இந்த சாதனைகளுக்கு இடையில் எத்தனை இன்னல்கள்...
இவரது சாதனை பற்றி முன்னாள் இலங்கை துடுப்பாட்ட அணி தலைவர் அர்ஜூன கூறியது...
--------------
இவர் தமிழன் என்பதால் அரசியல் ரீதியிலும் பல அழுத்தங்கள் தலையீடுகள் வந்ததாம் அவற்றை எதிர்கொள்வதே அணிக்கு பெரும்பாடாக இருந்தததாம். எக்காலத்திலும் எவராலும் விட்டுக்கொடுக்கப்படாத ஒருவராக அணியில் விளங்கியவராம்.
------------------
உண்மை தான். அந்த விடையத்தில் அர்ஜூனவுக்கு முரளி கடமைப்பட்டுள்ளார். முரளிக்காக ஆட்டத்தையே நிறுத்தி மைதானத்திலிருந்து வெளியேற வைத்தவர் அவர். அவரையும் இந்த தருணத்தில் நன்றிகூறவேண்டும்.
முரளீதரனின் முகம் பொறித்த தங்க நாணயத்தினால் தான் இனிமேல் இலங்கையில் விளையாட்டு ஆரம்பத்தில் சுண்டப்படுமாம்.
உண்மையில் இமாலய சாதனை. வாழ்த்துக்கள். இனிவரும் காலத்தில் இந்த சாதனை முறியடிக்கப்படாமலேயே போய்விடலாம் என சப்பல் கூறியுள்ளார். ம். பார்க்கலாம்.
---
இவரது ஓய்வு அறிக்கைக்கு காரணம் சங்ககார என்றும் ஒரு தரப்பு பேசுகிறது. மஹெலவின் டில்ஷானின் பக்கபலத்துடன் இருந்தவர் மஹெல வெளியேறமுன் தான் வெளியேறியதாக ஒரு செய்தி. உண்மை பொய் தெரியவில்லை. :icon_ush: