முடிவதை மட்டும் நினை

ஒட்டச் சொன்ன பாரதி
ஒட்டி அழகுபார்த்த அமரன்

வெட்டவெளிக்கு மனதை விட்ட ஆதவன்..
முடிவதெற்கெல்லாம் முயலச்சொன்ன நாம்செக்
முடிவை நினைக்காதே என திருமூலம் சொன்ன ஷீ..

அழகிய கவிதை அணிவித்த பின்னூட்ட நாயகி - என் தங்கை பூ..


அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்..

இந்நேரத்தில் - திஸ்கி மன்றத்தில் படித்ததும் ஒட்டிப் பெருமை செய்த
அன்பு பப்பி அவர்களுக்கும் மறவா நன்றி!
 
ஒட்டச் சொன்ன பாரதி
ஒட்டி அழகுபார்த்த அமரன்

வெட்டவெளிக்கு மனதை விட்ட ஆதவன்..
முடிவதெற்கெல்லாம் முயலச்சொன்ன நாம்செக்
முடிவை நினைக்காதே என திருமூலம் சொன்ன ஷீ..

அழகிய கவிதை அணிவித்த பின்னூட்ட நாயகி - என் தங்கை பூ..


அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்..

இந்நேரத்தில் - திஸ்கி மன்றத்தில் படித்ததும் ஒட்டிப் பெருமை செய்த
அன்பு பப்பி அவர்களுக்கும் மறவா நன்றி!

அட என்ன ஒரு லைன்..... உங்கள் இருவருக்கும்..

முடிவதை மட்டும் நினை என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த வரிகளுக்கு மேலும் கவிதை பூசியிருக்கிறார் ஒருவர்.... கண்டுபிடியுங்களேன்...

அவரும் மன்றத்தில்தான் இருக்கிறார்..
 
முடிவதை மட்டும் நினை


1993

ஆர்வம் தெறிக்கும் கண்கள்
அவசரம், கற்க ஆத்திரம்
என்னையே பார்த்தேன் உன்னிடம்
என் நிறம் கறுப்பு, உதிரமோ ஒரே நிறம்

வேற்றுமை இல்லை நம்மிடம்
நான் கற்பிப்பவன் -தான்
உன்னிடமும் கற்றுக்கொண்டேன்
என்னிடம் நீ அறிவியலை
உன்னிடம் நான் இந்நாட்டு வாழ்வியலை

கையால் சோறுண்ண நீ தடுமாற- முள்
கரண்டியோடு நான் சடுகுடு ஆட
இளையராஜாவை நான் தர
எல்விஸ் பிரஸ்லி நீ தர

பண்டம் மட்டும் அல்ல
பண்பாடும் கைமாறியது
காலவெள்ளத்தில் வாழ்க்கை
திசைமாறியது
ஒரு U திருப்பம் வந்து உன் தேசத்துக்கே
மீண்டும் என் வழி மாறியது

2003

வந்த சேதி கேட்டு ஓடி வந்தாய்
இல்லை இல்லை சக்கர வண்டியில் வந்தாய்
"என்னாச்சு டெர்மாட்?"
கண்கள் ஊற்றெடுக்கக் கேட்டேன்

புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்
கண்ணீர் உன் ஊரில் தட்டுப்பாடு
தண்ணீருக்கு மட்டுமே என்னூரில் கட்டுப்பாடு

சொன்னாய், கோரக்கதை சொன்னாய்
சைப்ரஸ் பயணம் சைத்தானாய் அமைந்த கதை
கார் கவிழ்ந்து கழுத்தெலும்பு முறிந்த நிலை
இடைவிடா பயிற்சி இரு வருடம்

எத்தனை எத்தனை தடைக்கற்கள்
எப்படி தாண்டினாய் இளைஞனே

சக்கர நாற்காலிதான் இனி கால்கள்
மாற்றி அமைத்த கார்தான் உன் சிறகுகள்
புரிந்தும் சேர்ந்த தோழி உன் மன மருந்து
புதிதாய் கற்ற கணினிதான் பொழுதுபோக்கு

புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்

"எப்படி சாதித்தாய் டெர்மாட்?"
" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.
காலையில் கண்ணாடிக்கு சொல்வேன்:

Think What You Can Do-
Not What You Can't Do "


முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை


ஓவ்வொரு பூக்களுமே பாடல்தான் ஞாபகம் வந்தது,

கவிதைக்கதையை படித்து 'உன்னால் முடியும்' என்ற உற்ச்சாகம்தான் குழந்தையாய் பிறந்தது.

