அறுவடைக் காலம் (5 வரிக் கதை)

அப்பா அப்பா, சித்தின்னா எப்டி இருப்பாங்க?

ஷு..சும்மா கெட..தொணதொணன்னு....

.......

ப்ரியா ப்ரியா, அந்தப் பையன் யாருமா?

ஷு..சும்மா கெடங்கப்பா..தொணதொணன்னு....

என் அறுவடைக் காலம் ஆரம்பமாகியிருந்தது.
 
அழகாயிருந்தது ஐந்து வரி க(வி)தை.

சுவை இல்லாதபோது சுமைதான், அப்பாவானால் என்ன, மகளானால் என்ன?
 
எல்லோருக்குமே அறுவடைக்காலம் என்று ஒன்று உண்டு. அதில் தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

கவிதை நன்று! பாராட்டுக்கள்.
 
எல்லோருக்குமே அறுவடைக்காலம் என்று ஒன்று உண்டு. அதில் தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

கவிதை நன்று! பாராட்டுக்கள்.

நன்றிங்க ஐயா
 
ஆறு வயதில் ஆர்வம் அறுவடையானது!
அறுபது வஙதில் அக்கறை அறுவடைசெய்யப்பட்டது!
அயிந்துவரிகளில் நல்ல க(வி)தை அறுவடை செய்யப்பட்டது!
 
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்பது பழமொழி.
ஐம்பது வரியில் சொல்வதை ஐந்து வரியிலேயே சொல்வது கதைமொழி.
பதிவுக்கு நன்றி.
மும்பை நாதன்
 
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்பது பழமொழி.
ஐம்பது வரியில் சொல்வதை ஐந்து வரியிலேயே சொல்வது கதைமொழி.
பதிவுக்கு நன்றி.
மும்பை நாதன்

​நன்றிங்க
 
Back
Top