உங்களை இங்கே தேடுகிறார்கள்..!

ஜனகன் எங்கே?

இனிய அன்பர் ஜனகனைக் கொஞ்ச நாள்களாகவே மன்றத்தில் பார்க்கவில்லை.

அவர் நலமாக இருக்கிறாரா?

தொடர்புடையவர்கள் யாரேனுமிருந்தால் அன்புகூர்ந்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அவரின் குழந்தைத்தனமான ஊக்கமூட்டும் பின்னூட்டங்கள் இல்லாமல் எந்தப் பகுதியும் முழுமையுறவில்லை என்பது என் எளிய கருத்தாகும்.
எல்லாப் பகுதிகளிலும் எல்லா நல்ல எளிய எழுத்தையும் பாராட்டி ஊக்கும் இனிய பண்பினரான அவர் ஏங்கே?

அவர் விரைவில் மன்றம் வரவேண்டுமென அன்புடன் விழைகின்றேன்.
 
படித்துக்கொண்டிருப்பவர் என நினைக்கிறேன். தேர்வு சமயமாக இருக்கலாம். விரைவில் வரவேண்டும். குணமதி சொல்வதைப்போல....எல்லாப் படைப்புக்களுக்கும் பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்தும் ஜனகனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
 
வாருங்கள் ...ஜனகன்.
ஆவலுடன் காத்திருக்கிறோம்.
 
பின்னூட்டத் தென்றல், அன்பு அண்ணல்,
‘இளசு’ எங்கே... எங்கே... எங்கே...
 
விடுமுறைக்காலம் முடிந்ததால் விரைவிலேயே மன்றத்திற்கு அண்ணா வருகை தருவார் என்று நம்புகிறேன் அக்னி.
 
அக்னி, அமரா

இம்மாதத் தொடக்கத்திலேயே மன்றம் வரவேண்டியது..

புதுக்கணினி, எழுத்துரு சிக்கல், விடுப்பின் பின்னான பணிச்சுமை என பிரிவு வளர்ந்துவிட்டது..

பிரிவு - உறவின் வலி அளக்க உதவும் கருவி..

அளந்தேன்.. கலந்தேன்.

அன்புக்கு நன்றி இளவல்களே..

அனைவரும் நலந்தானே?
 
விடுமுறை முடிந்து மன்றம் வந்த இளசு அவர்களை இனிதே வரவேற்கிறேன். தங்கள் பார்வைக்காக பல படைப்புகள் இங்கே ஏங்கிக்கொண்டிருக்கின்றன.
 
Last edited by a moderator:
வரவேற்புக்கு நன்றி கீதம் அவர்களே..


(இன்னும் என் கணினி கொஞ்சம் தமிழ் திக்குகிறது.

உங்கள் பதிவில் பார்வைக்காக என்பதின் பின் வரும் சொற்கள் புரியாத எழுத்துருவில் தெரிகின்றன..


அமரா
உதவு எனக்கு.)
 
வாங்க அண்ணா... நலம் தானே...
அமரன விடுங்க.. நான் நன்றாக திருத்துவேன்.
அவுஸிக்கு உங்க கணினிய அனுப்பிவையுங்க.. :D
 
அக்னி, அமரா

இம்மாதத் தொடக்கத்திலேயே மன்றம் வரவேண்டியது..

அனைவரும் நலந்தானே?
மன்றம் வந்த வசந்தத்தை வரவேற்கிறேன். வாருங்கள் அண்ணா.
 
வரவேற்புக்கு நன்றி கீதம் அவர்களே..


(இன்னும் என் கணினி கொஞ்சம் தமிழ் திக்குகிறது.

உங்கள் பதிவில் பார்வைக்காக என்பதின் பின் வரும் சொற்கள் புரியாத எழுத்துருவில் தெரிகின்றன..


அமரா
உதவு எனக்கு.)

வாருங்கள் அண்ணா, நீண்ட நாட்கள் கழித்து உங்களைக் காண்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். (என்னையறியாமலேயே என் முகத்தில் புன்னகை!!)

அன்புடன்
ஆதவா
 
இங்க பாருங்க. இளசு அண்ணா போறதுக்கு முன்னாலயே காணாமல் போண ஒருத்தர் வந்திருக்காங்க...
 
ஆதவரே அதிசயம்.. ஆனால் உண்மை வந்திருப்பது நீங்க தானா?

நீண்ட நாட்கள் கழித்து மன்றம் வந்த இளசு அண்ணாக்கு வரவேற்புகள்.:)
 
இளசு அண்ணாவினது ஆதவனினதும் பதிவுகள் இனி மன்றம் முழுவதும் நிறைந்திருக்கக் காண ஆவலுடன் காத்திருக்கின்றேன்...
 
ஆதவரே அதிசயம்.. ஆனால் உண்மை வந்திருப்பது நீங்க தானா?

நீண்ட நாட்கள் கழித்து மன்றம் வந்த இளசு அண்ணாக்கு வரவேற்புகள்.:)


கண்டிப்பா நாந்தானுங்க, க்ளோன் ஏதும் அனுப்பி வைக்கலை. :aetsch013:
 
Back
Top