தெரியாததைக் கேளுங்கள்....

நண்பர்களே...

இந்த பகுதியில் பல நல்ல தகவல்களை நண்பர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். அது மிகவும் உபயோகமாக உள்ளது. இதை நான் வரவேற்கிறேன். இதை இன்னும் உபயோகமாக்க ஒரு ஆலோசனை:

நம் பலருக்கு பலவிசயங்கள் தெரிந்திருக்கும், அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. அதனால் அதை இங்கே பகிர்ந்து கொள்வது கிடையாது, அல்லது பகிர்ந்து கொள்ள தயங்குகிறேன். ஆனால், யாராவது அதைப் பற்றி கேட்டால் நாம் விரிவாக விளக்க தயங்குவதே கிடையாது. உதாரணமாக: [1] சிறந்த முறையில் புகைப் படம் எடுப்பது எப்படி? [2] வளைகுடாவில் எண்ணை எப்படி எடுக்கிறார்கள்? [3] ஒரு புத்தகம் அச்சிட என்னென்ன தேவைகள்? [4] பத்திரிக்கைகளில் கதைகள் கவிதைகள் பிரசுரிப்பது எப்படி?

இந்தப் பகுதியில் இனி நண்பர்கள் தங்கள் அறிய விரும்பும் விசயங்களை கேட்கப் போகிறார்கள். மற்ற நண்பர்கள் யாருக்காவது அது பற்றிய அனுபவம், திறமை, ஞானம் இருந்தால், அவர்களுக்கு உதவி செய்வீர்கள் என நம்புகிறேன். அவற்றை இங்கே தனி தலைப்பாக பகிர்ந்து கொள்ளவும்.

[இதற்கு சரியான தலைப்பை தேடுகிறேன்.. பரிந்துரைக்கவும்]

..
 
Last edited:
நல்ல பதிவு..

நானும் இது பற்றியெல்லாம் அறிய ஆசைப்படுகிறேன்.

என்னிடம் நிக்கான் F75 இருக்கிறது. இருந்தாலும் தரமான புகைப்படம் எடுக்க தெரியாது. புகைப்படம் எடுப்பதற்கு முன்னாடி என்னென்ன செட்டிங்க்ஸ் செய்ய வேண்டும்..

தனித்தனி பதிவுகளில் கூட இதை விளக்கமா சொல்லுங்க நண்பர்களே.

அன்புடன்
மன்மதன்
 
கொஞ்ச நாட்களாகவே Mutual Fund பற்றி நிறைய கேள்விப் படுகிறேன்.
அது பற்றி யாராவது விளக்கமாக கூறுங்களேன்.

தற்போது எந்த Mutual Fund நன்றாக செல்கிறது?
எந்த மாதிரி MF-ல் பணம் போட்டால் நல்ல லாபம் வரும்?
வெளிநாட்டு இந்தியர்களுக்கு இதில் ஏதும் வசதி அல்லது தடங்கல் உண்டா?
 
Last edited:
MF குறித்து பால பாடத்தில் இருந்து தொடங்குகிறேன்.

உங்களிடம் $5000 உள்ளது. இதை தாங்கள் இது நாள் வரை தங்கள் வங்கியின் சேமிப்புக் கணக்கில் வைத்திருந்தீர்கள். இப்போது இந்த பணத்தை வேறு எங்காவது முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.

இந்த முதலீட்டில் உங்களுக்கு மூன்று விதமான ஆதாயங்களை எதிர்நோக்குவீர்கள்.

1] உங்கள் பணத்தின் பாதுகாப்பு
2] உங்கள் முதலீட்டின் வளர்ச்சி
3] முதலீட்டிற்கான செலவு விகிதம் [நேரமின்மை மற்றும் அனுபவமின்மையால் எங்கு என்ன எப்படி முதலீடு செய்வது என்ற விபரம் தெரியாமல் இதற்காக ஒரு அனுபவமிக்க நிறுவனத்தின் உதவிக்காக செய்யும் செலவு]

பணத்தின் பாதுகாப்பு நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் இருந்தாலும் இங்கே முதலீட்டின் வளர்ச்சி குறைவு. தனித்தனியாய் பல நிறுவனங்களின் பங்குகளை வாங்கினால் முதலீட்டின் வளர்ச்சி வாய்ப்பு அதிகமிருந்தாலும் பாதுகாப்பு குறைவு. மேலும் இதற்கான பங்கு தேர்தலில் அனுபவமும் இந்த ஆராய்ச்சிக்கான நேரமும் தேவை. சரி அனுபவமினமி நேரமின்மை போன்ற காரணங்களுக்காக பண முதலீட்டு உதவி நிறுவனங்கள் [எ.கா அமெரிக்கன் எக்ஸ்ப்ரஸ்] உதவி நாடினால் அவர்கள் வசூலிக்கும் கட்டணத்தி பார்த்தால் மலைப்பாக இருக்கும்.

