அது அவளின் குடும்பத்துக்கு மட்டுமல்ல......

sham

New member
அது அவளின் குடும்பத்துக்கு மட்டுமல்ல......

பரீட்சை எனும் அரக்கனை வென்றுவிட்டோமென்ற வெற்றிக்களிப்பில் ஈருருளியில் " CHECK POINT"என்ற பலகையை கவனிக்காமல் செல்ல முயன்ற அந்த அப்பாவியான அழகிய இளம் தமிழ்ப்பெண்ணின் மிருதுவான கைகளை தம் கோரக்கரங்கொண்டு பிடித்து தடுத்து நிறுத்தி "உன்னை சோதிக்கவேண்டும் உள்ளே வா" என்று தரதரவென்றிழுத்துச் சென்ற அந்த கொடூர ராட்சகர்கள், 5 அறிவுகொண்ட மிருகத்திலும் கேவலமாக அந்தக் குழந்தை போன்ற தமிழ்பெண்ணின் கற்பை சூறையாடி சீரழித்துக்கொன்றொழித்தனர். பள்ளி சென்றவள் திரும்பாததால் சந்தேகத்தில் விசாரிக்கச்சென்ற அவளின் தம்பியின் தலையை 360 பாகை வரை முறுக்கி கொன்றுவிட்டு அவளின் தாயையும் தூக்கில் போட்டுக்கொன்ற அந்த நரிக்குறவர்களை என்ன செய்ய வேண்டும் நண்பர்களே?

அவள் காலையிலே பள்ளிசென்ற போது இவ்வளவும் தனக்கு நடக்குமென்று சிறிதளவேனும் நினைத்திருப்பாளா?

"நெஞ்சம் பொறுக்கவில்லையே இந்த ஆக்கிரமிப்புப்பேய்களின் எல்லையற்ற கொடூரச்செயல்களால்"
 
நன்பா இது கதையா சம்பவமா செய்தியா விளக்கம் இல்லையெ..:confused:
 
Last edited:
நண்பா, என்ன எங்கே எப்போது நடந்த சம்பவம் இது? எப்படியாயினும் அவர்கள மனிதனாய் வாழவே தகுதியற்றவர்கள்...
 
கதையாக இருந்திருந்தால் கொஞ்சம் நீ.............ளமாக வளர்த்தியிருக்கலாம்......
 
அது கதையாக இருந்திருந்தால் தொடர்ந்திருக்கலாம். ஆனால் அது உண்மைச்சம்பவம் ஆயிற்றே. என்னால் தொடரமுடியவில்லை. நெஞ்சம் வலிக்கிறது.
 
என்ன கொடூரம்????

உண்மைதான் ப்ரதீப் அண்ணா. இது எங்கள் நாட்டில் நடந்த கொடூரம். அவ் இளம் பெண்ணின் பெயர் கிருஷாந்தி.
 
இதை படிக்கும்பொழுது கண்ணீர் வருகிறது....

இக்கொடூரத்திற்கு விடிவு என்று தான் கிடைக்கும்.
 
Back
Top