அமுத வாக்கு..

thempavani

New member
வணக்கம் உறவுகளே..

நமது மன்றத்தில் ஆன்மீகம் பற்றிய தகவல்கள்.. விவாதங்கள் குறைவு என்று மன்ற நண்பர் ஒருவர் கூறியதாய் நியாபகம்.. அக்குறை தீர்க்கவே இம்முயற்சி...
இதில் விவிலியத்தின் நற்கருத்துக்கள் தினம் ஒரு வசனமாகப் பதிய நினைத்திருக்கிறேன்...கீதை, திருக்குரான் தெரிந்த அன்பர்கள் அப்புனித நூற்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாமே..
 
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் (நீதிமொழிகள்: 1:7 )
 
அடடே! தேம்பாவின் அவதாரம் அருமை. தேம்பா இதைத் தொடர்க. நானும் எனக்குத் தெரிந்த கருத்துகளை இடுகிறேன். நான் படித்த தமிழ் நூல்களில் நீ சொல்லும் விவிலிய வேதத்திற்கு இணையான சொற்டொடர்கள் இருந்தால் அவைகளையும் நான் இடுகிறேன். இறைவன் அருள் பொங்கட்டும்.
 
ஒருவித அச்சத்துடன்தான் அண்ணா இந்தப் பதிவைத் துவக்கினேன்...தங்கள் ஆதரவு உற்சாகம் அளிக்கிறது..நானும் விவிலியக் கருத்துக்களையும் திருக்குறளையும் ஒப்பிட்டு ஒரு பதிவு துவக்கலாம் என்று நினைத்துள்ளேன்... காலம் கனியட்டும்..பார்க்கலாம்..
 
அப்படி ஒரு அச்சத்தோடுதான் நானும் சொல்லச் சொல்ல இனிக்குதடாவைத் துவக்கினேன். இப்போ அச்சமெல்லாம் போயே போச்.....

ஆகையால் கருத்துகள் தருக. இறைவன் அருளால் எல்லாம் நன்றாக நடக்கும்.
 
thempavani said:

வெகு நாட்களாக உங்களை கேட்ட பகுதி.. ஆரம்பித்து விட்டீர்கள்.. வாழ்த்துக்கள். அனைவரும் நம் நண்பர்கள்.. இதில் எதுக்கு அச்சம்...
 
பாராட்டுகள் சகோதரி.

தினமும் நீங்க கொடுக்கும் நன்மொழிகளை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன், படிப்பதோடு இல்லாமல் அதை வாழ்க்கையில் கடைபிடிக்கவும் இருக்கிறேன்.

சுணங்காமல் தொடர்ந்து கொடுங்கள்.
 
thempavani said:
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் (நீதிமொழிகள்: 1:7 )

நல்ல நீதிமொழி சகோதரி.

கடவுள் பயம் இல்லை என்றால் மனிதன் கொடிய மிருகத்தை காட்டிலும் கொடியவனாகிறான்.

இன்றைய காலக்கட்டத்தில் கடவுளின் மீது இருக்கும் பயம் குறைந்து விட்டதோ என்று நினைக்கத் தோணுகிறது, அதே நேரத்தில் இயற்கை பேரழிவுகளை கண்டப்பின்பு மனிதன் மீண்டும் பயம் கொள்ளத் தொடங்கியிருக்கிறான்.
 
பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைபிடி..உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே..அவை உன் தலைக்கு அணிமுடி..உன் கழுத்துக்கு மணிமாலை..
(நீதிமொழிகள்: 1:8)
 
gragavan said:
அப்படி ஒரு அச்சத்தோடுதான் நானும் சொல்லச் சொல்ல இனிக்குதடாவைத் துவக்கினேன். இப்போ அச்சமெல்லாம் போயே போச்.....

ஆகையால் கருத்துகள் தருக. இறைவன் அருளால் எல்லாம் நன்றாக நடக்கும்.

ராகவன் அண்ணா தங்களது உற்சாகத்திற்கு மிக்க நன்றி..தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்..
 
அறிஞர் said:
வெகு நாட்களாக உங்களை கேட்ட பகுதி.. ஆரம்பித்து விட்டீர்கள்.. வாழ்த்துக்கள். அனைவரும் நம் நண்பர்கள்.. இதில் எதுக்கு அச்சம்...

நன்றி அறிஞரே... தொடர்ந்து பதிவு தருகிறேன்...
 