இப்போது இந்த மூன்று கேள்விகளுக்கும் சரியான விடை அளிக்க வந்தது தான் MF.

MF என்பது ஒரு வகையான அணைக்கட்டு எனக் கொள்ளலாம். தனித் தனி முதலீட்டாளர்களின் பணமனைத்தும் ஒன்றாய்ச் சேர்த்து பல விதமான தொழில்களிலும் முதலீடு செய்வது தான் இது.

இன்னும் வரும்....
 
அண்ணா அருமையான துவக்கம்...இன்னும் பல விடயங்களை அறிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்...நன்றி..தொடருங்கள்...
 
இந்த MF முதலீடுகள் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். பங்குச் சந்தை, மற்ற பண்டுகள், இடம், வீட்டு மனைகள், மற்ற அசையும் சொத்துக்கள் அசையாச் சொத்துகள் இவற்றில் ஏதேனும் ஒன்றாகவோ அல்லது பல வித முதலீடுகளின் தொகுப்பாகவோ இருக்கலாம்.
 
இனிமேல் நாம் mutual funds ஐ மிப என அழைப்போம். இந்த மிபவின் பயன்பாடுகள் தான் என்ன?

1] அனுபவம் வாய்ந்த திறமை மிக்க நிபுணர்களால் இந்த மிபக்கள் நடத்தப்படுவதால் சிறு அளவில் முதலீடு செய்பவர்களுக்கும் இந்த நிபுணத்துவம் உதவும். மிப நடத்துனர்கள் விற்பனையை பொறுத்து பணம் சம்பாதிப்பதிலை. [not sales commission based salary]. இந்த மிப நடத்துனர்களின் லாபமும் சம்பளமும் நேரடியாக அவர்கள் நடத்தும் மிப எந்த அளவு லாபகரமாக செயல்படுகிறது [fund performance based salary and inmcentives] என்பதை பொறுத்தே அமைவதால் உங்களுக்காக இவர் தனது புத்தி அனுபவம் எல்லாம் பயன்படுத்தி உழைக்கிறார். இதே ஆளை தாங்கள் தனியாக உங்களுக்கென வேலைக்கு அமர்த்தினால் கிட்டத்தட்ட உங்கள் சேமிப்பு முழுதுமே இந்த நிபுணர்களின் ஒரு நாள் சம்பளத்திற்கு கூட போதாத நிலை வரலாம்.
 
2] பிரித்து முதலீடு செய்தல். [Diversification]

இன்று ஏதோ ஒரு டெலிபோன் கம்பனி அதிக லாபம் கொட்டுகிறது. அதே நேரம் இடம் மற்றும் வீட்டு மனை விற்பனை குறைந்து நஷ்டத்தில் இயங்குகிறது எனக் கொள்வோம். இன்றைய நிலையின்படி நமது அனைத்து சேமிப்பையும் அந்த டெலிபோன் கம்பனியில் போய் முதலீடு செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இன்னும் ஒரே வாரத்தில் அட ஏன் இன்னும் ஒரே ஒரு மணி நேரத்தில் அந்த டெலிபோன் கம்பனி ஏதோ ஒரு பிரச்சனையால் பங்குச் சந்தையில் மதிப்பிழக்கலாம். அல்லது திடீரென அந்த ஊருக்கு வெகு நாட்களாக வர இருந்த ஒரு புதிய ரயில் பாதைக்கான அனுமதி அரசிடம் இருந்து கிடைத்திருப்பதாக செய்தி வந்தால் உடனே இடம் மற்றுஇம் வீட்டு மனைகளின் மதிப்பு உயரும். இப்படி ஒரே ஒரு பகுதியில் பணமனைத்தும் கொட்டாமல் பல பல வியாபரங்களிலும் பணத்தினை மிபக்கள் முதலீடு செய்வதால் ஒரு வியாபாரம் படுத்தாலும் அடுத்த வியாபார முதலீட்டு லாபம் முதல் இழப்பினை ஈடு கட்ட வாய்ப்புண்டு. 2000 வரை கொள்ளை லாபம் சம்பாதித்த பல இண்டர் நெட் கம்பனிகளில் மட்டுமே பணம் போட்டு முதலீடு செய்து வந்த பலர் ஓட்டாண்டியாய் போனதும். அதை தொடர்ந்து பவர் கம்பனியான என்ரானில் பணமனைத்தும் கொட்டியவர்கள் கோவிந்தா ஆனதும் உலகறிந்த உண்மை. அதே நேரம் இடம் மற்றும் வீட்டு மனைகளில் முதலீடு செய்தவர், பயோடெக் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்தனர். இப்படிப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்க மிபக்கள் உதவும்.
 
