maganesh
New member
அழைப்பிதழைத் திறந்து பார்த்தான் ரவி. 19.02.2007 அன்று புதிதாக ஆரம்பிக்க இருக்கும் பரதனின் ஓட்டல் திறப்பு விழாவுக்கான அழைப்பித்ழ் அது. அந்த அழைப்பிதழில் ஓட்டலை நாடா வெட்டித் திறந்து வைப்பவரின் பெயர் அச்சிடப்பட்டிருக்க இல்லை.பரதன் ரவியின் நீண்ட நளைய நண்பன். அத்துடன் இவன் பரதனுக்கு பல சந்தர்ப்பங்களில் நிதி உதவி செய்திருக்கின்றான். இவனது நிதி உதவியால் தொழில் ஆரம்பித்த பரதன் இன்று சிட்டியின் லீடிங் பிசினஸ் புள்ளி. நீ உதவி செய்ததால்தான் நான் இந்த நிலைமைக்கு வர முடிந்தது என்று பரதன் அடிக்கடி சொல்லுவான். கண்டிப்பாகப் போக வேண்டும் என நினைத்துக் கொண்டான். அந்த நாளும் வந்தது. ரவி சரியாக காலை 10.00 மணிக்கு பரதனின் ஓட்டலை அடைந்தான். அவன் போன போது வி ஐ பி யாருமே இருக்கவில்லை. சின நேரங்களில் நான் தான் ரிப்பன் வெட்டி திறந்து வைக்க வேண்டுமோ என்று எண்ணியவாறு பரதனை அணைத்து வாழ்த்துக் கூறினான். அடுத்த சில நிமிடங்களில் கமிஷ்னர், கலக்டர் என ஒரு விஐபிக்கள் குழு வந்தது. அவர்களில் யாராவது ஒருவர் ரிப்பன் வெட்டித் திறந்து வைப்பார்களோ? இல்லை இல்லை பரதன் நன்றி மறக்காதவன் என்னயே அழைத்து ரிப்பனை வெட்டச் சொல்லுவான் என பலவாறு எண்ணியவாறு இருந்தபோது லேடீஸ் அன்ட் ஜென்டில்மன் என்ற பரதனின் குரல் அவனை நிஜத்துக்கு கொண்டுவந்தது. எல்லோரையும் வரவேற்று வரவுக்கு நன்றியும் சொல்லிக்கொண்ட பரதன் இப்போது ரிப்பன் வெட்டி ஓட்டலைத் திறந்து வைக்க எனது இந்த உயர்வுக்கு காரணமான ஒருவரை அழைக்கப் போவதாக அறிவித்தான். ரவி தன்னை அழைக்கப் போகின்றான் என்று எதிர்பார்த்திருக்க ஓரமாக ஒதுங்கி நின்ற ஒரு பெரியவரை அழைத்து ரிப்பனை வெட்டுமாறு கேட்டுக்கொண்டான். ரவி அதிர்ச்சியடைந்தாலும் அதனைக்காட்டிக் கொள்ளாது பங்சனை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அப்பெரியவரை ரிப்பன் வெட்ட அழைத்ததன் காரணத்தைக் கேட்க நினைத்தாலும் மரியாதை நிமித்தம் கேட்காது இருந்து விட்டான்.ஒரு சில நாட்கள் கடந்த பின்னர் தன் வீட்டுக்கு வந்த பரதனைக் கேட்டான். அவர் எனது கிராமத்தில் எனக்கு ஆரம்பக் கல்வியை கற்பித்த ஆசிரியர். எனக்கு பலர் மேற்கல்வியை கற்பித்தாலும் எனக்கு அடிப்படை அறிவைத் தந்தவர் அவர்தான். அடிப்படை நல்லா இருந்தால்தான் எதுவுமே சிறப்பாக இருக்கும் அதனால்தான் அவரை அழைத்தேன் என்று சொல்லி ரவியின் முகத்தைப் பார்த்தான் பரதன். தன் நண்பனின் நல்ல குணத்தை அறிந்து கொன்ட ரவி பெருமையுடன் அவனைப் பாராட்டினான்.