல் எல்லா சுவாமிகளைப் போல வைத்து வணங்கலாம்.

இராமேஸ்வரம் சென்று தரிசித்தால் சகல விதமான தோஷங்களும் நீங்கும். இராமரே தன்னுடைய தோஷம் நீங்க தரிசித்த ஸ்தலம் அல்லவா இது!!

LS47.jpg
 
நன்றி சிவா... ராமரே தன்னுடைய பிரம்ம ஹத்தி தோசம் நீங்கவும் மற்றும் போரிலே கொன்ற உயிர்களுக்க்காவும்தான் இங்கு வந்து தோசத்தை நீக்கிக்கொன்டார். நானும் சென்று வந்துள்ளேன் இத்தலத்திற்கு.. ஆனால் மீண்டும் செல்ல வேண்டும்.. ஏனென்றால் தெரிந்தே ஒரு பாவத்தை செய்துவிட்டேன்.

அதுசரி சிவா... ஏன் வினாயகரை 10 நாள் வைத்து வணங்கிவிட்டு கடலில் போட்டு விடுகிறார்கள்? (வினாயகர் சதுர்த்தி)

ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹா தேவா
இந்த பாடலுக்கு பொருள் கூறினாள் மிகவும் நன்மையாக இருக்கும்.
 
1. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்கள் எவை? அவை எங்கே இருக்கிறது?

1. கேதாரம் - இமயம்
2. சோமநாதம் - குஜராத்
3. மகாகாளேசம் - உஜ்ஜைனி
4. விசுவநாதம் - காசி
5. வைத்தியநாதம் - மகாராஷ்டிரம்
6. பீமநாதம் - மகாராஷ்டிரம்
7. நாகேஸ்வரம் - மகாராஷ்ரம்
8. ஓங்காரேஸ்வரம் - மத்தியப் பிரதேசம்
9. த்ரயம்பகம் - மகாராஷ்ரம்
10. குசுமேசம் - மகாராஷ்ரம்
11. மல்லிகார்சுனம் - ஸ்ரீசைலம்
12. இராமநாதம் - இராமேஸ்வரம்
 
3. பதினெட்டு புராணங்கள் எவை?

சிவபுராணங்கள் பத்து:
?*1. சைவ புராணம்
2. கந்த புராணம்
3. இலிங்கபுராணம்
4. கூர்ம புராணம்
5. வாமன புராணம்
6. வராக புராணம்
7. பெளஷிய புராணம்
8. மச்சபுராணம்
9. மார்க்கண்டேயபுராணம்
10. பிரமாண்ட புராணம்.


விஷ்ணு புராணங்கள் நான்கு:
1. நாரதீய புராணம்
2. பாகவத புராணம்
3. கருட புராணம்
4. வைணவ புராணம்


பிரம புராணங்கள் இரண்டு:
1. பிரம புராணம்
2. பதும புராணம்


சூரிய புராணம் ஒன்று:
1. கைவர்த்த புராணம்

அக்னி புராணம் ஒன்று:
1. ஆக்கினேய புராணம்.
 
அருமையான தகவல் களஞ்சியத்தை படைத்து வருகிறிர்கள்.... பாரட்டுகள்

வேத காலத்தில் ஏன் நம் கடவுள் சிவனை தெய்வமாக கொள்ளவில்லை?
ருத்ரன் என குறிப்பிடபடும் தேவரே, அதற்கு பிறகு வரும் காலங்களில் சிவனாக துதிக்கபடுகிறார் என கூறப்படுவது உண்மையா??
 
நன்றி நண்பரே! இந்த வினா விடையில் இதற்கான பதில் இருக்கிறது முழுதும் படியுங்களேன்...
 
4. பஞ்ச சபைகள் எவை?

1. இரத்தின சபை - திருவாலங்காடு
2. கனக சபை - சிதம்பரம்
3. ரஜ சபை - மதுரை
4. தாமிர சபை - திருநெல்வேலி
5. சித்திர சபை - திருக்குற்றாலம்.
 
"நாகேச்வரம்" என்பது மகாராஷ்டிரத்தில் இல்லை. குஜராத்தில் உள்ளது. கண்ணன் ஆண்ட துவாரகையிலிருந்து "ஓகா" என்னும் துறைமுகத்திற்குச் செல்லும் வழியில் சுமார் 20 கி. மீ தொலைவில் உள்ளது.
 
5. பஞ்ச பூத ஸ்தலங்கள் எவை?

1. பிருதிவி (நிலம்) - காஞ்சிபுரம் (திருஆரூர்)
2. அப்பு (நீர்) - திரு ஆனைக்கா
3. தேயு (தீ) - திருவண்ணாமலை
4 வாயு (வளி) - திருக்காளத்தி
5. ஆகாயம் (விசும்பு) - சிதம்பரம்.



அண்ணாமலை யரையும் ஆரூர்த் தியாகரையும்
கண்ணான காளத்தி நாதரையும் - ஒண்ணான
சிற்றம் பலவரையும் தென்னானைக் காவரையும்
நித்தம் பலகால் நினை.
 
6. முத்தி அளிக்கும் ஸ்தலங்கள் எவை?

