'என்ன கொடுமை சரவணா இது?.. ரெண்டு நாளாய் நானும் வேலை செஞ்சேன். இனிமே எழுதறேன்..!!benjaminv said:என்ன நன்ரி, நொண்டின்னு....
'என்ன கொடுமை சரவனா இது' என்ன ஆச்சு
ஆபிஸ்ல வெட்டியா தானே இருக்கிரீர்...எழுதும் ஓய்.....
crisho said:தீபன் நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியாது என்றாலும் கீழ்காண்பவை என் கருத்து:
நாடுகள் சண்டையிட்டால் அமெரிக்கா, (ஐ.நா) ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு சமாதானப்படுத்தும் ஆனால் மல்யுத்தம் என்னும் மனித சண்டையை விளையாட்டு என்பதால் அலட்சியமாக விட்டு விட்டனர் போலும்!![]()
இந்த மல்யுத்தம் என்ற போலிப்பெயருடைய விளையாட்டு என்று சொல்லப்படுவதை ஆராய்வோமே!.. இதை நடத்துபவர்கள் யார்? சூதாட்ட விடுதிகளை லாஸ் வேகாஸில் நடத்தி வரும் முதலைகள். இவை முதலில் காட்சி ஆட்டங்களாக இருந்து பணம் தரும் மிகப்பெரிய சூதாட்டமாக மாறியது..jptheepan said:நீண்ட நாட்களாக எனக்கொரு சந்தேகம். டென்ஸ்போட்ஸ், ஸ்ரார் ஸ்போட்ஸ் போன்றவற்றில் ஒலிபரப்பப்படும் றெஸ்லிங் எனப்படும் மல்யுத்தம் பற்றியே. இது உண்மையான சண்டையா அல்லது திட்டமிட்ட நடிப்பா...? இவ்விளையாட்டிற்கு விதிமுறையேதுமில்லையா..? வயது, எடை, பால் போன்ற எந்த அடிப்படையும் பார்க்காமல் மோத விடுகிறார்களே... சிலவேளை மனிதாபிமான்மேயில்லாமல் பலர்கூடி ஒருவரையெல்லாம் தாக்கினாலும் அனுமதிக்கபடுகிறதே.. நடுவர் இங்கு எதை கவனிக்க செயல்படுகிறார்... மோசமாக தாக்கப்பட்டபின்னும் தாக்கப்பட்டவர் மீண்டும் சுதாகரிக்கிறார்கள்.. இது சாத்தியம்தானா..? இவர்களுக்கு உண்மையிலேயே உடலில் பாதிப்பு ஏற்படாதா..? நாகரிக உலகில் இத்தகய விளையாட்டு காட்டுமிராண்டித்தனமானதில்லையா..? எப்படி இதை அனுமதிக்கிறார்கள்..? கோழிச் சண்டை ஆட்டு சண்டை போன்றவற்றையே தடைசெய்ய போராடும் இக்காலத்தில் மனிதனையும் மனிதனையும் மோதவிட்டு ஒரு ரசனையா... அதற்கு இவ்வளவு ஆதரவா... (தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்க்கும்போது திரிகிறது) இதுபற்றி விளக்கமாக தெரிந்தவர்கள் சற்று விபரமாகவே அறியத்தருவீர்களா..?
மஸாகி said:சட்டவிரோதமாக யானையை வேட்டையாடி, தானாகவே செத்துப் போன பழைய யானையின் தந்தம் என வியாபாரம் செய்யும் திருடர்களைக் கண்டுபிடிக்க, காபன் காலக் கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக அண்மையில் - ஒரு தொலைக்காட்சில் குறிப்பிட்டார்கள்.
அதாவது, யானை செத்து 50 000 வருடங்கள் கடந்தாலும் - இந்தக் காபன் மூலக் கூறுகள் அழியாதவை என்பதால், இவற்றைக் கொண்டு - யானை பல வருடங்களுக்கு முன் செத்ததா..? அல்லது அண்மையில் கொல்லப்பட்டதா என்பதை, இந்தக் காபன் கணிப்பு முறையால் துல்லியமாகச் சொல்லிவிட முடியும் என்றும் குறிப்பிட்டார்கள்.
அதேபோன்று - அண்மையில், எமது தாயக பூமியாகிய இலங்கையின் யாழ்பாணத்திற்கு பெருங்கால வரலாறு உண்டு என்பதை அங்கு கிடைக்கப் பெற்ற மட்பாண்டம் போன்ற சில பொருட்களை காபன் கணிப்புக்கு உட்படுத்தியபோது தெரியவந்ததாக, தகவல் ஒன்றையும் படித்தேன்.
எனது சந்தேகம் என்னவென்றால் - இவ்வளவு பெருமை வாய்ந்த அந்தக் காபன் காலக் கணிப்பென்றால் என்ன..? அதனை எந்த அடிப்படையில் கணிக்கிறார்கள் போன்ற தெளிவான விபரங்களை, யாராவது தெரிந்த நண்பர்கள் கூறுங்களேன்..?
நட்புக்கு - மஸாகி
12.08.2006
இராமர் அருந்ததி காட்டியிருப்பாரா என்று சந்தேகமே.. ஏனென்றல் அவர் பிறன் மனை நோக்கா தர்மசீலனாயிற்றே..