உங்களை இங்கே தேடுகிறார்கள்..!

சுதி ஏத்திகிட்டு வந்திருக்காரு
சுதி சேர்க்கிறாரு
சுதி சரியில்லை

இப்படியெல்லாம் எழுதினா மான நஷ்ட வழக்கு போடாம இருந்தா சரி

இருந்தால்தானே
 
தபேளாவை போல தலையோரங்களில் சுத்தியால் தட்டி வாரி(இ)ழுத்து சுதியேற்ற வேண்டியதுதான்..

சுதிக்கு பிடிச்ச வாத்தியம் தம்பூரா தான். தம் பூரா இழுத்து வாசிப்பார்!!!:eek::eek::eek:
 
இருந்தால்தானே

ஒன் என்றால் ஒன்று
மை என்றால் என்னுடைய
ஒன்னஸ் என்றால் - ஒருமைப்பாடு (பல சேர்ந்து ஒற்றுமையாய் இருப்பது)
மைனஸ் என்றால் எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்வது எனக் கொள்ளலாம்..

இல்லாத மானம், நஷ்டம் ஆனால் மைனஸ் ஆகும்ல..

அப்ப அவர் எல்லாத்தையும் தனதாக்கி கொள்வாரில்ல..

:innocent0002:
 
Last edited:
சுதிக்கு பிடிச்ச வாத்தியம் தம்பூரா தான். தம் பூரா இழுத்து வாசிப்பார்!!!:eek::eek::eek:
நமக்கு விசிலே ஒழுங்கா அடிக்க தெரியாது.. இதுல தம்பூராவா..?! :frown: (உள்குத்து கொஞ்சம் பலமால்ல இருக்கு... தலை தப்பியது தம்பூரான் புண்ணியம்..)
 
இதென்ன கூத்து....சுபி...சுதியான கதை.....நல்லாருக்கியா சுபி.....சாரி....சுதி....அப்பப்ப...இங்கையும் வந்துட்டுப் போ கண்ணா....!!!
 
நமக்கு விசிலே ஒழுங்கா அடிக்க தெரியாது.. இதுல தம்பூராவா..?! :frown: (உள்குத்து கொஞ்சம் பலமால்ல இருக்கு... தலை தப்பியது தம்பூரான் புண்ணியம்..)

பாத்தீங்களா பாத்தீங்களா...
 
இதென்ன கூத்து....சுபி...சுதியான கதை.....நல்லாருக்கியா சுபி.....சாரி....சுதி....அப்பப்ப...இங்கையும் வந்துட்டுப் போ கண்ணா....!!!

சு(த்)தி பார்க்க மட்டுமில்லதானே!!!:D:D:D:D
 
சுகந்தப்ரீதன் - சுதி ஆகி சுதி ஏத்திட்டு வந்து சுதியோடு கலாட்டாவா கலை கட்டினா சரி தான்..

முன் இருந்த பெயர் இதை விட அழகு சுதி.. ஏன் ஏன் ஏன் இந்த திடீர் முடிவு.. நலமா ?

அடிக்கடி மன்றத்தில் தலையைக் காட்ட சிவா அண்ணாவோடு என் விண்ணப்பமும். :)

----

ரொம்ப நாளா பெரியண்ணாவைப் பார்க்க முடியலையே... பெரியண்ணா... எங்கண்ணா நீங்க??

இளசு அண்ணாவின் வருகைக்காக தங்கை காத்திருக்கிறேன். விரைந்து வருவீர்கள் என்று நம்புகிறேன்.
 
இதென்ன கூத்து....சுபி...சுதியான கதை.....நல்லாருக்கியா சுபி.....சாரி....சுதி....அப்பப்ப...இங்கையும் வந்துட்டுப் போ கண்ணா....!!!
நீங்க ’கண்ணா’ன்னு சொன்னதும் என் கண்ணே கலங்கிடுச்சிண்ணா..:traurig001: பேசாம இந்த பேரை வச்சிக்கலாம்ன்னு தோணுது.!! :fragend005:
பாத்தீங்களா பாத்தீங்களா...
தம்-பூரா வாசிச்சதை பாத்துட்டீங்களா..?! அப்ப அது நமக்குள்ளயே இருக்கட்டும்.. பத்த வச்சிடாதீங்கோ..:icon_rollout:
முன் இருந்த பெயர் இதை விட அழகு சுதி.. ஏன் ஏன் ஏன் இந்த திடீர் முடிவு.. நலமா ?.
வாம்மா.. மின்னலு.. நாங்க நலம்.. நீங்க எப்படி..?! அதுசரி, அக்கா சொன்னதை அப்படியே ரிப்பீட் பண்ணுறீங்களே அதெப்படி..?!

