பதம் - வார்த்தை, பாட்டு, பாதம், அர்த்தம், பக்குவம் என்றும் பொருள்படும்.
---------------------------------------------------------------------------------------
வேலை வாய்ப்பு பதிவு பற்றி
http://www.employment.tn.gov.in/
இந்த தளத்தில் உங்களுக்குத் தேவையாப அனைத்து விபரங்களும் கிடைக்கும்.
TNPSC பற்றி
[media]http://www.tnpsc.gov.in/Docu/instns_tam_new.pdf[/media]
http://www.tnpsc.gov.in/
52 கல்வி முதுகலை பட்டம் பதிவு: வேலை வாய்ப்பு பதிவு குறித்து விளக்கம்
Friday, 12 June 2009
சென்னை, எம் ஏ, எம்எம்சி, எம்.காம். உள்ளிட்ட முதுநிலை கல்வித் தகுதி மற்றும் இவற்றுடன் பி.எட் தகுதியை தபால் மூலம் மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி என்பது குறித்து சென்னை வேலை வாய்ப்புத் துறை உதவி இயக்குனர் ஆராவமுதன் விளக்கம் அளித்தார்.
பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.காம், மற்றும் பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.எஸ்.சி, விவசாயம், பி.வி. எஸ்.சி உள்ளிட்ட தொழிற் கல்வி கல்வித் தகுதியையும் சென்னை அல்லது மதுரையில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
முன்பு சென்னையில் மட்டும் மாநில வேலை வாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்தது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரிகளின் வசதிக்காக தற்போது மதுரையில் மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை கே.புதூரில் உள்ள மாநில வேலை வாய்ப்பு அலுவலக கிளையிலும் பதிவு செய்ய வேண்டும்.
இதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரிகள் தங்கள் கல்வித் தகுதியை சென்னை சாந்தோமில் உள்ள மாநில வேலை வாய்ப்பு அலவலகத்திலும் பதிய வேண்டும்.
மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலை கல்வித் தகுதியை நேரில் மட்டுமின்றி தபால் மூலமாகவும் பதிவு செய்யலாம். இந்த முறை பற்றி நிறைய மாணவ, மாணவிகள் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். தபால் மூலம் பதிவு செய்வது குறித்து சென்னை சாந்தோமில் உள்ள மாநில வேலை வாய்ப்பு அலவலக உதவி இயக்குனர் ஆராவமுதனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
முதநிலை பட்டதாரிகள் தங்கள் கல்வித் தகுதி சான்றிதழ்களை (புரவிஷன்ஸ்) சாதிச்சான்று, எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்று (பிறந்த தினத்திற்காக) ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களை சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற்று மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு ரிஜிஸ்டர் தபாலில் அனுப்ப வேண்டும்.
(முகவரி- உதவி இயக்குனர், மாநில தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகம், 56, குயில் தோட்டம், ஜெயபிரகாஷ் நாராயணன் மாளிகை, சாந்தோம், சென்னை-4 தொலைபேசி எண்: 044- 24642740).
பதிவு தபால் பெறப்பட்ட தேதியில் பதிவு மூப்பு கொடுத்து வேலை வாய்ப்பு பதவி அட்டை வீட்டு முகவரிக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். பதிவு தபால் அனுப்பியதற்கான ஒப்புதல் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை தபால் பெறுவதில் பிரச்சனை ஏற்பட்டால் கூட ஒப்புதல் அட்டையை அடிப்படை வைத்து பதிவு மூப்பு அளிக்கப்படும்.
(மதுரை கிளை அலுவலகத்திற்கு உட்பட்ட மாட்டங்களைச் சேர்ந்தவர்கள் பதிவு தபாலை அந்த அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
முகவரி -மாவ்ட வேலை வாய்ப்பு அலுவலர், மாநில தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலக கிளை, அரசினர் ஐ.டி.ஐ.வளாகம், கே.புதூர், மதுரை-7 தொலைபேசி எண்.0452-2564343).
எக்காரணம் கொண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்பக் கூடாது. சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை மட்டுமே அனுப்ப வேண்டும். இதே போல், முறையில் கூடுதல் கல்வித்தகுதியை இதே முறையில் விளக்கக் கடிதம் அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். மூன்று ஆண்டுகள் கழித்த பிறகு பதிவை புதுப்பிக்க நேரில் வர வேண்டும் என்ற அவசியமில்லை.
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணையதளத்தின்
www.employoment.tn.gov.in மூலம் ஆன்லைனிலேயே புதுப்பித்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், முகவரி மாற்றத்தை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாது. முகவரி மாற்றும் செய்ய விரும்புவோர் தங்கள் வேலை வாய்ப்பு அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றில் சான்றொப்பம் பெற்று பதிவு தபாலில் விளக்கக் கடிதத்துடன் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு ஆராவமுதன் கூறினார்.
நன்றி : சங்கமம்.
http://sangamamlive.in/index.php?/content/view/3022/31/