உங்களை இங்கே தேடுகிறார்கள்..!

மீண்டும் மீண்டும் மீண்டு வருவதில் கூட அலாதியான இன்பம் இருக்க தான் செய்கிறது ..
 
மன்றம் மறந்தவர்களைத் தேடுவோம்... வாங்க..!

அன்பு நண்பர்களே..

இப்படி ஒரு தலைப்பைத் தொடங்குவதில் தயக்கம் உண்டெனிலும் மன்றம்வந்து மகிழவைத்தவர்கள் நம்மை மறந்து போனோரை மீண்டும் தேடும் ஆர்வத்தால் தொடங்கினேன். ( சரியில்லைன்னா நிர்வாகம் இத்திரியைத்தூக்குவதில் ஆட்சேபமில்லை.)

நம் மன்றம் வந்து நம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி பல்வேறு காரணங்களால் (வேலைப்பளு என்பது பொதுவான காரணம்) வர இயலாமல் போனவர்களை நாம் நினைவுறுத்துவதன் மூலம் மீண்டும் வர நூறுசதவீதம் வாய்ப்பிருக்கின்றது.

மன்றத்தின் நினைவூட்டும் மடல் மின்னஞ்சலுக்கு முன்பு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது செயல்படுகிறதா எனத் தெரியவில்லை.

அவ்வகையில் இது ஒரு நினைவூட்டல் திரியே..

நமது ஆதங்கங்கள் அவர்களைக் கட்டி இழுத்துவர வெகுவான வாய்ப்பு உள்ளதால் அனைவரது ஆதரவோடு தொடங்குகிறேன்.

நான் தேடும் முதல் நண்பர்: இளசு.

தமது பின்னூட்டங்களால் கட்டிப்போடும் கலைஞர். எல்லோரையும் பின்னூட்டி ஊக்குவித்து உற்சாகம் அளிக்கும் தகைஞர்.

சிறப்பாக நான் என் கவிதைகள் எழுதியபின் ஏங்கிக்கிடப்பது அவரது அன்பான பின்னூட்டத்திற்காக. ஏனெனில் அந்த பின்னூட்டத்தில் ஒரு தாய்மையின் பாசம் ஒளிந்திருக்கும். ( இப்போது அக்குறையை கீதம் மற்றும் ஜானகி தீர்க்கிறார்கள். )

அத்தகு தகைசால் பேரறிஞர் இளசுவைத் தேடுவோம் வாருங்கள்.


இளசு ( அண்ணா /தம்பி ) .. எங்கிருந்தாலும் உடனே மன்றத்திற்கு வருகை தந்து தங்களின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்க வாருங்கள் என அன்புடன் கட்டளையிடுகிறேன்..


வாங்க... எல்லோரும் இன்னும் எல்லோரையும் தேடுவோம்..
 
இந்த திரி தொடங்கிய நேரம் மிக நல்ல நேரம் போலிருக்கு.. ரெம்பகாலமா வராம இருந்த சத்யா வந்துட்டாங்க.. அவங்களைத் தேடும் பணி மிச்சமாயிற்று..! :)
 
நானாகவே இங்கு மீண்டும் வந்துவிட்டேன் ...மகிழ்ச்சி மற்றும் புதியவர்களுக்கு வணக்கம்.
 
ஆஹா... வாங்க அழகுராஜ்.. மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. அனைவரும் ஒருங்கிணைந்து மன்றத்தின் பெருமையையும் புகழையும் நிலைநாட்டுவோம்..
 
அருமையான திரி. கலைக்கு வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்...!!!.
 
இன்று என் இதயத்தில் நான் உங்கள் அனைவரையும் தேடினேன்.

- ஒவியா.
 
வாருங்கள் ஓவியா... நினைவிருக்கிறதா என்னை..?

என் பிறந்த நாளில் உங்களை இங்கே கண்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஓவியா.. இனி தொடர்ந்து வருகை தாருங்கள்..
 
அட .. இன்னைக்கு நாம ஒன்னாத்தான் பிறந்திருக்கோமா..? எனக்கு இது இரட்டிப்பு சந்தோஷம் ஓவியா.. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உங்களுக்கு..
 
மீண்டும் இடைவெளி விட்டு வந்துள்ளேன்..

நான் அன்று பதிந்த அனைது விவாதங்களிலும் நான் சொன்னது இன்று உண்மையாகி இருக்கு தமிழகதில்.... ம்ம்ம்ம்
 
அனைவரும் நலமா? எனக்கேட்ட ராசராசன் என்ற
புனை பெயரில் இருக்கும் நண்பரே நீரும் தமிழ் மழையில்
நனைய விரும்புவோர் மன்றத்தில் நட்பின்
நினைவலைகளை வளர்க்கும் பகுதிக்கு வாரீர்
 
Back
Top