எல்லோருக்கும் மொத்தமா இங்கேயே பதில் சொல்லிடுறேன் கேட்டுக்கோங்க..!!:aetsch013:

”எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், சத்தியமங்கலம் தொகுதியில் தனித்து போட்டியிட முடிவெடுத்திருப்பதால், பிரச்சாரத்துக்கு தோதாக இருக்குமென்று இந்த பெயர் மாற்றத்தை தேர்ந்தெடுத்திருக்கிறேன்.. ஆகையால் இதைபற்றி மேற்கொண்டு என்னை நோண்டி நொங்கு எடுக்காமல் ஓட்டளித்து ஒத்துழைப்பு நல்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..!!

இப்படிக்கு...
சுயேட்சை வேட்பாளர் சுதி..!!”:medium-smiley-009:

(மச்சான்.. மைக்கை ஆப் பண்ணுறா... விட்டா இவன்பாட்டுக்கு பேசிக்கிட்டே போவான் போலிருக்கு...)
 
நெருப்பு நரி,
அக்னி கொ(ழு)ளுந்து
கனல் கண்ணன்
தீப்பொறி ஆறுமுகம்

போன்ற அடைமொழிகளை தன் கைவசம் வைத்திருந்த “அக்னி”யைக் காணவில்லை!!!
எங்கே!! எங்கே!!!

அன்பு இளசு அண்ணா!! நீங்களுமா காணவில்லை?
 
அக்னியின் கம்பனி கைமாறியதில் கணினி, இணைய இணைப்பை மட்டுப்படுத்தி விட்டார்களாம். வீட்டிலிருந்து இணையலாமே என நீங்கள் கேட்டால், மன்றம் வந்த பிறகுதான் அவருக்குத் திருமதி அமைந்தார் என்பதை நினைவூட்டுகிறேன்.

ஆனால் ஆளு ஃபேஸ்புக்கில் கேம் விளையாடுறார், மொபைல் மூலம்.
 
ஒவ்வொருநாளும் அக்னி தான் சமையலாம். என்று புலம்புறார். என்ன பண்ண என்று வேற கேட்குறார். யாராவது அனுபவசாலிங்க புத்திமதி சொன்னா அவருக்கு அத சொல்லீடுறன்... :D
அக்னியின் கம்பனி கைமாறியதில் கணினி, இணைய இணைப்பை மட்டுப்படுத்தி விட்டார்களாம். வீட்டிலிருந்து இணையலாமே என நீங்கள் கேட்டால், மன்றம் வந்த பிறகுதான் அவருக்குத் திருமதி அமைந்தார் என்பதை நினைவூட்டுகிறேன்.

ஆனால் ஆளு ஃபேஸ்புக்கில் கேம் விளையாடுறார், மொபைல் மூலம்.

என்னை வேற ஆட்டத்துக்கு கூப்பிடுறார் என்றால் பாருங்கோவன்.
 
வருகின்றேன்... வருகின்றேன்...
வந்துகொண்டே இருக்கின்றேன்...
 
ஜனகனை வெகுநாட்களாகக் காணவில்லையே?

என்னைத்தேடிய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பலகோடி.
உறவுகள் பிரிவால் ஏற்பட்ட வலி, படிப்பு வேலை சுமைகள் இதனால் அடிக்கடி மன்றம் வர முடியவில்லை.
இனி கூடியவரை மன்றம் வர முயற்சிக்கின்றேன்.உங்கள் எல்லோர் அன்புக்கும் நன்றி.
 
ஜனகன்..

புலம்பெயர் தமிழரது நிலை யாவரும் அறிந்ததே.. படிப்பு, வேலை முக்கியம்.. ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக்குவதும் முக்கியம்.
 
Back
Top