பரஞ்சோதி said:
பாராட்டுகள் சகோதரி.

தினமும் நீங்க கொடுக்கும் நன்மொழிகளை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன், படிப்பதோடு இல்லாமல் அதை வாழ்க்கையில் கடைபிடிக்கவும் இருக்கிறேன்.

சுணங்காமல் தொடர்ந்து கொடுங்கள்.

அண்ணா...தங்கள் பாராட்டு மிகவும் உற்சாகம் தருகிறது...நீங்கள் கீதாச்சாரம்(கீதா உபதேசம்-- பெயர் எது சரியெனத் தெரியவில்லை.,மன்னித்துக் கொள்ளுங்கள்.) கொடுக்க முயற்சிக்கலாமே...
 
Last edited:
அண்ணா... எனக்கு கீதாச்சாரத்தில் "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...." பகுதி மிகவும் பிடிக்கும்..வாழ்வில் பிரச்சனைகள் சூழும்போதெல்லாம் அடிக்கடி நினைக்கும் பகுதிகளுள் இதுவும் ஒன்று....

ஐந்து நிமிடம் அமைதியாய் இருந்து, இந்த பகுதியை இருமுறை அமைதியாக நினைத்துக் கொண்டால் போதும்..ஆழ்ந்த அமைதி கிடைக்கும்..

இப்பகுதி இணையத்தில் கிடைக்குமா? தெரிந்தால் சொல்லுங்கள்.. அச்செடுத்து வீட்டில் ஒட்டுவதற்குத்தான்...
 
மிக நல்ல தொடர். இனிமையாக இருக்கிறது; இதமாக இருக்கிறது. நன்றிகள். தொடருங்கள்.

===கரிகாலன்
 
என்னிடம் படமாக இருக்கிறது, அனுப்பி வைக்கிறேன்.

சகோதரி! எனக்கும் பிடிக்கும், நீங்களும் சொன்னது போல் நானும் எதையேனும் இழந்து, அது கிடைக்காது என்ற பட்சத்தில் படிப்பேன், ஆனால் எப்போவும் அதை படிக்க மாட்டேன், காரணம் அதை அடிக்கடி படித்தால் போராடும் (முயற்சி செய்யும்) குணம் போய் விடும்.

போராடத் தெரிந்தவன் தான் மனிதன், போராடினால் தான் வெற்றி கிடைக்கும், சாதனை படைக்க முடியும்.
 
thempavani said:
பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைபிடி..உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே..அவை உன் தலைக்கு அணிமுடி..உன் கழுத்துக்கு மணிமாலை..
(நீதிமொழிகள்: 1:8)

மிகவும் அற்புதமான நீதிமொழி.

தாய் சொல்லைத் தட்டாதே,
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.

நம்மை நல்வழி படுத்த தாயும், நல்ல வாழ்க்கைக்கு வழி காட்ட தந்தையும் தேவை.

தலைக்கு அணிமுடியும், கழுத்து மணிமாலையும் கிடைத்தால் அவன் தான் வெற்றி பெற்றவன்.

எனக்கு இரண்டுமே என் தாயார் மூலமாகத் தான் கிடைத்தது என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.
 
karikaalan said:
மிக நல்ல தொடர். இனிமையாக இருக்கிறது; இதமாக இருக்கிறது. நன்றிகள். தொடருங்கள்.

===கரிகாலன்

அண்ணா மிக்க நன்றி... தங்கள் வார்த்தைகள் உற்சாகமூட்டுகின்றன...
 
பரஞ்சோதி said:
என்னிடம் படமாக இருக்கிறது, அனுப்பி வைக்கிறேன்.

அண்ணா..மிக்க நன்றி பெற்றுக் கொண்டேன்...
 
இன்றைய அமுத வாக்கு..

பிள்ளாய் தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்.. நீ அவர்களுடன் போக இணங்காதே..அவர்கள் பதுங்கியிருப்பது அவர்களுக்கே ஊறு விளைவிக்கும் கண்ணியாகிவிடும்..
 
நன்றி சகோதரி, மிகவும் நல்ல வாக்கு.

இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பொருந்தும்.

தீயினைத் தேடி சென்று மாயும் விட்டில் பூச்சியாக நாம் இருந்தால் வாழ்வில் வெற்றியே கிடையாது.
 
Back
Top