நன்றிகள் இளசு.
 
நினைப்பதைச் செய்வேன் என்று நினை!

Think What You Can Do-
Not What You Can't Do "

முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை


அப்பாடா.. 'என்றும் இளசு' - உடன் கருத்துப் போர் செய்ய ஒரு நல்ல சந்தர்ப்பம்.

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
முடியாதது என்று ஒருவனுக்கு எப்படி முயற்சி செய்யும் முன்னரே தெரியும்?

காந்திக்கு நமக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தது. 1910 -ல் அவருக்கு தெரியாது நமக்கு 'நிச்சயமாக சுதந்திரம் கிடைக்கும் என்று' . ஆனால் 'முடியும்' என்ற எண்ணம் இருந்தது.

ஆகாயத்தில் மனிதன் பறக்கலாம் என்ற சிந்தனையை நினைத்தால், "Impossible" என்றே தோன்றும். ஆனால் ரைட் பறந்தானே. அவன் முடியாதது என்று நினைத்திருந்தால் நடந்தோ, புகை வண்டியிலோ பயணம் செய்திருக்கலாமே.

எனவே.. நினைக்கும் போது, "முடியும் / முடியாதது " என்று எண்ணம் தேவை இல்லை.ஏனெனில் உனக்கு தெரியாது உன்னால் முடியுமா முடியுமா இல்லையா என்று. பிறந்த குழந்தை நடப்பதில்லை. கற்று கொண்டு தான் நடக்கிறது.

அப்படியென்றால், புலிகள் தோற்றதற்கு காரணம் என்ன? முடியும் என்று நினைத்து போராடினார்களா? இல்லை முடியாது என்று நினைத்திருந்தார்களா? முடியும் என்று நினைத்தார்கள். ஆனால் முடியாமல் போய் விட்டது.
2009-ல் இப்படி நடக்கும் என்று முன்னரே தெரிந்திருந்தால் ஏன் இப்படி 20 வருடமாய் போராடப் போகிறார்கள்?

எதிர் காலத்தை கணிக்க தான் முடியும். உறுதி படுத்த முடியாது.

எனவே...
நினை!
கள்!
செய்!
 
தென்றல், ஓவி, லெனின் - மூவருக்கும் நன்றி!

ஹ்ஹ்ஹ்ஹா... லெனின்...
அழகான மறுபார்வையை முன்வைத்து
அருமையான கருத்தாடலுக்கு அடித்தளம் போட்டிருக்கிறீர்கள்..

முன்னர் ராம்பால், நண்பன், பூ, பப்பி, லாவண்யா நிலா, முத்து, பாரதி
என கவிதையில் களம் காண ஒரு பட்டாளமே இருந்தது..

இன்று இனிய பென்ஸ், ஆதவன், ஆதி, சிவா என இருக்கிறார்கள்.

அவர்களில் யாராவது வந்து
இந்த இரு முனைகளை எடைபோட்டு
கருத்தாட மாட்டார்களா என ஏங்குகிறேன்..

அப்படி யாரும் வாராமல்போகும் நிலை வந்தால்
நானே மல்லுக்கட்ட வந்தாலும் வருவேன்..

காத்திருக்கலாமா லெனின்?
 
தன்னம்பிக்கையூட்டம் கவிக்கு நன்றி இளசு.
---------
முடியும் என முயற்சி செய்யவேண்டியது நம் கடமை.
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்... என்ற வாக்கின் படி வெற்றியை எதிர்பார்த்தல் நல்லது.

முயற்சியில்லாமல் தூங்கினால் எதையும் சாதிக்க இயலாது.

முயற்சி செய்து.. முடிவு பாதகமாக வந்தால்... கற்றுக் கொண்ட பாடங்களை எண்ணி மகிழ வேண்டியது தான்.
------------
இந்த முயற்சி.. தனி மனிதனுக்குரியது (குழுவுக்கானதல்ல)....
 
மீண்டும் மீண்டும் படிக்க முடியும் - முடியும் என்ற உற்சாகம்தான் பிறக்கிறதே தவிர வேறெதுவும் தோன்றவில்லை. எப்போதேனும் மனதில் பிறக்கும் வியப்பூட்டக்கூடிய கவிதை தந்த அண்ணனுக்கு நன்றி.

