பதில் தாருங்கள்: பார்வை பற்றிய ஒரு கேள்வி!

mkmaran

New member
பதில் தாருங்கள்: பார்வை பற்றிய ஒரு கேள்வி!

மன்றத்து நண்பர்களுக்கு,

ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை:rolleyes: )

கேள்வி இதுதான்:

1.

நாம் ஒரு காட்சியை காணும்போது
பிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்
மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
(அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)

2.

நமது உடலின் வலது பாகத்தை இடபக்க மூளையும்
இடதுபாகத்தை வலபக்க மூளையும் இயக்குகிறது.

இவை பள்ளி பாடத்தில் படித்தது.
இதற்கான காரணம் தெரியவில்லை.

இது பற்றி 90'களில் வாசகர் ஒருவர் சுஜாதா அவர்களிடம் கேட்டபோது மருத்துவர்களின் விடைகாண முடியாத கேள்விகளில் இவைகளும் அடங்கும் என்று கூறியதாக எனக்கு நியாபகம்.

இது சம்பந்தமாக மன்றத்தின் நண்பர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். அதன் மூலம் எனக்கு பதில் கிடைக்கலாம்!

இந்த பதில்கள் எனக்கு பயன்படகூடியது. அது பற்றி பிறகு கூறுகிறேன்!
 
Last edited:
mkmaran said:
மன்றத்து நண்பர்களுக்கு,

ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை:rolleyes: )

கேள்வி இதுதான்:

1.

நாம் ஒரு காட்சியை காணும்போது
பிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்
மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
(அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)

2.

நமது உடலின் வலது பாகத்தை இடபக்க மூளையும்
இடதுபாகத்தை வலபக்க மூளையும் இயக்குகிறது.

இவை பள்ளி பாடத்தில் படித்தது.
இதற்கான காரணம் தெரியவில்லை.

இது பற்றி 90'களில் வாசகர் ஒருவர் சுஜாதா அவர்களிடம் கேட்டபோது மருத்துவர்களின் விடைகாண முடியாத கேள்விகளில் இவைகளும் அடங்கும் என்று கூறியதாக எனக்கு நியாபகம்.

இது சம்பந்தமாக மன்றத்தின் நண்பர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். அதன் மூலம் எனக்கு பதில் கிடைக்கலாம்!

இந்த பதில்கள் எனக்கு பயன்படகூடியது. அது பற்றி பிறகு கூறுகிறேன்!



சபையில் இருக்கும் சான்றோர்களே வணக்கம்

:) உங்களில் யாராவது இந்த கேள்விக்கு விளக்கம் அளித்தால் நல்லது.
நமக்கு பயனுள்ளதாக இருக்கும் :)


ஓவியா
 
ஓவியா said:
சபையில் இருக்கும் சான்றோர்களே வணக்கம்

:) உங்களில் யாராவது இந்த கேள்விக்கு விளக்கம் அளித்தால் நல்லது.
நமக்கு பயனுள்ளதாக இருக்கும் :)


ஓவியா
முதலில் நீங்கள் சொல்லுங்கள்.. பிறகு நாங்கள் சொல்லுகிறோம்
 
mkmaran said:
மன்றத்து நண்பர்களுக்கு,

ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை:rolleyes: )

கேள்வி இதுதான்:

1.

நாம் ஒரு காட்சியை காணும்போது
பிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்
மூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே
மூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.
(அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது)
கண்ணில் தலைகீழாகவும் மூளைக்குள் நேராகவும் மறுவதாக ஞாபகம்
 
சுபன் said:
கண்ணில் தலைகீழாகவும் மூளைக்குள் நேராகவும் மறுவதாக ஞாபகம்
மிகச்சரி. விழித்திரையில் தலைகீழாக விழும் ஒளிப்படிவத்தை மூளை நேராகப் புரிந்து கொள்கிறது.
 
இளசால் இதற்க்கு நல்ல பதில் கொடுக்க முடியும் என்பது என் கருத்து.... நானும் இதே மாதிரி ஒரு கேள்வியை "தெரியாததை கேளுங்கள்" பகுதியில் கேட்டுபுட்டு காத்திருக்கிறேன்...

இளசு ஜூன் துவக்கத்தில் வருவதாக கூறி இருந்தாரே....
 
விழித்திரையில் விம்பம் தலைகீழாக வீழ்ந்தாலும் அது மூளையால் நேராக உணரப்படுகின்றது.
 
1) விழித்திரை ( ரெட்டினா) ஒரு சட்டியின் உள்பக்கம் போல் குவிந்து உள்ளது. இடப்பக்கக் காட்சிகள் ஒளிக்கதிராய் திரையின்
வலப்பக்கமும், வலப்பக்கக் காட்சிகள் இடப்பக்கமாகவும் விழும்.
அதே போல் மேல், கீழும் மாறி விழும். காரணம் லென்ஸில் நிகழும் ஒளி விலகல்.

