Keelai Naadaan
New member
மிக்க நன்றி ஆதி அவர்களே.
தமிழுக்குத் தாலாட்டை தாமரையே தந்தீர்
அமிழ்தி னுமருமை அஃது
நன்றி ஹெகா அவர்களே...நான் சரியாகக் கவனிக்கவில்லை. இன்றுதான் இந்தப் பின்னுட்டத்தில் என்னையும் குறித்து நீங்கள் எழுதியுள்ளதைக் கவனித்தேன்.அடேங்கப்பா!!!
தமிழுக்கு தாலாட்டு என கவிதை எழுதி கிட்டதட்ட எட்டு வருடங்களாகிவிட்டது.
எழுதப்பட்ட காலத்தில் கவிதை கண்டு கொள்ளபடவில்லையென்பது தாமரை அவர்களின் முதல் பின்னூட்டத்திலிருந்து தெரிகிறது. அதன் பின் பலவிதங்களில் ஆராய்ச்சிக்குரியதாகி 2008, 2010 ஆண்டுகளில் ஒரிருவரின் பின்னூட்டதோடு இதோ இன்று டாக்டர்.சுந்தராராஜ் தயாளன் அவர்களின் பாராட்டுதலால் மேலெழுந்து நிற்கும் தாமரையின் தாலாட்டு மிக மிக அருமை.
வணங்குகிறேன் ஐயா.