முடிவதை மட்டும் நினை

இளசு

New member
முடிவதை மட்டும் நினை


1993

ஆர்வம் தெறிக்கும் கண்கள்
அவசரம், கற்க ஆத்திரம்
என்னையே பார்த்தேன் உன்னிடம்
என் நிறம் கறுப்பு, உதிரமோ ஒரே நிறம்

வேற்றுமை இல்லை நம்மிடம்
நான் கற்பிப்பவன் -தான்
உன்னிடமும் கற்றுக்கொண்டேன்
என்னிடம் நீ அறிவியலை
உன்னிடம் நான் இந்நாட்டு வாழ்வியலை

கையால் சோறுண்ண நீ தடுமாற- முள்
கரண்டியோடு நான் சடுகுடு ஆட
இளையராஜாவை நான் தர
எல்விஸ் பிரஸ்லி நீ தர

பண்டம் மட்டும் அல்ல
பண்பாடும் கைமாறியது
காலவெள்ளத்தில் வாழ்க்கை
திசைமாறியது
ஒரு U திருப்பம் வந்து உன் தேசத்துக்கே
மீண்டும் என் வழி மாறியது

2003

வந்த சேதி கேட்டு ஓடி வந்தாய்
இல்லை இல்லை சக்கர வண்டியில் வந்தாய்
"என்னாச்சு டெர்மாட்?"
கண்கள் ஊற்றெடுக்கக் கேட்டேன்

புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்
கண்ணீர் உன் ஊரில் தட்டுப்பாடு
தண்ணீருக்கு மட்டுமே என்னூரில் கட்டுப்பாடு

சொன்னாய், கோரக்கதை சொன்னாய்
சைப்ரஸ் பயணம் சைத்தானாய் அமைந்த கதை
கார் கவிழ்ந்து கழுத்தெலும்பு முறிந்த நிலை
இடைவிடா பயிற்சி இரு வருடம்

எத்தனை எத்தனை தடைக்கற்கள்
எப்படி தாண்டினாய் இளைஞனே

சக்கர நாற்காலிதான் இனி கால்கள்
மாற்றி அமைத்த கார்தான் உன் சிறகுகள்
புரிந்தும் சேர்ந்த தோழி உன் மன மருந்து
புதிதாய் கற்ற கணினிதான் பொழுதுபோக்கு

புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்

"எப்படி சாதித்தாய் டெர்மாட்?"
" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.
காலையில் கண்ணாடிக்கு சொல்வேன்:

Think What You Can Do-
Not What You Can't Do "


முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை
 
Last edited:
இளசு நீங்கள் எழுதியிருப்பது கதையா? கவியா?
ஒருமுறை படித்தால் கதை போல் தோன்றுகிறது
மறுபடி படித்தால் கவிதைபோல் தோன்றுகிறது
அதனால் நான் மூன்றாம்முறை படிக்கவில்லை............. நாராயனா!!!
 
Last edited by a moderator:
இளசு நீங்கள் எழுதியிருப்பது கதையா? கவியா?

ஒருமுறை படித்தால் கதை போல் தோன்றுகிறது

மறுபடி படித்தால் கவிதைபோல் தோன்றுகிறது

அதனால் நான் மூன்றாம்முறை படிக்கவில்லை............. நாராயனா!!!



வசனத்தை வரிபிரிச்சி

வார்த்தைகளை ஒடச்சி மடக்கி

கவிதன்னு பேரும் வச்சு

கணினி மேல ஏத்திவுட்டா.....



"ராபணா"ன்னு போட்டு ஒடச்சாரு :lol:

"நாராயானா"ன்னு சொல்லும் நாரதரு!
 
Last edited by a moderator:
Re: முடிவதை மட்டும் நினை

கதையோ? கவிதையோ?
எல்லாவற்றையும் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு
சொல்லவந்த கருத்துக்களை மட்டும் எடுத்தால்
கண்ணில் மிஞ்சுவது ஒரு சில துளிகள்
என்பது மறுக்க முடியாத உண்மை..
என்னைத்தொட்ட வரிகள்...


