எடுத்த முதல் மாதச்சம்பளத்தை பக்குவமாய் எண்ணிச் சரிபார்த்துவிட்டு தன் காதலி முதன்முதலாய் கேட்ட அந்த வெள்ளிக்கொலுசை வாங்குவதற்காய் பல இனிய கனவுகளோடு அடியெடுத்துவைத்தவனின் "பர்ஸை" கைப்பற்ற முயன்ற அந்த முரட்டுக்கரத்தை பிடித்தவாறு திரும்பியவனுக்கு 5 அங்குல நீள கூரிய கத்தி இருமுறை அவன் வயிற்றின் உள்ளுறுப்புகளை சரிபார்த்தது. சரிந்து வீழ்ந்த காதலிதயம் கொண்ட அவனின் உடலினுள் நிற்க மனமில்லாமல் விட்டால்போதும் என்பது போல வெளியேறிக்கொண்டிருந்தது அவனது செம்மையானகுருதி. பலர் சுற்றி நின்றும் தூக்க எவரும் இன்றி பேச்சு வராமல் மூச்சுத்திணறிக்கொண்டிருந்த அக்காதலனுக்கு தன் காதலி விடயம் அறிந்து ஓடிவருவது தெரிந்து மேலும் சில வினாடிகள் தன் உயிரைக்கையில் பிடித்திருந்தவேளை வந்தவள் அவனிடம்"ரமேஷ் இன்னும் கொலுசு வாங்கலையா?" என்று கூறிய வார்த்தையைக் கேட்டதும் அவனது இதயம் இறுதியாக முனகியது"சோகத்துடன் தான் இறப்பேன் என்று நினைத்தேன் , ஏமாற்றத்துடனும் அல்லவா போகிறேன்" என்று அமைதியாகியது.
என்னால் முடிந்ததை தந்துள்ளேன்.
அன்புடன் சாம்.