பேய் உள்ளதென நிறையபேர் வாக்களித்துள்ளனரே!!! வாக்களித்த நால்வரிடமும் ஒரு கேள்வி.. கோபம் வேண்டாம்
1. நீங்கள் படித்தவர்தானே!??
படித்ததனால் தான் இதையும் படிக்க நேடிட்டது.
2. மற்றவர்கள் சொன்னதை அப்படியே ஏற்பவரா?
அது அவசியம் இல்லை! ஆனால், அதனை சிந்திப்பது தவறில்லை.
3. பேய் அல்லது ஆவியை நீங்கள் பார்த்தவரா?
சிறிய வயதில் இருமுறை பார்த்தது உண்டு. ஆனால், காலப்போக்கில் அதனையும் முழுமையாக சிந்தித்து ஒன்றை தவிர்த்து ஒன்றை நம்புகிறேன்.
4. ஆங்கில அல்லது சித்த மருத்துவம் தவிர வேறு மந்திரவாதிகளிடம் சென்று நோய் குணம் ஆனதைக் கண்டிருக்கிறீர்களா?
காய்ச்சல் தான். ஆனால், ஆங்கில மருத்துவத்துக்கு கட்டுப்படாமல், மந்திரவாதியின் ஒர் சின்ன பூஜையால் குணமானதுதான் வேடிக்கை!
5. இரவு நேரம் மட்டுமே அலையும் பேய்களை பகலில் வருவதாக யாராவது சொல்லி அல்லது நீங்களாகவே கண்டிருக்கிறீர்களா?
அப்படியில்லை. ஆனால், இப்படி கேள்விப் பதில்களைக் கொண்டே நீங்கள் ஒர் கதை உருவாக்கத்தை ஏற்ப்படுத்த இருக்கிறீர்கள் என்பதை பலர் சிந்திக்கலாம், நம்புங்கள்.
6. கும்பலாய் வருபவர்களிடம் ஆவி கைவரிசை காட்டியதை கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?
இதில் பல நடைமுறை உண்மைகளும் ஒத்துவராது. அதாவது பேய் என்பதை பற்றிய நம்பிக்கையின் முழு பின்னூட்டத்தையும் நீர் படித்திருப்பீர். ஆகையால், இப்பொழுது இக்கேள்விக்கு சரியான பதில் கிடைத்திருக்கும் என நம்பலாம்.
7. பேயென்று சொல்லிகிறீர்களே! அதற்கு இன்னும் பல ஆதாரங்களைச் சொல்லுங்களேன்... மற்றவர்கள் சொன்னதை எடுத்துக்காட்டவேண்டாமே!!
மற்றவர் என்பதை விட மன்ற உறுப்பினர்கள் பதிவிட்டுள்ளனர், படித்தீர்கள் தானே!. நானும் என் படுகை.காம்-ல் பதிவிட்டதை தேடி இங்கு கொடுக்கிறேன்.(நேரமில்லைங்க, இதுவே ஒவர் டைம் - தூக்கம் வருது)
என்னிடம் ஆவி அல்லது பேயில்லாத ஆதாரம் பல உண்டு.. மன்றத்தில் எழுத நேரமின்மை காரணமாகவே சற்று பம்மியிருக்கிறேன்.
சரி, இதையே எத்தனை நாட்களுக்கு, இல்லை மாதம்.. இல்லை வருடமாய் சொல்வீர்?
உங்கள் ஆதாரங்களை நீட்டுங்கள்... நம் நண்பர்கள் அலசட்டும்...
பலர், அலசிவிட்டனர். இனி உங்களது "பேய் இல்லை" என்ற ஆதாரத்தை மட்டுமே அலச வேண்டியுள்ளது.