ஆவி, பேய், பிசாசு நம்புகிறீர்களா?

பேய், பிசாசு, ஆவிகள் மேல் நம்பிக்கை உள்ளதா?

  • ஆமாம்

    Votes: 11 31.4%
  • இல்லை

    Votes: 9 25.7%
  • இது ஒர் மூட நம்பிக்கை

    Votes: 15 42.9%

  • Total voters
    35
கோவில்களில் இருக்கும் இறுக்கமான சூழ்நிலையும் ஒரு காரணம்.

என்ன தான் கடவுள் இல்லை என்றாலும் கோவிலுக்கு போய், அந்த புழுக்கத்தில், வெளிச்சம் அதிகமில்லாத இடத்தில், பூ, விபூதி, சூடம், சாம்பிராணி வாசனைகள் நுகரும் போது நமக்குள் ஏதோ ஒரு மாற்றம் உருவாகிறது.

நம்ம கிராமத்து கொட்டு, மேள இசையோடு அந்த சூழ்நிலையில் இருந்தால் எல்லோருக்கும் ஆட்டம் தானாகவே வரும்.

எங்க ஊர் பக்கம் இருக்கும் குலசேகரப்பட்டிணம், முத்தாரம்மன் கோவிலில் தசரா நேரத்தில் சாமி ஆடுவோருடன் சேர்ந்து நானும் ஆடியிருக்கிறேன் (இசையை கேட்டு ஆடியது தான் :) ).
 
ஒரு விசயம் எனக்கு இப்போ வரை புரியவில்லை.

எங்க தாத்தா ஒருத்தர் கோவிலில் சாமியாடுவார், இத்தனைக்கு அவர் ஊர்த்தலைவர் மாதிரி.

பெரிய தீப்பந்ததை கையில் பிடித்து ஆடுவார், ஆவேசமாக ஆடும்போது அது அவர் மார்பின் மேலும் படும், ஆனால் அடுத்த நாள் அவர் மார்பு முடிகள் எல்லாம் அப்படியே இருக்கும். இது புரியலை. இது மாதிரி வேற ஒன்றும் இருக்குது.
 
இந்த இந்த விஷயங்கள் புரியாததினால் தான் இந்த திரியே பரம்ஸ் அண்ணா, அது மாதிரி நிறைய கற்பூரம் வாயில் எரியவிடறது, தலையில் தேங்காய் உடைப்பது, உடல் பூர அலகு குத்திக் கொள்வது, நாக்கில் அலகு குத்திக் கொள்வது (நம்ம கவுண்ட மணி எதோ ஒரு படத்தில் ஊமையா நடிப்பாரே, நான் எங்கே எப்படி இருக்க வேண்டியவனு) இந்த மாதிரி நிறைய இருக்கு
 
என்னை பொறுத்த வரையில் பேய் என்பது நமது மனதில்(முளையில்) பதிந்து இருக்கும் கெட்ட சிந்தனைகளின் தொகுப்பு ஆகும். நல்ல சிந்தனைகளின் தொகுப்பு கடவுள் ஆகும். இந்த தெளிவே எனக்கு போதும் என நான் எண்ணிக்கொள்கிறேன்.

நண்பர்கள் பலர் பேய் இருக்கிறது எனறு சொன்ன தகவல்களும் இதில் அடங்கும் . இல்லை எனபதற்கு சொன்ன தகவல்கள்,ஆதாரங்களுக்கும் இதுவே பொருந்தும்.

எல்லாம் நமது மூளை செய்யும் வேலை தான் வேறு ஒண்ணுமில்லை. ஏன்னென்றால் நாம் இன்னும் நம் மூளைப்பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளவில்லையே. நாம் முழுவதுமாக தெரிந்து கொண்ட பின் இந்த விவாதமே தேவை இல்லை என்றாகிவிடும்.
 
எங்க ஊர்ல சிலபேரு சாமிவந்து ஆடுவாங்க... உடனே நம்ப ஆளுங்க எல்லாம் சூடத்தை சாமியோட கையில ஏத்திவச்சி கும்புடுவாங்க... ஆனா சாமிக்கு சூடுதாங்காம பட்டுன்னு அதை வாயில போட்டு முழுங்கிவிடும்..!! பெரும்பாலும் சாமியாடுறதுக்கு முக்கிய காரணம்... பட்டை சாராயம் படையலா கிடைக்கும்ங்கிறதுதான்...!!!.

இப்படித்தான் சின்னவயசுல ஒருமுறை அடிக்கடி பேய்புடிச்சி ஆடுற ஒரு அக்காக்கிட்ட கேட்டேன், "ஏன் உங்களுக்கு எப்ப பார்த்தாலும் ஆம்பளை பேயே புடிக்குது.. பொம்பளை பேய் புடிக்க மாட்டேங்குதுன்னு..??" அதுக்கு அவுங்க என்ன சொன்னாங்க தெரியுமா..., "ஆம்பளை பேய்ன்னாதான் பேயோட்டும்போது பீடி, சிகரெட், சாராயம் எல்லாம் வாங்கி தருவானுங்க... அதே பொம்பளை பேய்ன்னா ஒன்னுக்கூட வாங்கி தரமாட்டானுங்க...வெறும் வேப்பிலை அடிமட்டும்தான் கொடுப்பானுங்க..!!!" அப்படின்னு..!!
 
என்னப்பா சுபீ, இப்படி அந்த அக்காவோட குட்டுக்களை பொட்டென போட்டு உடைச்சிட்டீங்களே...!! :D:D:D

பாவம், வாயில விரலை வைச்சா கடிக்கத் தெரியாத பச்சைப் பிள்ளைனு நம்..................பி உளறிக் கொட்டிட்டாங்க போல....!!
:D:D:D
 
ஆமாம்... எல்லா கோயில்களிலும் பூஜை செய்யும் எந்த பிராமண பூசாரிகளுக்காவது சாமி வந்து பார்த்திருக்கிறீர்களா???? அல்லது எந்த பிராமண பூசாரிகளின் மனைவியர்களுக்காவது வந்திருக்கிறதா??
பூமகள் இதை அப்படியே உங்களிடம் திருப்பிக் கேட்கிறேன்... நீங்கள் ஏங்கேயாவது விஷ்ணு, சிவன், பிரம்மன் பேரை சொல்லிக்கொண்டு சாமியாடியதை பார்த்ததுண்டா..?? இருக்காது என்றே நம்புகிறேன்...!! சாமியாடுபவர்கள் பெரும்பாலும் தங்களின் குலதெய்வமான கருப்புசாமி, மலைச்சாமி, எல்லைச்சாமி, ஐயனாரு, முனியப்பா, மாரியாயி, செல்லாயி போன்ற பெயர்களைத்தான் சொல்லுவார்கள்...!! தமிழர்களின் வாழ்வில் இந்த குலதெய்வங்களின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது எனலாம்.. அதாவது தங்களின் குலத்தை காப்பதற்காக வாழ்ந்து உயிர் தியாகம் செய்தவர்களை தெய்வமாக எண்ணி வழிப்பட்டு வருவதுதான் இதுவரை பண்பாடாக இருந்து வந்திருக்கிறது..!! அந்த வகையில் பார்த்தால் அந்த தெய்வங்கள் இங்கே வாழ்ந்து மடிந்த மனிதர்கள்தான்... அவர்கள் ஆவியாக திரிந்து சாமியாக வருவதற்க்கான சாத்தியங்கள் அதிகம்தான்... ஆவியென்ற ஒன்று உண்மையில் உலகில் இருக்குமேயானால்..!!
 
அருமையான விளக்கம் சுகந்தன்
 
பேய் என்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சின்ன வயதில் இல்லாத பேய்க்கு பயந்து நான் செய்த கூத்துகள் ஏராளம்

பேய் இல்லை என்று கூறினாலும் கும்மி இருட்டில் தனியாக நடந்து செல்லும் போது ஏதாவது பேய் நம்மல பின் மண்டையில் அடித்துவிடுமோ என்ற பயம் இருப்பது மறுக்க முடியாத உண்மை என்ன பன்ன்வது சின்ன வயசில் இருந்தே ஒழுங்கா சாபிட்டு இல்லாடி பூச்சாண்டிகிட்ட பிடித்து கொடுத்துவிடுவேன் ஒழுங்கா சீக்கரம் படுத்து தூங்கு இல்லாடி பேய் வந்து வந்துடும்னு சொல்லியே வளர்த்துட்டாங்க.
 
இயற்கை நியதிப்படி மரணமடையாமல் விபத்துக்களாலோ வன்முறைகளாலோ அவனுடைய உடலை விட்டு ஆன்மாவானது வலுக்கட்டாயமாக பிரிக்கப் பட்டிருந்தாலும் இயற்கை மரணம சம்பவிக்க வேண்டிய நாள் வரும் வரை அந்த மனிதனின் ஆன்மா காத்திருக்கும் நிலையில் இருக்கும்! (இவைகள்தான் ஆவிகள் பேய்கள் பிசாசுகள் என்று மனிதனால் அவ்வப்பொழுது உணரப்படுகின்றன)

இந்த நிலையில் உலவும் ஆன்மாக்கள் வாழும் போது துர்குணங்கள் கொண்டிருந்தால், அவற்றின் நிலை "பேய்கள் நிலை" என்றும் பேராசை கொண்ட மனிதர்களின் நிலை "பைசாச நிலை" என்றும் வேதங்கள் கற்றுணர்ந்த மனிதனின் ஆன்ம நிலை "பிரம்ம ராக்ஷச" நிலையென்றும் கூறப்படும்.

மேலும் எந்த ஒரு ஆன்மாவும் இந்த காத்திருக்கும் நிலையில் சிறிது காலம் இருந்த பின்னரே அடுத்த நிலை செல்ல இயலும். பெரும்பாலான மனித சக்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் இந்த படி நிலையிலுள்ள ஆன்மாக்களால் நடத்தப் படுகின்றன.

இந்த படிநிலை ஆன்மாக்களால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம். மேலும் மாந்திரீக வசப்படும் தன்மையும் இந்த நிலையில் ஏற்படுகின்றது. அத்துடன் ஏற்கனவே மனிதர்களாக வாழ்ந்து பஞ்சகிருத்தியம் வரை சென்ற ஆன்மாக்கள் கூட படிப்படியாக சக்தியழந்து அடுத்த பிறவிக்காக இந்த படிநிலைக்கு வந்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டால் மாந்திரீகர்கள் வசப்பட்டு ஏவல் தெய்வத் தன்மை அடைகிறார்கள். மீண்டும் யோனி வர்க்கத்தில் செல்ல முடியாமல் மந்திர சக்தியால் தடை செய்யப்பட்டு சில காலம் மனிதர்களின் சுய நலத்திற்கு பயன்படுத்த படுகிறார்கள். அது சமயம் மனித நிலையிலுள்ள யாரேனும் அருளாளர்கள் முன்வந்து தான் அவர்களின் மந்திர கட்டுக்களை விலக்கி அந்த ஆன்மாக்களை பிறவிக்கு அனுப்புவதோ தற்சுதந்திரத்தை ஏற்படுத்துவதோ செய்ய வேண்டியுள்ளது.

- வள்ளலார் மெய்ஞான வழி
 
பேய் என்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சின்ன வயதில் இல்லாத பேய்க்கு பயந்து நான் செய்த கூத்துகள் ஏராளம்.

கூடிய விரைவில் ஒரு பேய் உங்களை பிடிக்க வேண்டும் என்று சாபமிடுகிறேன்... :D
 
பூமகள் இதை அப்படியே உங்களிடம் திருப்பிக் கேட்கிறேன்... நீங்கள் ஏங்கேயாவது விஷ்ணு, சிவன், பிரம்மன் பேரை சொல்லிக்கொண்டு சாமியாடியதை பார்த்ததுண்டா..?? இருக்காது என்றே நம்புகிறேன்...!! சாமியாடுபவர்கள் பெரும்பாலும் தங்களின் குலதெய்வமான கருப்புசாமி, மலைச்சாமி, எல்லைச்சாமி, ஐயனாரு, முனியப்பா, மாரியாயி, செல்லாயி போன்ற பெயர்களைத்தான் சொல்லுவார்கள்...!! தமிழர்களின் வாழ்வில் இந்த குலதெய்வங்களின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது எனலாம்.. அதாவது தங்களின் குலத்தை காப்பதற்காக வாழ்ந்து உயிர் தியாகம் செய்தவர்களை தெய்வமாக எண்ணி வழிப்பட்டு வருவதுதான் இதுவரை பண்பாடாக இருந்து வந்திருக்கிறது..!! அந்த வகையில் பார்த்தால் அந்த தெய்வங்கள் இங்கே வாழ்ந்து மடிந்த மனிதர்கள்தான்... அவர்கள் ஆவியாக திரிந்து சாமியாக வருவதற்க்கான சாத்தியங்கள் அதிகம்தான்... ஆவியென்ற ஒன்று உண்மையில் உலகில் இருக்குமேயானால்..!!
ரொம்ப நாளுக்கப்புறம் சுபியின் பதிவு பார்த்து மகிழ்ச்சி... நலமா சுகந்தா?