"எப்படி சாதித்தாய் டெர்மாட்?"
" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.
காலையில் கண்ணாடிக்கு சொல்வேன்: </span>
Think What You Can Do-
Not What You Can't Do "

முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை

எல்லோர்க்கும் இது சத்திய வாக்கு..
வாழ வேண்டும் என்று துடிப்பவனுக்கு இது கீதை,பைபிள், குரான்..
எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்..

பாராட்டுக்கள் இளசுவிற்கு..
 
Last edited by a moderator:
Re: முடிவதை மட்டும் நினை

கதையோ? கவிதையோ?
எல்லாவற்றையும் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு
சொல்லவந்த கருத்துக்களை மட்டும் எடுத்தால்
கண்ணில் மிஞ்சுவது ஒரு சில துளிகள்

அவரு கஷ்டப்பட்டு எவ்வளவோ பந்தி பந்தியா எழுதியிருக்காரு......
நீங்க என்னவோ அதை துளி என்கிறீர்களே???..... நாராயனா!!!!
 
Last edited by a moderator:
Re: முடிவதை மட்டும் நினை

கதையோ? கவிதையோ?

எல்லாவற்றையும் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு

சொல்லவந்த கருத்துக்களை மட்டும் எடுத்தால்

கண்ணில் மிஞ்சுவது ஒரு சில துளிகள்



அவரு கஷ்டப்பட்டு எவ்வளவோ பந்தி பந்தியா எழுதியிருக்காரு......

நீங்க என்னவோ அதை துளி என்கிறீர்களே???..... நாராயனா!!!!



உணர்ச்சியில் கண் கலங்குவதைத்தான் அப்படி சொன்னேன்..




எதிர் சீட்டு:

இதுக்குத்தான் பெரிய அறிவாளி மாதிரி எழுதக் கூடாது.. நாரதருக்கு புரிய மாட்டேங்குது பார்த்தியா.

திருப்பி அதுக்கு ஒரு விளக்கம் எழுத வேண்டியிருக்கு பார்த்தியா?

புரிகிறமாதிரி எழுது ராம்...
 
Last edited by a moderator:
Re: முடிவதை மட்டும் நினை

உணர்ச்சியில் கண் கலங்குவதைத்தான் அப்படி சொன்னேன்..

கண்ணீர்துளியோ பன்னீர்த்துளியோ..... துளி எப்பவும் துளிதானே?
 
Last edited by a moderator:
Re: முடிவதை மட்டும் நினை

உணர்ச்சியில் கண் கலங்குவதைத்தான் அப்படி சொன்னேன்..

கண்ணீர்துளியோ பன்னீர்த்துளியோ..... துளி எப்பவும் துளிதானே?

எதிர் சீட்டு:
இதுக்கும் மேல புரியலைன்னா ராம் பதில் சொல்ல மாட்டாரு. நான் தான் பதில் சொல்வேன்.
ஒரு துளி விந்தின் பயணம் கேவலமா?
அணையின் விரிசலில் இருந்து வரும் சிறு துளி கேவலமா?
சிறு துளி பெருவெள்ளம் மடையர்கள் சொன்னதா?
துளி என்பது கேவலமான விஷயம் இல்லை..
அதை கேவலமாக பார்க்கும் மனோபாவத்தை மாற்றிக் கொள்ளுங்கள்..
ஏதோ எழுத வேண்டும் என்று எழுதாதீர்கள்..
 
Last edited by a moderator:
நான் ஏதோ எழுதவேண்டும் என்று எழுதியிருந்தால்.....
துளியின் இத்தனை பெருமைகள் புரிந்திருக்குமா? யாரும் அறிந்திருப்பாரா?
துளிக்குள் இத்தனை விஷயங்களை நீங்கள்தான் இங்கு சொல்லியிருப்பீர்களா?
நாராயனா..............!! நாராயனா!! நாராயனா!!!
 