1. பிறக்க முத்தி தருவது - திருஆரூர்
2. தரிசிக்க முத்தி தருவது - சிதம்பரம்
3. நினைக்க முத்தி தருவது - திருவண்ணாமலை
4. இறக்க முத்தி தருவது - காசி



தெரிசனம் செய்த்தில்லையிற் கமலையில்செனிக்க
மரணமாய்விடக் கங்கைசூழ் வாரணாசியிலே
அருணை மாநகர் நினைத்திட முத்தியஞ் செழுத்தும்
பிரணவத் தொடெப் பேர்களு முரைக்கிலும் பெறலாம்.
 
7. அட்ட வீரட்டத் தலங்கள் எவை?

1. திருக்கண்டியூர் - பிரமன் சிரம் கொய்தது
2. திருக்கோவலூர் - அந்தகாசுரனைச் சங்கரித்தது
3. திருஅதிகை - திரிபுரத்தை எரித்தது
4. திருப்பறியலூர் - தக்கன் சிரங்கொய்தது
5. திருவிற்குடி - சலந்தராசுரனைச் சங்கரித்தது
6. வழுவூர் - யானையை உரித்தது
7. திருக்குறுக்கை - காமனை எரித்தது
8. திருக்கடவூர் - யமனை உதைத்தது.


பூமன் சிரங்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை
மாமன்பறியல், சலந்தரன்விற் குடி, மா வழுவூர்
காமன் குறுக்கை, யமன் கடவூர், இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும், திங்களும் சூடிதன் சேவகமே.
 
7 a. தசகாரியம் என்றால் என்ன?

ஞான சாதனையில் முன்னேறும் ஆன்மாக்களிடத்து நிகழும் பத்து வகை செயல்பாடுகளாகும்.

தத்துவரூபம்

தத்துவ தரிசனம்

தத்துவ சுத்தி

ஆன்ம ரூபம்

ஆன்ம தரிசனம்

ஆன்ம சுத்தி

சிவ ரூபம்

சிவ தரிசனம்

சிவயோகம்

சிவபோகம்
 
8. நடராஜர் சிறப்பு அபிஷேகம் எப்போது நடத்தப்பட வேண்டும்?

1. சித்திரை - திருவோணம் - உச்சிக்காலம்
2. ஆனி - உத்திரம் - பிரதோஷ காலம் (திருவந்திக்காப்பு - முதற் காலம்)
3. ஆவணி - சுக்கிலபட்ச சதுர்த்தசி திதி - சாயரட்சை 2ம் காலம் சமகாலம்
4. புரட்டாசி - சுக்கிலபட்ச சதுர்த்தசி திதி - அர்த்த சாமம்
5. மார்கழி - திருவாதிரை - உஷக் காலம் (விடியல்)
6. மாசி - சுக்கிலபட்ச ச்துர்த்தசி - காலசந்தி.



சித்திரையில் ஓண முதல் சீரானி உத்திரமாம்
சத்ததனு ஆதிரையும் சார்வாகும் - பத்திமன்னும்
மாசியரி கன்னி மருவு சதுர்த்தசி
ஈசர்அபி டேகதின மாம்.
 
9. நால்வர் பெருமக்கள் தில்லைக் கோவிலுக்குள் எந்தக் கோபுரவாசல் வழியே சென்றனர்?

1. திருஞான சம்பந்தர் - தெற்கு
2. திருநாவுக்கரசர் - மேற்கு
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள் - வடக்கு
4. மாணிக்க வாசகர் - கிழக்கு.


15912-Gopuram-of-the-Temple-of-Chidambaram-0.jpg


lotus-sculpture_2054_54853978.jpg
 
வாத்திக்கனில் உள்ள மூதையத்தில்(museum) உள்ள சிவலிங்கம். இது வாத்திக்கனில் நடைபெற்ற அகழாய்வில் எடுக்கப்பட்டது.

post-23-1244499459_thumb.jpg
 
10. திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் இவர்களுக்கு முற்பட்ட நாயன்மார்கள் யார்?

கி.பி.300 - 600

1. அமர்நீதியார்

2. எறிபத்தர்

3. கண்ணப்பர்

4. அரிவாட்டாயர்

5. மூர்த்தியார்

6. சண்டேசுரர்

7. காரைக்காலம்மையார்

8. நமிநந்தியடிகள்

9. திருமூலர்

10. தண்டியடிகள்

11. சாக்கியர்

12. கூற்றுவர்

13. புகழ்ச்சோழர்

14. ஐயடிகள் காடவர்கோன்

15. கணம்புல்லர்

16. புகழ்த்துணையார்

17. கோச்செங்கட்சோழர்
 
11. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோர் காலத்து நாயன்மார்கள் யாவர்?

1. குங்குலியக்கலயர்

2. முருகர்

3. குலச்சிறையார்

4. அப்பூதியடிகள்

5. திருநீலநக்கர்

6. சிறுத்தொண்டர்

7. நின்றசீர் நெடுமாறர்

8. மங்கையர்க்கரசியார்

9. திருநீலகண்ட யாழ்ப்பாணர்
 
Back
Top