கவிதை சொல்வதும் முடியாது என்பதைக்குறித்தல்ல; முடியும் என்பதையே வலியுறுத்துகிறது என்றே நான் கருதுகிறேன்.

பொதுவாக கருத்தாடுவதை விட கவிதையில் வந்த கருத்தைக் கண்டோமென்றால் - கழுத்தெழும்பு முறிந்த நிலையிலும், இரண்டு வருட காலம் இடைவிடாமல் முயற்சி செய்ததையும், அந்த நிலையில் தன்னால் எதை சாதிக்க முடியுமென பட்டியலிட்டு சாதிக்க விரும்புவதையும்தானே கவிதையும் கூற வருகிறது?

“உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்” - தன்னால் முடியாது என்று நினைத்திருந்தால் இந்த வாக்கியங்கள் மெக்டெர்மாட்டிடம் இருந்து வந்திருக்கவே இயலாது.

கவிதை வாக்கியங்களை எதிர்மறையாக நோக்க வேண்டிய அவசியம் இல்லை - தன்னால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் முயலும் ஒரு அற்புத இளைஞனின் வார்த்தைகளாகத்தான் எனக்குத்தோன்றுகிறது.
 
சின்ன வயசில் பாடப்புத்தகத்தில் படித்தது. இலக்குப் பார்.. அம்பை விடு என்ற பாடம். இதுவே அதன் சாரம்சம்..

மாணாக்கர்களை சோதிக்க எண்ணினார் வில்வித்தைக் குரு துரோணாச்சாரியார். ஒரு மரம்.. அதன் ஒரு கிளையில் பொம்மைக் கிளி. கிளியின் கழுத்தில் அம்பால் அடிக்கவேண்டும் என்பது இலக்கு. ஒவ்வொருவரும் வில்வளைத்து நாணேற்றி இலக்குப் பார்க்கும்போது துரோணர் கேப்பார், மரம் தெரிகிறதா? கிளை தெரிகிறதா? கிளி தெரிகிறதா? கிளியின் கழுத்து தெரிகிறதா?.. எல்லாரும் எல்லாம் தெரிகிறது என்று சொல்லக் கர்ணன் சொல்வான் "மரம் தெரியவில்லை; கிளை தெரியவில்லை; கிளிதெரிகிறது".. அவனாலும் கிளியின் கழுத்தை கொய்ய முடியவில்லை. அர்ச்சுனன் வந்தான். கிளியின் கழுத்தை தவிர வேறெதுவும் தெரியவில்லை. இலக்கை அடித்தான்.

அர்ச்சுனால் மட்டுமே முடியும் என்று அறுதியாக நம்பியதால் அவனை இறுதியாக அழைத்தார் துரோணர்.(?)

இந்த அம்பால் இதனைத்தான் செய்ய முடியும். இதனைச் செய்தால் இதனை அடையமுடியும் என்பதை நினைத்து முடித்தான் அர்ச்சுனன்.

இருவரும் முடிவதை மட்டும் நினைந்துள்ளார்கள். இப்போதும் அர்ச்சுனர்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் களங்களும் வீரர்களும் முன்பு போல இல்லை. பல கருத்துப் போர்கள் நெறிபிறழ்ந்து தடம் புரள்வதும் இதனால்தான். இதனை உணர்ந்து முடிவதை மட்டும் நினைப்பவர்கள் எவரும் தோற்பதில்லை.

சேவலை வளர்த்து முட்டைபோடு என்றால் முடிகிற காரியமா?

பேடை வளர்க்க வேண்டும். இதுவே முடிவதை நினை.
 
Last edited:
எத்தனை வாட்டிப் படித்தாலும் பச்சைக் காய்கறியாய் இந்தக்கவிதை.

வாழ்த்த வாகில்லை. வணங்கி நிற்கிறேன் அண்ணா!.
 
சேவல் கோழி முட்டை போடுவது, ஆண்கள் கர்ப்பமாவது, சிகப்பு பேனா பச்சையாக எழுதுவது, குதிரைக்கு கொம்பு முளைப்பது, புலி புல் தின்பது - போன்ற இயற்கையாகவே முடியாதவைகளையா இளசு " Not What You Can't Do " - ல் சொல்லுகிறார்?

இல்லை. இவை எல்லோருக்கும் தெரியும் "முடியாதவை" என்று. அப்படி என்றால், "Not What You Can't Do " - ல் சொல்ல வருவது என்ன? இந்த வாக்கியமே குற்றம்( நன்றி: நக்கீரன் :) )

நினைக்கும் போது எப்படி "முடியும் முடியாது" என்று நினைக்க முடியும்?

ராமேஸ்வர குழந்தை வளர்ந்து ஜனாதிபதி ஆகிறது? வறுமைக்கு பிறந்த குழந்தை மைக்கேல் ஜாக்சன் ஆகிறது? எப்படி? எனவே "முடியும்" என்ற ஒரே நினைப்பு தான் உள்ளது.

குறிப்பு:
இந்த சிறந்த கவிதையை குறைத்துப் பேசுவது என் நோக்கமல்ல. 'என்றும் இளசு' இன்னும் இப்படி 'என்றும் நிலைக்கும் கவிதை'களை இன்னும் தர வேண்டும்.
 
அன்பின் இளசுவின் நண்பருக்கு என் ஊக்கங்கள்...
இளசு, இது பலமுறை வாசித்த கவிதைதான் என்றாலும், கவிதையின் கருத்து கேள்விக்கு வந்த போது கவிதை திரிசங்கு லோகத்தில் தொங்குவது போல எனக்கு தோன்றும்... அதனால் பணி பளுவிலும் களம் குதித்துவிட்டேன்...
மனிதனால் முடியாது என்று எதுவும் கிடையாது என்று சொல்லும் அளவிற்க்கு சாதனைகள்...
ஆனால் எல்லாம் ஒரு தனி மனிதனால் முடியுமா என்று சொல்லும் போது... கடினமே...
ரைட் பறந்ததும் அப்படிதான்... ஆதி கால மனிதனின் கனவு கரு, இறக்கை கட்டி பறது, தோற்று, பலூன் கட்டி மலையில் இருந்து குத்தித்து, கிளைடர் கட்டி கால் உடைத்து.. அப்படா எத்தனை தோல்விகள்... அந்த தோல்விகளை எல்லாம் படிகளாக்கி பழம் பறித்தார்கள் ரைட்...
டெர்மாட்.. தான் சிறப்பாக வாழ தன்னால் சின்ன சின்ன வெற்றிகளை படிகளாக்க நினைக்கிறார்...
வெற்றி எப்போது அதன் கடைசி வடிவிலையை எடைபோட படுகிறது... அது கடந்து வந்த பாதையால் அல்ல... பாதைகள் வேறாயிருக்கலாம்... டெர்மட் தன் கண்ணுக்கு தெரிந்த தெளிவான பாதையில் பயணிக்கிறார்...
ராபர்ட் பிராஸ்டின் "தி ரோட் நாட் டேக்கன்" ந் கடைசி வரிகள் போல, சாதனையாளராகவும் விரும்பலாம்... உங்களுக்கு வெற்றிய அடைய நேரமோ, அதன் வழியோ தெரியாமல் ஒரு புதையல் வேட்டை போல செய்யலாம்...
இளசு.. உங்கள் நண்பரை நீங்கள் 2013 சந்திக்க விரும்புகிறென், அதனால் வரும் மூன்றாம் பத்தி எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
ஏழாண்டுகளுக்குப் பின்னரும் இளசாய் இருக்கும் இது போன்ற கவிதைகளை எப்போதாவது காண ஆவல்.
 
முடிவதை மட்டும் நினை




முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை

கவிக்கு அடி, தளை, தேமா, புளிமா, எதுகை, மோனை, இலக்கணம், தலைக்கனம் இதெல்லாம் தேவைதான். ஆனால் நமக்கு அவர் சொல்ல வந்த விஷயங்களை அவரால் முடிந்த வரை கவிதை வடிவில் சொல்ல முனைந்திருக்கிறார். அந்த நல்ல உள்ளத்தை பாராட்டுவதோடு அவரை பாதித்த பதிவுகள் நம்மையும் பாதித்திருக்கிறது என்றளவில், அவரது முயற்சியை வரவேற்போம்.
 
முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை
- நன்றாய் இருக்கிறது
 
Back
Top