3] குறைந்த செலவு.

தனி ஒரு ஆளாக வெவ்வேறான 50 கம்பனிகளின் பங்குகளில் தாங்கள் முதலீடு செய்ய முடிவெடுக்கிறீர்கள் என்று கொள்வோம், இப்போது ஒவ்வொரு பங்கினை வாங்க விற்க என ஒவ்வொன்றிற்கும் கமிசன்கள் கொடுத்தே உங்கள் சேமிப்பின் பெரும்பகுதி கரைந்து போகக் கூடும். இப்படி மிபக்களில் பலரும் சேர்ந்து மொத்தமாக பங்குகளை வாங்க விற்கச் செய்வதால் இந்த செலவுகள் குறைவு. [நோ லோட் மிப என இருக்கும் சில மிபக்கள் எந்த செலவும் இல்லாத மிபக்களை வழங்கி வருகின்றன].

இன்னும் வரும்
 
Last edited:
அருமையான விளக்கம் இனியன்...

மேலும் இராசகுமாரன் கேட்ட.. "வெளிநாட்டு இந்தியர்களுக்கு இதில் ஏதும் வசதி அல்லது தடங்கல் உண்டா?" என்ற கேள்விக்கு ஏதும் பதில் இருக்கிறதா
 
னல்ல பகுதி ந்ண்ன்பர்கலெ...இதில் சில செயல்கலுக்கான அறிவியல் பூர்வ விலக்கங்கலைஉம் கேட்கலாமா?
தீ மிதிக்கும் போது காலில் புண் வராமைக்கு காரண்ம் என்ன?
 
jptheepan said:
னல்ல பகுதி ந்ண்ன்பர்கலெ...இதில் சில செயல்கலுக்கான அறிவியல் பூர்வ விலக்கங்கலைஉம் கேட்கலாமா?
தீ மிதிக்கும் போது காலில் புண் வராமைக்கு காரண்ம் என்ன?
இந்த மாதிரி அறிவியல் கேள்விகளுக்கு இன்னொரு தலைப்பு இருந்ததாக ஞாபகம்.
மற்றபடி ஜேபி. தீபன், உங்களுக்கு வணக்கம்.
உங்களைப் பற்றி அறிமுகம் பகுதியில் போடுங்களேன்.
 
தன் நிலை மறந்து தீ சுடும் என்பதையும் மறந்து ஒரு வித நம்பிக்கையுடன் செய்யும் செயல் உதாரணமாக ஒரு பேய் பிடித்த பெண் தன்னால் தூக்க முடியாத கல்லை தூக்கிச் செல்வாள். அப்படித்தான் இருக்கும்.
 
அன்பு நண்பரே..
மிகப்பெரும்பாலான இடங்களில் மஞ்சள்தண்ணீரால் குளித்தவர்கள்தான் தீ மிதிப்பார்கள். அது போக காலில் உள்ள நீரானது, தீயை மிதிக்கும்போது தண்ணீர் ஆவியாகி ஒரு படலம் போன்று காலை பாதுகாக்கும். ஆனால் இது மிகச்சில விநாடிகளுக்கே பொருந்தும். மேலும் தீ மிதிப்பவர்கள் வேகமாக ஓடிக் கடப்பதும், தீக்குழியின் நீளம் குறைவாக இருப்பதும் காரணங்களாகும்.

மற்றபடி நீண்ட நேரத்திற்கு தீ மிதித்தால் யாருக்கும் தீப்புண் நிச்சயம் வரும்.
 
பாரதி said:
அன்பு நண்பரே..
மிகப்பெரும்பாலான இடங்களில் மஞ்சள்தண்ணீரால் குளித்தவர்கள்தான் தீ மிதிப்பார்கள். அது போக காலில் உள்ள நீரானது, தீயை மிதிக்கும்போது தண்ணீர் ஆவியாகி ஒரு படலம் போன்று காலை பாதுகாக்கும். ஆனால் இது மிகச்சில விநாடிகளுக்கே பொருந்தும். மேலும் தீ மிதிப்பவர்கள் வேகமாக ஓடிக் கடப்பதும், தீக்குழியின் நீளம் குறைவாக இருப்பதும் காரணங்களாகும்.

மற்றபடி நீண்ட நேரத்திற்கு தீ மிதித்தால் யாருக்கும் தீப்புண் நிச்சயம் வரும்.

வெப்பம் ஒரு நிலையில் இருந்து இன்னோரு நிலைக்கு conduction (கடத்துதல்), convection மற்றும் radiation என்னும் காரணக்களால் நிகழலாம்... இதில் இந்த தீ மிதித்தல் கடத்துதலால் நிகழ்கிறத்து. மரம் ஒரு மோசமான ஒரு கடத்தி(Bad conductor) மேலும் இது சில சயமங்களில் சாம்பலால் சுற்றபடுவதால் இன்னும் மோசமான கடத்தியாகிறது.
ஒரு சாதாரண மனிதன் ஒரு அடியெடுத்து வைக்க 1/2 நொடியாகும்.... உதாரணமாக அந்த தீயிம் வெப்பம் 200 டிகிரி முதல் அடி எடுத்து வைக்கும் பொது அவன் கால் வெப்பம் 30 டிகிரி என்று வைத்து கொள்வொம்...
கடத்துதலால் காலில் வரும் வெப்பதின் அளவு/sec = KA(dT)/t

இதில் K=conductivity
A= Area
dT= கால் மட்டும் தீயின் வெப்ப வித்தியாசம் (200-30)
t= thickness of skin

இப்படியாக வெப்பம் காலில் எறும்... ஒரு மனிதனின் கால் வெப்பத்தை தொடர்ந்து 2 நொடி வைத்தால் மட்டுமே அது அவனது காலில் தீ புண் போன்ற காயங்களை ஏற்படுத்தும் .... அதனால் பாரதி சொன்னது போல் பூபடுக்கையின் நீளம் 4 முதல் 5 நடை நீளம் மட்டுமே இருக்கும்... (சுமார் 10 - 12 அடி அதிக பச்சமாக)

மேலும் ஒருமுறை கால் வைத்து இரண்டாம் முறை வைக்கும் பொது dT யின் மதிப்பு குறையும்.. இதனால் வெப்பம் காலில் எறுவதும் குறையும்....

இவ்வாறு கால் புண் ஆகாமல் பூ(தீ) மிதிக்கலாம்....

முக்கியாமான செய்தி... பயம் வந்தால்..(மனம் ஒரு நிலை இல்லாமை), கால் ஒரு இடத்தில் அதிக நேரம் இருக்கும்.. கால் வேந்து போகும்...
 
அருமையான விளக்கம் பெஞ்சமின் அவர்களே. இப்பொழுது கொஞ்சம் புரிகிறது.
 
என்னார் அவர்கள், தம்பி பாரதியைத் தொடர்ந்து அன்பு பெஞ்சமின் விரிவான விளக்கம் தந்து --
கேட்டது கிடைக்கும் நண்பர்கள் உள்ள மன்றம் என்று மீண்டும் நிரூபித்துள்ளார்கள்..
அனைவருக்கும் பாராட்டும் நன்றியும்...
 
மிக அருமையான விளக்கம் பெஞமின். ஆனால் சில இடங்களில் மிக அதிக தூரம் பூப்படுக்கை வைத்துள்ளதை நான் பார்த்திருக்கிறேன் (சுமார் 10 - 20 அடி தூரம்). ஆனால் அதில் நடந்தவர்களுக்கு என்ன ஆனது என தெரியாது.



நான் இன்னொரு கேள்வியை உங்களுக்கு வைக்கிறேன்.

சாதாரணமாக நம்முடன் கோவிலுக்கு வருபவர் (நீங்களோ, உங்களது நண்பனோ, தெரிந்தவர்களோ) திடீரென சாமி வந்து ஆடுவது எவ்வாறு?
அவர்கள் நெற்றியில் திருனீறு வைத்ததும் or அவர்களுக்கு எலுமிச்சை பழம் தந்ததும் or கற்பூரம் அவர்கள் வாயில் போட்டதும் அவர்களுக்கு சுயநினைவு வருவது (அதாவது சாமி அவர்களை விட்டு விலகுவது) எவ்வாறு?
அவர்கள் சாமி ஆடுகின்றபோது அவர்களின் பலம் இருமடங்கிள் இருக்கும். ஏன்?



