உங்களை இங்கே தேடுகிறார்கள்..!

வெகுநாட்களுக்குப்பிறகு மன்றம் வந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன், ஜனகன். இனிவரும் காலமும், சூழலும் நலமாய் அமைய என் வாழ்த்துகள்.
 
கம்பீர ஜனகனுக்கு
அன்பான வரவேற்பு....

வாழ்த்துக்கள்....
 
வருகின்றேன்... வருகின்றேன்...
வந்துகொண்டே இருக்கின்றேன்...

ஓவியன் , கீதம் , ஸ்ரீதர் , M.Jagadeesan , krishnaamma , மதி , நாகரா , அக்னி , praveen

இங்கே பாருங்கோ நம்ம அக்னி மன்றத்திலே இருக்கிறாரு...!!! :):):)





ஏம்பா ஏதாவது பிரச்சினையா வூட்டுல....?? :icon_rollout:
 
நானும் கொஞ்சமுன்னால்தான் கவனித்தேன், அக்னி பச்சை நிறத்தில் எரிகிறதே என்று. வருக வருக வணக்கம் அக்னி அவர்களே.
 
மன்றத்து சொற்செல்வத்தைக் கொஞ்ச நாளாகக் காணலையே.. யாரும் அது பற்றி யோசிப்பது போலவும் தென்படவில்லை..

நானே ஆரம்பித்துவிட்டேன்..

அன்பின் செல்வர்..
தாமரைச் செல்வன் அண்ணா எங்கே...?? எப்போது வருவார்??!!

காணாமல் கலங்கும் லட்சக்கணக்கான கண்களோடு இந்த தங்கையும்............... :medium-smiley-100:
 
ரொம்ப பிஸிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா இருக்கார், போன மாதில் அவ்வபோது வந்து சென்றார், இந்த மாதத்தில் வருவார் என நினைக்கிறேன், என்றாலும் சந்தேகமே, அலுவலக மற்றும் சொந்த பணி நிமித்தமாய் அண்ணன் இன்னும் பிஸிதான்..
 
Last edited:
மின்னஞ்சல் அனுப்பி நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.... மன்றத்தில் நடமாட முயல்கிறேன்... வணக்கம்.

===கரிகாலன்
 
வாங்க கரிகாலன்ஜி. உங்கள் சொல்லே கற்கண்டாய் இனிக்குது.
 
மின்னஞ்சல் அனுப்பி நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.... மன்றத்தில் நடமாட முயல்கிறேன்... வணக்கம்.

===கரிகாலன்

வருக அண்ணலே..!
நலமா..?
வாய்ப்பிருக்கும் நேரத்தில் கண்டிப்பாக வாருங்கள்.
 
மின்னஞ்சல் அனுப்பி நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.... மன்றத்தில் நடமாட முயல்கிறேன்... வணக்கம்.

===கரிகாலன்


நலமா அண்ணலே..

உங்களை அடிக்கடி இங்கே காணமுடிந்தால் மிக்க மகிழ்வேன்.
 
மெம்பர் நம்பர் 222 கவிதா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்!!!
 
எப்பொழுதும் என் உடன்பிறப்புகள் உலாவரும் என் நிரந்தர தாய் வீடு இந்த தமிழ் மன்றம். மின்னஞ்சல் அனுப்பி நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள் கோடி.

(ஒரு காலத்தில் மன்றமே குடியும் குடித்தனமும், லூட்டியும், சிரிப்பும் கும்மாளமும், வம்பும்-தும்பும், வாய் சண்டை, போன் சண்டை... அடம், அழுகை என என் தாய்வீடாய் இருந்த மன்றம்... என் இனிய மன்றம். :redface:)

ஏன் இந்த திரி இப்படி அணைந்து கிடக்கிறது..

நான் அறிஞர் சார், இளசுஜி, பாரதியண்ணா, ஆரேன் அண்ணா, மணியா அங்கில், தாமரையண்ணா, பென்சு, மன்மி... என் தங்க தம்பிஸ் பிரதீப் தொட்டு.........(நடுவில் எல்லாரும் உங்க பேரை சொறுகிக் கொள்ளுங்கள்) ........ டக்ஸ் வரை எல்லோரையும் மிகவும் தேடுகிறேன்....... மனதால் இன்று மிகவும் தேடுகிறேன்.

நல்ல உறவுகளை தொடுத்து கொடுத்த மன்றத்திர்க்கு நன்றி.
 
வாருங்கள்.. வாருங்கள்...

உங்களைப் பலர் தேடினார்கள் இங்கே..

நீங்கள் பலரைத் தேடுகின்றீர்கள் இன்று..

மன்றத்தின் சிறப்பே சிறப்பு.
 
Back
Top