உபுண்டுவா... விண்டோஸ்-7..ஆ?

தொடுப்புக்கு நன்றி. பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்.
 
சாளரம் XP, சாளரம்7 இவற்றில் எது சிறந்தது? சாளரம்7 ஐ வன் தட்டில்
பதிவதற்குக் கணினியை எவ்வாறு நெறிப்படுத்த வேண்டும்?இரண்டு
சாளரங்களையும் ஒரே வன் தட்டில் எவ்வாறு பதிவது?இவ்விரண்டையும்
விட உபுண்டு சிறந்ததா?
 
ஐயா,
இப்பகுதியின் நோக்கம் லினக்ஸை குறித்து மக்களிடையே விழிப்புணர்வைத் தர வேண்டும் என்பதே.
சாளரம் 7, சாளரம் எக்ஸ்.பி போன்ற இயங்குதளங்கள் வணிக நோக்கத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை; செய்யப்படுபவை. லினக்ஸ் இயங்குதளம் முழுக்க இலவசமானது.

சாளரங்களை விட லினக்ஸ் இயங்குதளம்தான் சிறந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து. உபுண்டு என்பது பலவகை லினக்ஸ் வெளியீடுகளில் ஒன்று. எனது கணினியில் நானும் உபுண்டுவை நிறுவி இருக்கிறேன். பயன்படுத்திப்பார்ப்பவர்கள் கண்டிப்பாக வேறுபாட்டை உணர்வார்கள். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். நன்றி.
 
இது மற்ற மென்பொருட்களுக்கு ஆதரவு (support) தருமா? மைக்ரோசாஃப்ட் மென்பொருட்கள் உட்பட.
 
இது மற்ற மென்பொருட்களுக்கு ஆதரவு (support) தருமா? மைக்ரோசாஃப்ட் மென்பொருட்கள் உட்பட.

லினக்ஸ் இயங்குதளமும், விண்டோஸ் இயங்குதளமும் வேறு வேறானவை. லினக்ஸில் விண்டோஸ் மென்பொருட்களுக்கு இணையான மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கப்பெறுகின்றன. இருப்பினும் மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களை கையாள ”வைன்” போன்ற் மென்பொருட்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். லினக்ஸ் பகுதி திரிகளைப் படித்துப்பாருங்களேன்.
 
காணொளி உண்மையை மிக அழகாக காட்டுகிறது..

திறந்த மூல மென்பொருட்கள் பல கிடைக்கும் போது விலை கொடுத்தோ திருட்டுத்தனமாகவோ சிலவற்றை உபயோகிப்பானேன்???

இத்தனக்கும் திறந்த மூல மென்பொருட்கள் மிக நேர்த்தியாக உள்ளன..
 
ஒயின் வைத்து போட்டாசாப் பணன்படுத்துகையில் பல ஷாட்கட் கீகள் வேலை செய்யவில்லை - உதவி தேவை....
அதே போல் உபுண்டு-வில் பாமினி பாண்டுபோல் யூனி கோடில் தட்டச்சு செய்ய உதவி தேவை...
 
போட்டோ-ஷாப்பை ”வைன் டோர்ஸ்” ஒத்திசைப்பதாக என்னுடைய தேடுதல் முடிவு தெரிவிக்கிறது. முயன்று பாருங்கள்.

Code:
 [URL]http://sourceforge.net/projects/winedoors/[/URL] 
 
நிறுவுதலைக்குறித்து அறிய
 
[URL]http://blog.andreaolivato.net/open-source/3-steps-photoshop-cs2-installation-on-linux.html[/URL]
 
இத்தகவலை தந்த நண்பர் மயூரனுக்கும் அவரது வலைப்பூவிற்கும் நன்றி.

------------------------------------------------------------
உபுண்டு 11.04 இல் தமிழ் வசதிகளை நிறுவுவதற்கான கையேடு


[Computer Today மே மாத இதழுக்காக எழுதிய கையேடு]

பொதுவாக எமக்குத்தேவையான வசதிகள்:

1. தமிழில் எழுதும் வசதி (பாமினி வடிவத்த்தில் தட்டி யுனிகோடில் எழுதுதல், தமிழ் 99, ஆங்கில ஒலிப்பியல், ரெங்கநாதன் வடிவம்)

2. எழுத்துருக்களை நிறுவிக்கொள்ளுதல்

3. தமிழ் இடைமுகப்பு (Tamil Interface)

== தமிழில் எழுதும் வசதி ==
இதற்கு முதலில் தமிழ் உள்ளீட்டமைப்புக்களைக் கொண்டிருக்கும் m17n பொதியினை நிறுவிக்கொள்ள வேண்டும்.
பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

1. கணினியை இணையத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.



2. படத்தில் காட்டியுள்ளவாறு Terminal ஐ திறந்துகொள்ளுங்கள்.

3. Terminal இனுள் பின்வரும் ஆணையை வழங்கி உங்கள் மென்பொருட் களஞ்சியத்தைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள். கடவுச்சொல் கேட்டால் உங்கள் பயனர் கடவுச்சொல்லைக் கொடுங்கள்.

sudo apt-get update4. m17n பொதிகளை நிறுவுவதற்கான ஆணையை வழங்குங்கள்.

sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n5. அடுத்து ibus கட்டகத்தை அமைத்துக்கொள்ளவேண்டும். இதற்கு ibus-setup எனும் மென்பொருள் உதவும். . (இதனை Applications பட்டியலிலிருந்தே பெறலாம் என்றாலும் வசதிக்காக terminal வழியாகச் செய்வதற்குச் சொல்லித்தருகிறேன்). பின்வரும் ஆணையை வழங்குங்கள்.

ibus-setup





(படத்தில் காண்பிக்கப்பட்டபடி அது கேட்கும் கேள்விகளுக்கு “ஆம் (OK) ” என்று பதிலளித்துவிடுங்கள்).