சுபி... நீ சொன்னதில் எதையும் மறுப்பதற்கில்லை... ஆயினும்... மாரியம்மன், காமாட்சியம்மன் என இவ்வகை சாமிகளுக்கு கூட சாமியாட்டம் போடவே செய்கின்றனர்.. அவை குல தெயவங்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.. உடுக்கை.. பம்பை சத்தம் கேட்டாலே போதும்.... மேலும் மாரியம்மன், காமாட்சியம்மன் கோயில்களில் பிராமனரும் தானே பூஜை செய்கிறார்கள்..

நான் சொல்ல வந்ததன் நோக்கம் முன் பதிவிலேயே விளக்கியிருப்பேன்.. இருந்தாலும் வேறு கோணத்தில் உங்களின் பதிலும் ஏற்புடையதே......

ரொம்ப நன்றி சுகு.. நீ இன்னும் அறிவாளியாத்தான் இருக்கேன்னு புரியுது..... :icon_b::D:D ! :)
 
ரொம்ப நாளுக்கப்புறம் சுபியின் பதிவு பார்த்து மகிழ்ச்சி... நலமா சுகந்தா?
நன்றியக்கா... மறக்காமல் என்னை நலம் விசாரித்தமைக்கு...:icon_ush:
சுபி... நீ சொன்னதில் எதையும் மறுப்பதற்கில்லை... ஆயினும்... மாரியம்மன், காமாட்சியம்மன் என இவ்வகை சாமிகளுக்கு கூட சாமியாட்டம் போடவே செய்கின்றனர்.. அவை குல தெயவங்களாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.. உடுக்கை.. பம்பை சத்தம் கேட்டாலே போதும்.... மேலும் மாரியம்மன், காமாட்சியம்மன் கோயில்களில் பிராமனரும் தானே பூஜை செய்கிறார்கள்..
உங்களுக்கு ஒன்று தெரியுமா... எங்கஊர் செம்மலையப்பர் சாமியை தங்களின் குலதெய்வம் என்றுக்கூறிக்கொண்டு சேலம் மாவட்டத்திலிருந்து எங்க ஊருக்கு சாமி கும்பிட வருவார்கள்... அதேபோல் எங்கள் குலதெய்வமும் எங்கள் ஊரில் கிடையாது... அதேபோல் மாரியம்மன் காமாட்சியம்மனை தங்களின் குலதெய்வமாக வழிபடுபவர்களையும் நான் கண்டிருக்கிறேன்... அந்த பெயரில் அவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்து இறந்திருக்கலாம் அல்லவா...?? எனக்கு ஆவி சாமியெல்லாம் இருக்கா என்று தெரியாது... ஆனால் அந்த பெயரில் நிறைய போலிகள் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரியும்..!!
நான் சொல்ல வந்ததன் நோக்கம் முன் பதிவிலேயே விளக்கியிருப்பேன்.. இருந்தாலும் வேறு கோணத்தில் உங்களின் பதிலும் ஏற்புடையதே......
உங்கள் கோணத்தை பார்த்துவிட்டு அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில்தான் நான் என் கோணத்தை இங்கே பதிவு செய்தேன்... உங்களுக்கு அப்படியொரு கோணம் தோன்றியது உண்மையிலேயே எனக்கு வியப்பாகவும் விந்தையாகவும் இருக்கிறது..!!
ரொம்ப நன்றி சுகு.. நீ இன்னும் அறிவாளியாத்தான் இருக்கேன்னு புரியுது..... :icon_b::D:D ! :)
இது என்னை பாராட்டுற மாதிரி தெரியலையே... நக்கல் பண்ணுற மாதிரில்ல இருக்குதுங்க அம்மணி..!!:icon_rollout::icon_rollout::icon_rollout:
 
நன்றியக்கா... மறக்காமல் என்னை நலம் விசாரித்தமைக்கு...:icon_ush:
ஹே சுகு.. நான் எப்பவும் மறக்க மாட்டேன்... :)

