இந்தியா − எவ்வளவு அழகு!! இந்த சொல்!!. இதன் மூலத்தை எனக்குத் தெரிந்த/படித்த வரை இங்கு சொல்கிறேன்.
இந்தியா என்பது ஒரு கி.மு 476க்கு முன்னால் பயன்படுத்தப்பட்ட* பழைய கிரீக் சொல், இது இங்கிலீஸிலிருந்து சிறிது வித்தியாசப்பட்டு உச்சரிக்கப் படுகிறது.
மேலும் விவரமாக செல்லும் முன், நாம் பாரசீகம் (தற்போது ஈரான் & ஈராக்) & கிரேக்கம் பற்றிக் கொஞ்சம் பேசுவோம். கிரேக்கர்களே நாகரிகத்தில் நன்றாக சிறந்து விளங்கிபோது, அவர்கள் அவர்களது நாட்டை வளமாக்கவும் அவர்களை சிறந்தவர்களா காண்பிக்கவும் அவர்களைச் சுற்றியிருந்த நாடுகளைப் பிடித்தார்கள். அதனால், நாகரிகம் எங்கும் பரவ ஆரம்பித்தது. அப்போது, பாரசீகத்திலும் பண்மையான் நாகரிகம் இருந்தது. பாரசீகம் இந்திய பிரதெசங்களுடன் நல்ல தொடர்பும் வைத்திருந்தது. அப்போதெ, இந்தியாவிலும் நல்ல மதிக்கத்தக்க வாழும் முறை, நாகரிகம் இருந்தது. பாரசீகம் மூலமாக இந்தியாவின் பெருமை கிரேக்கதில் எதிரொலித்தது. (இதையே நாம் சிந்துவெளி நாகரிகம் என படிக்கிறோம்) அதனால், கிரெக்கர்கள் பாரசீகம் மூலமாக சிந்து நதி பாயும் பகுதி வரை வந்து போய்க்கொண்டிருந்தார்கள். அலெக்ஸாண்டரும் இந்த வழியாகவே இந்தியா வந்து இந்தியாவைப் பிடிக்க ஆசைப்பட்டான். சரி விசயத்திற்கு வருவோம்.
கொஞ்சம் விவரமாக செல்வோம், நம் அனைவருக்கும் தெரிந்ததுபோல், சிந்து நதி எல்லோருக்கும் பிரசித்தம். அதை ஈரானியர்கள் அவர்களது பழைய ஃப்பார்சிய மொழியில் "சிந்து"வை "ஹிந்து" என்றார்கள். பழைய கிரேக்க காலத்தில் ஃபாரஸி மொழியில் உள்ள "ஹ்" யை "இ" என்றார்கள். இவ்வாறாக, "ஹிந்து" வை கிரேக்கர்கள் உச்சரிக்கும் போது "இந்தோஸ்" என்றார்கள்.
மேலும், கிரேக்கர்கள், அவர்கள் நாட்டிற்கு பெயர் வைக்கும்போது "ய்யா" என்று சேர்ப்பது வழக்கம். இவ்வாறு கிரேக்கர்கள் "இந்தோஸ்" வில் "இந்த்"யை எடுத்துக்கொண்டு "ய்யா" வை சேர்த்து 'இந்தியா" என உருவாக்கினார்கள். நமது சிந்து நதியை, அவர்கள் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட "சிந்து'வை "இன்டுஸ்" என்றார்கள். இதிலிருந்தும் அவர்கள் "இந்த்"யை எடுத்திருக்கலாம்.
பழைய கிரீக் மொழியில் "இன்டிகோஸ்" என்பதும் லத்தீன் மொழியில் "இன்டிகஸ்" என்பதும் "இந்தியன், இந்தியா சம்மந்தப்பட்ட, இந்தியாவுடன் செய்யக்கூடிய" என்றுக் குறிக்கிறது. அதேபோல், துணிகள், கயிறு, காகிதம் செய்யப் பயன்படக்கூடிய அழுத்தமான நார் சத்துள்ள மரத்தின் தாவிரவியல் சொல் "கன்னிபீஸ் இன்டிகா".இந்த மரம் இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. இதிலிருந்தும் அவர்கள் "இந்த்"யை எடுத்திருக்கலாம்.
உருது மொழியில் பாரதம் / இந்தியாவை "ஹிந்துஸ்தான்" என்றார்கள். அதாவது "ஹிந்து" + "ஸ்தான்" என "ஹிந்துக்கள் வசிக்கும் இடம்" என்று பொருள் வருமாறு குறிப்பிட்டார்கள்.
எனவே, இந்தியா என்ற சொல்லை உருவாக்கியவர்கள் கிரேக்கர்கள். மேலும் இந்தியாவை உருவாக்கியவர்கள் பிரிட்டிஸ்காரர்கள்.