gragavan
New member
விடுதலை
விடுதலை என்ற தலைப்பில் தேன்கூடும், தமிழோவியமும் நடத்திய போட்டியில் நீங்கள் எனக்கு...இல்லையில்லை..என்னுடைய கதைக்கு இரண்டாம் பரிசு வாங்கித் தந்தீர்கள் அல்லவா. அதற்காக தமிழோவியத்தில் சிறப்பு ஆசிரியராக இருக்கப் பணித்தார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சில பதிப்புகளை இட்டுள்ளேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அருட்பெருங்கோவைத்தெரிந்திருக்கும் அனைவருக்கும். காதலை வாங்கி முத்தம் கொடுக்கிறவர். கவிதைப் பித்தன். அதிலும் மையல் ததும்பும் கவிதைகளை அள்ளித் தெளிக்கின்ற கவிஞர். காதற் குளியல் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதைக் குளியல் இங்கே.
நான் எழுதிய வலைப்பதிவுகளில் சிறந்தது என்று கேட்டால் எனக்குத் தெரியாது. அனைத்தும் எனது பூக்கள். பாகுபாடு கிடையாது. ஆகையால்தான் ஐம்பது நூறுக்கெல்லாம் பதிவு போடவில்லை. என் பிள்ளைகள் அனைவரும் எனக்கு ஒன்றுதான். ஆனாலும் படிக்கின்றவர்களின் பார்வையில் சில பதிவுகள் என்ற வகையில் சில பதிவுகளை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.
பாரு பாரு நல்லாப் பாரு பயாஸ்கோப்பு படத்தப் பாரு....ஆமாங்க நான் எடுத்த சில புகைப்படங்கள். உங்கோளோடு இங்கே பகிர்கிறேன்.
காதல்...மனிதனுக்கு மட்டும் வருமா? விலங்குகளுக்கும் வருமா?இங்கே ஒரு காட்டிற்கே வந்திருக்கிறதே! படித்துப் பாருங்கள். படிக்கப் படிக்க மயக்கும் என்பதற்கு உத்திரவாதம்.
அடுப்படியில் வந்திருக்க வேண்டிய குறிப்பு இது. அசைவக் குறிப்பு. பெயர் கோசணி. இங்கே கிடைக்கும். இது என்னுடைய கண்டுபிடிப்பு. என் நண்பர்கள் பலர் மெச்சிய குறிப்பு.
ஜிரா என்றால் தமிழ் இல்லாமலா? முருகன் இல்லாமலா? இதோ...திருக்குற்றாலக் குறவஞ்சி இங்கே.
வாய்ப்பளித்த தமிழோவியத்திற்கும் தேன்கூட்டிற்கும் வலைப்பூ நண்பர்களுக்கும் மீண்டும் என் நன்றி பல.
அன்புடன்,
கோ.இராகவன்

Last edited by a moderator: