maganesh
New member
நண்பர்களே,தமிழ் உறவுகளே குட்டுக்கதைகள் என்ற தலைப்பின் கீழ் குட்டுப்போடும் கதைகளை குட்டிக்கதைகளாகப் பதியுங்கள். இதோ எனது முதல் குட்டுக்கதை.
வயோதிபர் ஒருவர் தெருவால் நடந்து போய்க்கொண்டு இருந்தார். அவரது முதுகு அர்ச்சுனன் வில்லைப் போன்று வளைந்து காணப்பட்டது. விழுந்து விட்ட எதைடோ தேடிக்கொண்டு போவதைப் போல குனிந்த நிலையில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர் சென்ற தெருவின் ஒரு முச்சந்தியில் சில இளைஞர்கள் அரட்டை அடித்தவாறு அப்பன் பணத்துல வங்கிய மோட்டார் வண்டி சகிதம் பந்தாவாக நின்றார்கள். அவர்களைக் கடந்து சென்ற அம்முதியவரின் தோற்றம் அவர்களின் நகைப்புக்குள்ளானது. "பெரியவரே தொலைத்த இளமை எவ்வளவு தேடினாலும் கிடைக்காது" என்ரு கிண்டலாகச் சொன்னார்கள். அதைக் கேட்ட முதியவர் "தம்பிகளா நான் தொலைத்துவிட்ட இளமையைத் தேட இல்லை. நாம் நிமிர்ந்து நின்று உழைத்து வாங்கிய சுதந்திரம் தொலைந்துவிட்டது அதனைத்தான் தேடி அலைகின்றேன். நாம் இந்த வளைவு உழைத்தால் வந்தது.இன்றைய அராயகங்களை தட்டிக்கேட்காது அடிமைகளாக குனிந்து நிற்பதால் உங்க முதுகு வளைந்துகொண்டிருப்பது உங்களூக்குத் தெரியவில்லையா" என்று சொல்லிவிட்டு குனிந்தவாறு கம்பீரமாகப்போனார்.