1) பாயாசம் செய்ய பயன் படும் சவ்வரிசி. (மரவள்ளி கிழங்கு சீவல்களிலிருந்தும் பெறப்படுவதனெ யாரோ சொன்னார்கள். உண்மையா...)
ஜவ்வரிசி மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுவது உண்மைதான்
2) உப்புமா, லட்டு போன்றன செய்ய பயன்படும் ரவா (ரவை).
ரவை கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
3) நூடில்ஸ்.
கோதுமை மாவு, அரிசி மாவு, கிழங்கு மாவு, மக்காச்சோள மாவு மைதா மாவுன்னு பலவகைப்பட்ட மாவுகளில் இருந்து நூடுல்ஸ் தயாரிக்கலாம்..
4) அவல் (எல்லா வகை அரிசியிலிருந்தும் இது பெறப்படலாமா...)
எல்லா வகை அரிசியில் இருந்தும் அவல் தயாரிக்கலாம். ஆனால் அளவு மற்றும் ருசி வித்தியாசங்கள் வரும். அதுக்காக நொய்யரிசி, தினை அரிசின்னு முயற்சி செய்யாதீங்க.
5) மைதா மா. (கோதுமை மா என்பதும் மைதா மா என்பதும் ஒன்றா...? அல்லது என்ன வித்தியாசம்...?)
http://www.arusuvai.com/tamil/forum/no/1817
6) புழுங்கல் அரிசி. (இதன் தேவை என்ன?)
நெல்லை அரைவேக்காடு வேகவைத்து உலரவைத்து பிறகு அரைத்து உமி நீக்கிய அரிசி புழுங்கல் அரிசி எனப்படும். உமியில் உள்ள வைட்டமின்கள் இதன் மூலம் அரிசிக்குள் இரங்குகின்றன. பச்சை அரிசியை விட புழுங்கல் அரிசி வைட்டமின்கள் அதிகம் கொண்டது,
7) மைசூர் பருப்பு (இது எப்படி இருக்கும்... செடியில்/பயிரில்?)
செடி
8) மாசி (கருவாடு). இது குறிப்பிட்ட வகை மீனிலிருந்து தயாரிக்க படுவதா.. அல்லது எல்லா வகை மீனிலிருந்தும் குறித்த முறையில் தயாரிக்க படுவதா..?
மாசிக் கருவாடு என்பது வஞ்சிரம் மீனை கருவாடாக்குவதால் கிடைப்பது. அனைத்துவகை மீன்களையும் கருவாடாக்கலாம். அதே போல் ஆட்டு மாமிசம், கோழி மாமிசம் போன்றவற்றையும் உப்பு நீரில் ஊற வைத்து காய வைத்து உப்புக் கண்டமாக்கிச் சேமிக்கலாம்.தேவைப் படும்பொழுது கல்லில் நசுக்கி தண்ணீரில் அவிப்பதால் மாமிச உணவைச் சமைக்கலாம்,
9) அப்பளம் (வண்ண வண்ண நிறங்களில் சின்ன சின்ன வடிவங்களிலெல்லாம் இப்போ வருகிறது...)
அப்பளம் உளுந்து மாவு, அரிசிமாவு, சாதம், ஜவ்வரிசி இப்படி பலவிதமாவுகளில் இருந்து தயாரிக்கப் படுகிறது. ருசிக்காகவும் மணத்திற்காகவும் மிளகாய், வெந்தயம், பெருங்காயம், சீரகம், சில காய்வகைகள், எள், உப்பு இப்படி பல பொருட்கள் கலக்கப்படலாம். தமிழ்நாட்டு அப்பளம் உளுந்த மாவு / வெந்தயக் கலவையிலிருந்துதான் அதிகம் தயாரிக்கப் படுகிறது
10) மீனெண்ணை குளிசை. (இதன் வெளித்தோல் எதனால் ஆனது...? எண்ணை எந்த வகை மீன்களிலிருந்து எடுக்க படுகிறது..?
மீனெண்ணை மற்றும் பூண்டு குளிகைகள் சாஃப்ட்ஜெல் பேக்கேஜிங் முறையில் தயாரிக்கப் படுகின்றன,
கூகுளாய வித்மஹே விக்கிபீடியாய தீமஹி
தன்னோ நெட்சர்ச் ப்ரச்சோதயாத்.
http://en.wikipedia.org/wiki/Fish_oil
http://en.wikipedia.org/wiki/Softgel