[இந்த கேள்வி கேட்கக் காரணம், எனக்கு இதில் சில அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. நான் MCA படித்தது திருச்சியில். அங்கு கோவில்கள் அதிகம் என தெரிந்திருக்கும். நான் தங்கி படித்தது எனது சித்தி வீட்டில். எனது சித்தி இருந்த இடம் ஒரு சின்ன காலனி போல். அதற்குல் ஒரு கோவில் உண்டு. அங்கிருந்த பசங்கதான் அதை நடத்தினர். எனக்கும் அவங்கதான் செட்டு என்பதால் நானும் அவர்களுடன் கோவிலுக்கு போவேன்.

ஒருமுறை அவர்களுடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு போயிருந்தேன். நாங்கள் 5 பேர். கோவிலுக்குள் 'மேளம்', 'பம்பை', 'உருமி' என களை கட்டியது. அந்த சப்தத்தை கேட்டதும் எங்கல் கூட்டத்தில் ஒருவனுக்கு சாமி வந்தது. கீழே விழுந்து உருள்ரான், பெரல்ரான். அவனை தூக்கிகிட்டேன், உருளக்கூடாது என. என்னால் தூக்க முடியயல. அவ்வளவு வெய்ட். கஷ்டப்பட்டு தூக்கினேன். திமிரினான்.

சாமி வந்தவர்களுக்கு , அருகில் யாரேனும் சாமி உடையில் (மஞ்சள் ஆடையில்) இருப்பவர்கள் வந்து திருனீர் வைத்தால் சாமி ஆடுபவர்கள் தனது ஆட்டத்தை நிறுத்திடுவர் (சாமி அவர்களை விட்டு விலகிடும் என்பது ஐதீகம்).

அதனால் நாங்கள் அருகில் யாரேனும் இருக்கிரார்களா என தேடினோம். பக்கத்திலேயெ ஒரு வயதான பெண்மணி (அதிகம் போனால் 40 - 45 இருக்கும்) நின்று கொண்டிருந்தாங்க. நாங்க அவங்கள கூப்பிட்டோம், வந்து திருனீரு வைக்குமாரு. அந்த அம்ம வரல. எனது நண்பன் அந்த அம்மாவின் கையில் திருனீரு வைத்து, அந்த அம்மாவின் கையை எனது நண்பனுக்கு அருகில் (சாமி அடிக்கொண்டிருந்தவனுக்கு அருகில்) கொண்டுபோனான். உடனே அந்த அம்மவுக்கு சாமி வந்துடுச்சு.

என்னாடா இது வம்பா போச்சேன்னு நினச்சிக்கிட்டு, அவனை பக்கத்திலிருந்த பிள்ளையார் கோவிலுக்கு எடுத்து சென்றோம். அங்கிருந்த பூசாரி திருனீரு வைத்து எனது நண்பனை தெளிய வைத்தார்.

நாங்கள் அந்த பிள்ளையார் கோவிலுக்கு செல்வதற்க்கு முன் அந்த அம்மாவை பார்த்தோம். அந்தம்ம கூலா எதுவும் நடக்காதது போல் நின்று கொண்டிருந்தாங்க. எனக்கு செம கடுப்பாயிடுச்சு.

கோவிலை சுத்திப்பார்த்துட்டு, சாமிய கும்பிட்டு வீடு திரும்பினோம்.]


இது ஒரு சாம்பிள் தான். எனக்கு இதுபோல் நிறைய அனுபவங்கள் நடந்துள்ளன. மேற்சொன்ன நிகழ்ச்சிக்கு பிறகு, சாமி ஆடுவது உண்மை இல்ல என தோன்றியது.


(சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குல் வந்தவர்களுக்கு அதன் அமைப்பு தெரிந்திருக்கும். கோவிலுக்குள் சென்ரதும் முதலில் வருவது மாரியம்மன் பிரகாரம் தான். எனது நண்பன் விழுந்தது கொடிக்கம்பத்தருகில். மாரியம்மனுக்கு அருகில், ஒட்டினார்போல் உள்ளதுதான் 'பிள்ளையார்' கோவில்.)
 
இது முழுமையாக மனநலம் சம்பந்தபட்ட விஷயம் என்று தன் நான் கூறுவேன்... இதன் காரணங்கள் குறித்து கொஞ்ஜம் தெரியும், தெளிவாக தெரிந்த பிறகு நான் என் முழு கருத்துகளையும் பதிக்கிறேன்...

இளசு இருக்காங்க இல்லையா... பின்ன என்ன கண்டிப்பா விடை கிடைச்சிரும் ..
 
எனக்கும் இதற்க்கான காரணம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். ஆனால் முழுமையாக எதிர்பார்க்கிறேன்.
 
Back
Top