படத்தில் காட்டியுள்ளவாறு திறக்கும் சாளரத்தில் “Input Method” என்கிற கீற்றினை (Tab) திறவுங்கள்.



படத்தில் காட்டியபடி “Select input method” என்பதைச்சொடுக்கி உங்களுக்குத்தேவையான தமிழ் உளீட்டமைப்பை “add” செய்துகொள்ளுங்கள்.




(தமிழ் உள்ளீட்டமைப்புக்கள் எதுவும் காணப்படவில்லையாயின் ஒருமுறை Logout செய்து பின் Login செய்த பின் முயன்று பார்க்கவும்.

6. ibus கட்டகம் நீங்கள் கணினியைப்பயன்படுத்தத்தொடங்கும்
போதே இயங்கத்தொடங்கிவிடுவது வசதியானது. அதற்கு பின்வரும் ஆணையை terminal இல் வழங்குங்கள்.

im-switch -s ibusஅவ்வளவுதான். நீங்கள் கணினியை மீளத்தொடங்கியபிறகு வலை உலாவி தொடக்கம் Word Processor வரை எல்லா மென்பொருட்களிலும் தமிழை உள்ளிடமுடியும்.
தமிழ் விசைப்பலகையைப் பெற்றுக்கொள்ள CTRL + SPACE விசைகளை அழுத்துங்கள். மறுபடியும் அதே விசைகளை அழுத்தினால் ஆங்கில விசைப்பலகையைப்பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீட்டமைப்பு / விசைப்பலகை வடிவங்களைத் தெரிவு செய்து வைத்திருந்தால் படத்தில் காட்டியவாறு அவற்றைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

== பாமினி ==
பொதுவாகத் தமிழ்ப்பயனர்கள் பயன்படுத்தும் விசைப்பலைகைகள் யாவும் m17n-contrib, m17n-db பொதிகளுக்குள் அடக்கப்பட்டிருக்கும். ஆனால் பாமினி வடிவம் அதில் உள்ளடக்கப்படவில்லை.
பாமினி வடிவத்தில் யுனிகோடை தட்டெழுத விரும்புபவர்கள் இதற்கென தனியாக உளீட்டமைப்பை நிறுவிக்கொள்ளவேண்டும்.
இதற்காக “பாலினி” என்ற உள்ளீட்டமைப்பை வடிவமைத்துள்ளேன்.
அதனைத் தரவிறக்கிக்கொள்ள பின்வரும் ஆணையை terminal இல் வழங்குங்கள்.

wget http://mmauran.net/downloads/ta-balini.mimதரவிறக்கி முடித்ததும் அக்கோப்பினை m17n அடைவிற்கு அனுப்ப வேண்டும்.

அதனைச்செய்ய, பின்வரும் ஆணையைச் செயற்படுத்துங்கள்
sudo cp ta-balini.mim /usr/share/m17n/ஒருமுறை கணினியை logout செய்து மறுபடி login செய்யுங்கள்.

முன்னரே காண்பித்தபடி ibus-setup மென்பொருளைப்பயன்படுத்தி பாலினி விசைப்பலகையை add செய்துகொள்ளுங்கள்.

==எழுத்துருக்கள் ==
தமிழுக்கென யுனிகோடு, திஸ்கி, TAM, TAB எழுத்துருக்கள் பல உபுண்டுவில் இயல்பிருப்பாகவே நிறுவப்பட்டிருக்கும்.
அவற்றுக்கு மேலதிகமாக நீங்கள் எழுத்துருக்களை நிறுவிக்கொள்ள வேண்டுமானால் அதற்கு சிரமப்படவே வேண்டியதில்லை. எழுத்துருக்களை நிறுவுதல் லினக்சில் இப்போதெல்லாம் மிகவும் எளிமையானது.

எழுத்துருவின் மீது இருமுறை சொடுக்கி (Double Click) அதனைத் திறந்துகொள்ளுங்கள்.
“Install Font” என்பதை அழுத்துங்கள்.
அவ்வளவுதான்



==தமிழ் இடைமுகப்பு ==
1. Applications Menu வினுள் “Language Support” எனும் மென்பொருளை தெரிவு செய்து திறவுங்கள்.



2. படத்தில் காட்டியபடி “Install new Language” என்பதைச் சொடுக்கி தமிழை நிறுவிக்கொள்ளுங்கள்.



3. நிறுவல் முடிந்ததும் languages பட்டியலில் தமிழ் இருக்கக் காண்பீர்கள். “தமிழ்” என்பதை அப்படியே தூக்கிக்கொண்டுவந்து பட்டியலில் முதலாவதாக விட்டுவிடுங்கள் (Drag and drop)

4. “Apply system wide” என்பதைச்சொடுக்குங்கள்.
அடுத்ததடவை நீங்கள் Login செய்யும்போது உங்கள் கணினி முழுமையாகத் தமிழில் காட்சியளிக்கும்.
 
Back
Top