Last edited by a moderator:
உங்கள் கவிதை மிக யதார்த்தமாக இருந்தது. பலவித மனக் கஷ்டங்களில் இருந்து வந்த எனக்கு உங்களின் இந்தக் கவிதை ஒரு வித ஆறுதலைத் தந்தது.நன்றி
 
Last edited by a moderator:
அண்ணா.. உங்களின் இந்த படைப்பை அடிக்கடி அல்ல தினமும் படிக்க வேண்டும் நான்!!!

நன்றியுடன் பாராட்டுக்கள்!!!
 
Last edited by a moderator:
பலவித மனக் கஷ்டங்களில் இருந்து

இனிய தோழியே
கஷ்டங்களை கடந்த காலத்தில் குறிப்பிட்டு என்னை மகிழவைத்தீர்கள்.
எதுவுமே கடந்துபோகும்... கஷ்டங்கள் கூட....
எந்த கருமேக விளிம்பிலும் கதிர்வெளிச்சம் உண்டு...
எந்த மன இருள் இரவுக்கும் விடிவெள்ளி உண்டு..

எல்லாமே நன்மைக்கே...
நன்மைகளே விளைய விழையும்
நண்பன்......
 
Last edited by a moderator:
அண்ணா.. உங்களின் இந்த படைப்பை அடிக்கடி அல்ல தினமும் படிக்க வேண்டும் நான்!!!

அது மட்டும் போதாது தம்பீ.....
படித்தபடி நடக்க வேண்டும்.
 
Last edited by a moderator:
Re: முடிவதை மட்டும் நினை

கண்ணில் மிஞ்சுவது ஒரு சில துளிகள்

முத்துத் துளிகளைவிட வேறு என்ன பெரிய பரிசு உண்டு.....?
நன்றி இளவலுக்கு!!!
 
Last edited by a moderator:
எல்லோரும் கண்டிப்பாய் படிக்க வேண்டிய ஒன்று...தாமதமாக படித்து
கருத்து சொல்வதற்கு வெட்கப்படுகிறேன் என்னை நினைத்தே.....

என்ன சொல்ல ? நான் என்ன சொல்ல ? அருமை இளசே
 
Last edited by a moderator:
பத்து வருட இடைவெளி. நல்ல கவிதை. பாராட்டுக்கள் அண்ணாவுக்கு.

நன்றிகள் பப்பிக்கு.-அன்புடன் இக்பால்.
 
Last edited by a moderator:
புரிந்து சேர்ந்த தோழி
புதிதாய் கற்ற கணினி
இவற்றோடு நண்பர் டெர்மாட்டுக்கு
தமிழென்னும் தேனை குழைத்து
கவிதையாய் நீ தந்த மருந்து
மனித நேயம் மறைய வில்லை நண்பா...
உலகில் அவை மலர தொடங்குகிறது......

இளசின் இளகிய மனம்
இனிய கவிதையில் தெரிந்தாலும்,
நண்பர் டெர்மாட்டின் தன் நம்பிக்கை
நம்மக்கெல்லாம் தனி பாடம்...


துளியான விஷயத்தை தூள் கிளப்பிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
 
Last edited by a moderator:
சமுத்திரா...திரும்பிப்பார்க்க வைக்கிறீர்கள். பாராட்டுக்கள்.



-அன்புடன் அண்ணா.
 
Last edited by a moderator:
தை மாதம்
முடிவதை நினை..!
மனதில் தைத்த கவிதை
மனதை தைத்த கவிதை...

கடினமான பாடத்தை எளிதாய் சொன்ன கவிதை அண்ணா...
(ஒட்டியதற்கும் என் நன்றி.)
 
Last edited by a moderator:
மிக அருமையான கவிதை ( கதை..?)

உலகத்தில் கற்க வேண்டியது ,புரிய வேண்டியது,

தெரிந்து கொள்ளவேண்டியது ஆயிரம் ...ஆயிரம் ..

மிக அருமை ...

நன்றி அண்ணா ....
 
Last edited by a moderator:
Back
Top