அமுத வாக்கு..

பரஞ்சோதி said:
தீயினைத் தேடி சென்று மாயும் விட்டில் பூச்சியாக நாம் இருந்தால் வாழ்வில் வெற்றியே கிடையாது.
சிற்றின்பங்களை.. தேடி அலைபவர்கள் பற்றி தெளிவாக சொல்கிறதோ....
 
பரஞ்சோதி said:
தீயினைத் தேடி சென்று மாயும் விட்டில் பூச்சியாக நாம் இருந்தால் வாழ்வில் வெற்றியே கிடையாது.

நண்பரே, இதில் தீயின் மீது தவறேதும் இல்லையல்லவா!
 
பரஞ்சோதி said:
நன்றி சகோதரி, மிகவும் நல்ல வாக்கு.

இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பொருந்தும்.

தீயினைத் தேடி சென்று மாயும் விட்டில் பூச்சியாக நாம் இருந்தால் வாழ்வில் வெற்றியே கிடையாது.

இது தீயின் தவறும் அல்ல. விட்டிலின் தவறல்ல. இருள்தான் காரணம். பகலில் எறியும் விளக்கின் தீபத்தை தேடி விட்டில்கள் செல்வதில்லை. அதுபோலத்தான் மனித வாழ்வும். ஆண்டவன் அருள் என்னும் வெளிச்சம் உள்ளவரை தவறேதும் நிகழ்வதில்லை. மாறாக இருளை நோக்கி செல்லும் போது அழிவும் ஏற்படுகிறது....
 
நண்பர்களின் கருத்துக்கள் கொண்டு விவிலிய வசனங்களுக்கு புதிய தெளிவுரையே எழுதலாம் போல் தோன்றுகிறது...நல்ல கருத்து பகிரல்கள்..நன்றி அனைவருக்கும்..
 
பிரியன் said:
ஆண்டவன் அருள் என்னும் வெளிச்சம் உள்ளவரை தவறேதும் நிகழ்வதில்லை. மாறாக இருளை நோக்கி செல்லும் போது அழிவும் ஏற்படுகிறது....

மிகவும் சரியாகச் சொன்னீர்கள் பிரியன்.. இறைவன் தேவையில்லை என்ற எண்ணம் தொன்றிவிட்டால் மனித வாழ்வு அவ்வளவுதான்..ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு..

கடவுள் என்னோடு இருக்கும்வரை நாந்தான் நாயகன்..
கடவுள் இல்லையானால் நான் ஒன்றுமில்லாதவன்..

(With God i am Hero.. Without God i am Zero)
 
பரஞ்சோதி said:
இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பொருந்தும்.

பரங்சோதி அண்ணா..நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் அல்லவா...மேலும் நம் அம்மாவைக் கேட்டுப்பாருங்கள்..நமக்கு 3 குழந்தைகள் பிறந்த பிறகும் நம்மைப் பார்த்து "என் பிள்ளை குழந்தைமாதிரி" என்றுதான் கூறுவார்கள்.. அப்படித்தான் இதுவும் அண்ணா..ஒரு விளிச்சொல்...
 
இன்றைய அமுதவாக்கு..

தீய வழியில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே..அந்தப்பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்..
 
thempavani said:
தீய வழியில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே..அந்தப்பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்..
நல்ல வழியில் சேர்த்து... நலமாக வாழ்வோம்.. நன்றி தேம்பா....
 
இன்றைய அமுதவாக்கு..எவர் எனக்குச் செவி கொடுக்கின்றார்களோ அவர்கள் தீங்கின்றி வாழ்வர்.. தீமை வருகையிலும் அச்சமின்றி அவர் மன அமைதியுடன் இருப்பர்.
 
thempavani said:
இன்றைய அமுதவாக்கு..

தீய வழியில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே..அந்தப்பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்..
நல்ல கருத்து தேம்பா.
இது பற்றித் திருக்குறளும் சொல்கிறது.
சலத்தால் பொருள் செய்தே வாழ்தல் பசுமட்
கலத்துள் நீர்பெய்திரீஇ அற்று

அதாவது, தீய வழியில் ஈட்டிய பொருட்கள் பச்சை மண்பாத்திரத்தில் பெருக்கிய நீரைப் போல. தானும் அழிந்து சேர்ந்தானையும் அழித்து விடும். பச்சை மண்பாத்திரத்து நீர் பாத்திரத்தை அழித்துத் தானும் மண்ணில் கலந்து வீணாகும்.
 
gragavan said:

நன்று அண்ணா..அருமை...திருக்குறளைப் படிக்கும்போதெல்லாம் விவிலியக் கருத்துக்கள் பல நமது திருக்குறளில் கூறப்ட்டிருப்பதாகத் தோன்றும்...தாங்களும் அந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறீர்கள்...நன்றி..தொடருங்கள்..
 
அறிஞர் said:
மன நிம்மதியே மனிதனுக்கு முக்கியமானது... நன்றி தேம்பா...

உண்மைதான் அறிஞரே..மன நிம்மதிக்கு ஈடு இணை உலகில் எதுவுமே கிடயாது.தங்கள் கருத்துக்கு நன்றி..
 
இன்றைய அமுதவாக்கு..

பிள்ளாய்! நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி, என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள்..
 
இன்றைய அமுதவாக்கு..

செய்வத்தை நாடிப்போவதுபோல் ஞானத்தை நாடி, புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு. அப்போது ஆண்டவரிடம் கொள்ளூம் அச்சம் இன்னததென்பதை உணர்ந்து கொள்வாய்..
 
ஆம் அறிஞரே! ஆனால் இதைத் தேடுவோர் எல்லாம் தற்போது மிகவும் குறைவே என்று எனக்குத் தேடுகிறது...
 
thempavani said:
இன்றைய அமுதவாக்கு..

பிள்ளாய்! நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி, என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள்..
திருக்குறள் மிகவும் அருமையான ஞானநூல் சகோதரி. எல்லாரும் படித்துப் பயனடைய வேண்டியது இன்றைக்குத் தேவையானது.
 
gragavan said:
திருக்குறள் மிகவும் அருமையான ஞானநூல் சகோதரி. எல்லாரும் படித்துப் பயனடைய வேண்டியது இன்றைக்குத் தேவையானது.
தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா..
 
இன்றைய அமுதவாக்கு..நேர்மையாளருக்குத் துணை செய்ய ஆண்டவர் காத்திருக்கிறார்...மாசற்றவர்க்குக் கேடயமாய் அவர் இருக்கின்றார்,,,
 
Back
Top