பேய், பிசாசு இருக்கா என்பது ஆராய்சிக்கு உட்படுத்த முடியாது ஒன்று, இதை ஒரு அனுபவம் எனலாம், அந்த அனுபவம் பயங்கரமாக, அச்சுருத்தகூடிய, விவரிக்க முடியாத நிலையில் இருக்கின்றபோது, பேய், பிசாசாகி விடுகிறது. குளக்கோட்டன் கூறியது போன்று இருட்டு என்றால் அதுவும் தனிமையில் என்றால் அனைவருக்கும் ஒருவிதமான அச்சம்தான். அந்த அச்சத்திலே வாழ்ந்து இருட்டில் நம் வாழ்வை இழந்து விடக் கூடாது என்றுதான் ஞானிகள் இருட்டை கிழிகின்ற சக்தி ஒளிக்கு உண்டு அதுபோல அச்சத்தை போக்குகின்ற அசாத்திய நம்பிக்கையும், தைரியமும் பன்மடங்கு மனிதருக்கு உண்டு என்பதை தங்கள் வாழ்வால் நிருபித்து உள்ளனர். ஆகவே 99 சதவிதம் தைரியம் கொண்ட நம் முன்னால் 1 சதவீதம் கொண்ட பேய், பிசாசு என்ற அச்ச உணர்வு, அனுபவம் சாதிக்கும் என்றால் அசட்டுத்தனமே.