அதெல்லாம் இருக்கட்டும்.. அதென்ன சந்தடி சாக்குல அக்கான்னு கூப்பிட்டு வயசைக் குறைச்சிக்கறே... எப்பவும் பூவுன்னு தானே கூப்பிடுவ...... :smilie_abcfra:

இது என்னை பாராட்டுற மாதிரி தெரியலையே... நக்கல் பண்ணுற மாதிரில்ல இருக்குதுங்க அம்மணி..!!:icon_rollout::icon_rollout::icon_rollout:
ஹையோ... சுகு.... உன்னை கொஞ்சம் ஓட்டலாம்னு பார்த்தேன்.. :rolleyes::fragend005:

உனக்கு நக்கல் மாதிரி தெரியுதா.... போச்சு போ... நீ தான் என்னை மறந்துட்டே சுகு..... :traurig001::traurig001:
 
எப்பவும் பூவுன்னு தானே கூப்பிடுவ...... :smilie_abcfra:
நான் பூன்னு கூப்பிடுற ஒரு பொண்ணு ஆறு மாசத்துக்கு முன்னாடி எங்கயோ காணாம போய்ட்டா... வேணும்ன்னா உங்களை நான் பூவக்கான்னு கூப்பிடட்டுமா..??:fragend005::fragend005::fragend005:
உனக்கு நக்கல் மாதிரி தெரியுதா.... போச்சு போ... நீ தான் என்னை மறந்துட்டே சுகு..... :traurig001::traurig001:
உங்களை யாருன்னு எனக்கு தெரியாதுங்கிறேன்... நீங்க என்னடான்னு நான் மறந்துட்டேன் அப்படி இப்படின்னு.. ரொம்பவே காமடி பண்ணுறீங்க போங்க..!!:wuerg019::wuerg019::wuerg019:
 
உண்மைதான் சுகு.... சிறு வயதிலிருந்தே நானும் சாமி ஆடியவர்களையும் பேய் பிடித்திருப்பதாக சொல்பவர்களையும் நிறையவே பார்த்திருக்கிறேன்.....
ஆனால் பேயை நேரில் கண்டதில்லை.. சாமியை நேரில் கண்டதில்லை.....
இந்த உலகம் அமானுஷ்யங்கள் நிறைந்தது.....
முதலில் உலகம் யாரால் தோன்றியது மனிதனை யார் தோற்றுவித்தது...
இதற்கே இன்னும் விடை தேடி கொண்டிருக்கிறோம் எனை கேட்டால்
ஒரு நல்லது இருக்குமாயின் கேட்டது கண்டிப்பாக இருந்தேயாக வேண்டும்........ கடவுள் இருக்கிறார் என்று பலமாக நம்புகிறவன் நான்........ அவர்தான் நம்மை ஆட்டு வித்துக் கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை...... இவ்வுலகில் விஞ்ஞானம்...... மெய்ஞானம் ஜோதிடம் ஜாதகம் இதெல்லாம் உண்மை என்றால் இவையும் உண்மையே..... பில்லி சூனியம்.... மந்திரம் தந்திரம் இவையும் உண்மை தான்....... யாராலும் எதையும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியாது இலையென்று ஆணித்தரமாக சொல்லி விடவும் முடியாது
ஏன்எனில் இறைவன் நமக்கு அதர்க்கு
அதிகாரம் வழங்கவில்லை.....தான் இருக்கும் இந்த உலகில் பேயையும்
நடமாட விட்டிருப்பவர் இதே கடவுள்தான்.

பேய் இல்லை என்றால் இந்நேரம் இப்படி ஒரு விஷயத்தையே நாம் பேசிக்கொண்டிருந்திருக்க
மாட்டோம்....... அதர்க்கு கடவுள் நமக்கு வாய்ப்பே தந்திருக்க வேண்டியதில்லை........
கடவுள் நமக்கு அளித்த விடை தெரியா தேடல்களில் இதுவும் ஒன்றாக வைத்து விட்டார்.....................
 
அமரன் தம்பி,

அப்பதிவை படித்தேன், மனம் கனத்து விட்டது.

ஆவிகள் இருப்பது உண்மையானால் இறந்த தமிழர்களின் ஆவிகள் மகிந்தாவை கிழித்து ரத்தம் குடித்திருக்கும்.
 
Back
Top