இந்தச் சேதிகளை எடுத்துச் செல்லும் ஆப்டிக் நரம்புத்தொகுப்பு ஒரு முறை சரியாக பல்டி அடித்து மூளையில் விழுவதால்...

இரு பல்டிகளில் எல்லாம் நேராகி விடுகிறது.


2) வலப்பக்க உடம்பின் செயல்களை இயக்கும் நரம்புகள் இடப்பக்க மூளையில் புறப்பட்டு மெடுல்லா என்னும் மூளைத்தண்டில் சைடு மாறி விடுகிறது. அதே போல் மறுபக்கமும்.

வலது கைகால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டால், மூளை ஸ்கேன் இடப்பக்கத்தில் நோய் காட்டும்.

இடப்பக்க மூளையில்தான் பெரும்பாலானவருக்கு பேச்சு மையம் உள்ளது. அதனால் வலது கை பாதிக்கப்பட்டோருக்கு பேச்சிழக்கும் அபாயமும் உண்டு.. ( எம்ஜிஆரின் கடைசிக்காலங்கள்..)


ஏன் இப்படி மாறி மாறி கட்டுப்பாடு? என்ன பரிணாமக் காரணங்கள்?

தெரியவில்லை.
 
இமைகள மூடினால் முன்னால் தெரிந்த உலகம் சட்டென மறைந்து போகிறது. ஓர் இமை மூடலில் காணாமல் போகும் உலகத்தை உங்களுக்குக் கண்டுபிடித்து தருவது எது?

நிச்சயம் அது இமையல்ல. பின் எது? பதிலைச் சொல்லும்முன் ஒரு சிறிய கதை.

உடலில் ஆடையில்லாமல் திகம்பரராய் ஆற்றங்கரையைக் கடந்து கொண்டிருந்தார், சுகப்பிரம்மம். அங்கு குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்கள் அவரை ஒரு பொருட்டாய்க் கருதவில்லை. ஆனால் அடுத்த நொடியே நிலைமை தலைகீழானது.

வாலிபன் சுகப்பிரம்மத்தின் தந்தை வியாசர், அதே இடத்திற்கு வந்தார். குளித்துக் கொண்டிருந்த பெண்கள் பதறியடித்துக் கொண்டு ஆடைகளைத் தேடி ஓடினர்.

நிகழ்ந்த அத்தனையும் பார்த்த வியாசர் வியர்த்துப் போனார்.

??என்ன இது! என் மகன் இளைஞன். அதுவும் ஆடையில்லாமல் உங்களைத் தாண்டிச் செல்லும்போது கூச்சமில்லாமல் கும்மாளமடித்தீர்கள்.

நான் முதிர்ந்தவன். பண்பானவன். என்னைப் பார்த்ததும் இப்படிப் பதறியடித்து ஓடுகிறீர்களே! என்ன காரணம்??? என குழப்பத்தோடு கேட்டார்.

அதற்கு அப்பெண்கள், ??உங்கள் மகனின் கண்கள் வேறு. உங்கள் கண்கள் வேறு?? என்றார்கள்.

??அப்படியென்றால்??? _கேட்டார் வியாசர்.

பெண்கள், ??உங்கள் பார்வயில் ஆண், பெண் என்ற வித்தியாசம் தெளிவாய்த் தெரிகிறது. அது எங்களை உறுத்கிறது!?? என அவர்கள் சொன்ன பதிலில், வியாசர் ஆடிப்போனார்.

வியாசரையே ஆடிப்போக வைக்குமளவு சக்தி வாய்ந்தது ?கண்பார்வை.?

நம்மில் பெரும்பாலோர் எதிரில் இருப்பவரின் முகத்தைக் கூடப் பார்த்துப் பேசுவதில்லை.

பேசிக்கொண்டிருப்பவரைக் கவனிக்காமல் அவருடைய உடை,கை, கால் அசைவுகளைக் கவனிப்போம்.

இன்னும் சிலர், பேசிக்கொண்டே எழுதுவது, படிப்பது, போனில் உரையாடுவது என்று வேறு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.

இவ்வாறு செய்வதால் அதிகபட்சம் கருத்ப் பரிமாற்றம் (இன்ஃபர்மேஷன் ஷேரிங்)

மட்டுமே நடக்கும். ஆனால் அடிப்படையான உணர்வுகளின் ஆத்மார்த்தமான பரிமாற்றம்

அங்கு நடபெறாது.

கணவன்_மனைவிக்குள், பெற்றோர் _ குழந்தைகளுக்குள், நண்பர் _ உறவினர்களுக்குள், ஆசிரியர் _ மாணவர்களுக்குள் வரும் எல்லா சச்சரவுகளுக்குமான விரிசல் இங்குதான் விழ ஆரம்பிக்கின்றன.

அந்த விரிசல்தான் பிறகு நாளாக நாளாகப் பெரிதாகி, விழுந்தால் எழமுடியாத அளவிற்கு ஆழமான மரணப் பள்ளத்தாக்காகிறது.

நன்றாக ஆராய்ந்தால் தெரியவரும் உண்மை: ??இது நம் அலட்சிய மனோபாவத்தால் வரும் பிரச்னை மட்டுமே!??

குரங்கை விட்டு வாலைப் பிடிக்கக்கூடாது. அலட்சியம் தலைதூக்கும்போதே அதை அலட்சியம் செய்து விடுங்கள்.

உறவுகளிடமிருக்கும் விரிசல்கள் தானாய் ஒட்டிக்கொள்ள ஆரம்பிக்கும் அதிசயங்களைக் காண்பீர்கள்.

கண்களோடு கண்கள் கலப்பதேயில்லை. நெருங்கிய உறவினர்களைக் கூட நாம் ஆழமாகப் பார்ப்பதில்லை. ஆழமாகப் பார்ப்பது வேறு. அடுத்தவரை ஊடுருவது வேறு.

சுகப்பிரம்மம் ஆழமாய்ப் பார்த்தார். அன்பாய்ப் பார்த்தார். ஆனால் வியாசரின் பார்வயோ ஊடுருவியது.

இன்னொரு உண்மை, பயந்தாங்கொள்ளிகளால் கண்ணுக்குக் கண் கூட பார்த்துப் பேச முடியாது.

கண்ணோடு கண் பார்ப்பது, கையோடு கை சேர்ப்பதை விட ஸ்பரிசமான, நெருக்கமானது.

இந்தச் செய்வதால் நீங்கள் அடையப் போகும் பலன்கள்.

1. நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு சக்தி கிடைக்கும். ஏனென்றால் நீங்கள் சொல்லும் கருத்தை எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்வார்கள்.

2. இதனால் உங்களால் நல்ல பேச்சாளராக முடியும். உங்களச் சுற்றி மக்கள் வசீகரிக்கப்படுவார்கள்.

3. உறவுகளிடம் சுமுகமான உறவு நீடிக்கும்.

4. இது உங்கள் தனித்துவத்தைத செம்மைப்படுத்தும்.

நன்றி குமுதம்.
 
ஓவியா, அறிஞர், சுபன், G.ராகவன், பெஞ்சமின், மயூரேசன், இளசு அனைவருக்கும் எனது நன்றிகள்.

வேலைபளுவின் காரணமாக தாமதமாக பதிலலிப்பதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

மிகவும் தெளிவான விளக்கம் தந்தமைக்கு திரு.இளசு அவர்களுக்கும் எனது பிரத்தியேகமான நன்றி!

இனியவன் உங்களின் பதிலுக்கும் நன்றி!


03:49PM SG
 
மன்னிக்கவும்
ஒரு அன்பு கட்டளை

நன்பரே பளு இருக்கதான் செய்யும்,
இருந்தாலும் அடிக்கடி மன்றம் வர முயற்ச்சி செய்யுங்கள்....

வாழ்த்துக்கள்
 
நண்பர்கள் ஓவியா, இனியவன், மாறன் -

உங்கள் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி.


(சார், ஐயா, திரு போன்ற அடைமொழிகளை தவிருங்கள் நண்பர்களே.. வெறும் பெயர் சொல்லி அழைத்தாலே போதும்..

அந்த பிணைப்பைத் தருவதே இணையம்..)
 
அருமையான தகவல்
கண்ணீன் பலன் நன்றாக அறிந்து கொண்டேன் நன்றி
இளசு அண்ணா இனியவன் அவர்களே
 
சினிமா தியேட்டரிலேயே பிலிமை தலைகீழாகத்தான் ஓட்டுகிறார்கள். ஆனால் நமக்கு படம் நேராக தெரிகிறதே.
 
என்னமா உதாரணம் காட்றாங்க...
தம்பி..தங்க கம்பி
 
அதுதான் படைப்பின் இரகசியம்.இடவல மாற்றம் என்பது பல விஷயங்களில் தவிர்க்க முடியாததாகி விடுகிறதே.
 
10ம் வகுப்பில் படிதது மற*ந்தது. தெளிவாக இப்பொது புரிகிறது. நன்றி
 
'கிட்னி' பாதிப்பு எவ்வாறு அறிவது?

அனைவருக்கும் அன்பான வணக்கம்.

"கிட்னி"" பாதிப்பு எவ்வாறு அறிவது? அதன் நிலைகள் யாவை? அதை குறைக்க முடியுமா? எவ்வாறு? இனிப்பு நீர் நோய் உள்ளவர்களுக்கு எவ்வாறு தற்காக்கலாம்?

என் தாயாருக்கு 'கிட்னி' பிரச்சனை அரம்ப கட்டத்தில் உள்ளது. அவருக்கு இனிப்பு நீர் மற்றும் இருதய நோய் உள்ளது. அவரின் வயது 59.

தங்களின் பதில் பலருக்குப் பயன் தரும்.


இக்கண்,

இராமகிருஷ்ணன்.
மலேசியா.
இன்பமே சூழ்க! என்னோரும் வாழ்க!
 
Back
Top