கீதம்
New member
விலங்குகளில் ஆடு, மாடு, மான் போன்றவற்றுக்குக் கொம்புண்டு என்பதை அறிவோம். அழகுக்கொண்டை வைத்த மயில், கிளி, மரங்கொத்திகளை அறிவோம். கொம்பு வைத்தப் பறவை? இருக்கிறதா என்ன? இருக்கிறதே…
ஆஸ்திரேலியாவிலும் அதற்கு அக்கம்பக்கமுள்ள பப்புவா நியூகினியா, நியூபிரிட்டன், யாப்பென், ஆரு போன்ற தீவுகளிலும் காணப்படும் காஸோவரி பறவைதான் அது. ஒரு ஆள் உயரத்தில் வாலிறகுகள் அற்று, பளபளக்கும் கருநிற உடலும் இறகுகளும், பளீர் நீலநிறக் கழுத்தும் செக்கச்சிவந்து தொங்கும் தாடைச்சதையும், தடித்த கால்களும், கத்தி போன்ற நகங்களும், தலையில் பழுப்புநிறக் கொம்பும் கொண்ட ஒரு விநோதப் பறவை காஸோவரி (Cassowary). காஸோவரி என்றால் பப்புவன் மொழியில் கொம்புத்தலை என்று பொருளாம். கொம்பு கொம்பு என்று சொல்கிறோமே… உண்மையில் அது கொம்புதானா? இல்லை இல்லை…
அப்பறவையின் உச்சந்தலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான நுண்துளை காற்றறைகளின் மேலே அமைந்துள்ள தோலடுக்குதான் அப்பறவைக்குக் கொம்பு போன்ற தோற்றத்தைத் தருகிறது. அந்தத் தோலடுக்கு காரட்டீன் எனப்படும் நார்ப்புரதத்தால் ஆனது. விலங்குகளின் கொம்பு போன்று கடினமாகவும் கூராகவும் இல்லாமல் சற்றே மிருதுவாகவும் மழுங்கையாகவும் அதேசமயம் ஆமை ஓட்டைப்போன்று அழுத்தமாகவும் உள்ள உறுப்புதான் அந்த ஏழங்குல உயரக் கொண்டையழகு. இந்தக் கொம்பானது காஸோவரியின் வாழ்நாள் முழுவதும் வளர்ந்துகொண்டே இருப்பதால் இதைக்கொண்டு பறவையின் வயதைக் கண்டறிந்துவிடலாம்.
அடர்ந்த மழைக்காடுகளில் வாழும் இப்பறவைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள ‘பூம்ம்ம்ம்ம்ம்’ என்று கொம்பூதுவது போல் ஒலியெழுப்பவும் பிற காஸோவரிகள் உண்டாக்கும் மிகக்குறைந்த அலைவரிசையுள்ள அதிர்வொலிகளைக் கேட்கவும் இந்தக் கொம்பு உதவுகிறதாம். மழைக்காடுகளில் உள்ள அடர்ந்த மரஞ்செடி கொடிகளினூடே இப்பறவை சிரமமின்றிப் புகுந்து புறப்பட ஏதுவாய் அமைந்திருப்பது அந்தக் கொம்பின் மற்றொரு சிறப்பு.
காஸோவரியில் மூன்று பிரிவுகள் இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் காணப்படுவது மூன்றிலும் பெரிய பறவையான தென்பிராந்திய காஸோவரி இனம் மட்டுமே. இது குவீன்ஸ்லாந்து மாகாணத்தில் அருகிவரும் பறவையினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இவற்றின் எண்ணிக்கை 1500 இலிருந்து 2000 க்குள்தான் இருக்குமென்று அறியப்பட்டுள்ளது. மற்ற இரு பிரிவுகளான வடபிராந்திய காஸோவரியும் குள்ளக்காஸோவரியும் பப்புவா நியூ கினியா, ஆரு, நியூபிரிட்டன், யாப்பென் போன்ற தீவுகளில் காணப்படுகின்றன.
காஸோவரியின் பிரதான உணவு பழங்கள்தாம். கிட்டத்தட்ட 26 வகையான பழங்களையும் 238 வகைத் தாவர உணவுகளையும் உண்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. Cerbera floribunda என்ற தாவரவியல் பெயர் கொண்ட மரத்தின் பழங்களை காஸோவரி பறவைகள் மிகவும் விரும்பி உண்பதால் அது காஸோவரி ப்ளம் மரம் (cassowary plum tree) என்றே அழைக்கப்படுகிறது.
இப்பறவை பெரும்பாலான நேரத்தை பழமரங்களின் கீழேயே கழிக்குமாம். அதுவும் பழங்கள் பழுத்து உதிரும் சமயமென்றால் சொல்லவே வேண்டாம். முழுநேரமும் மரத்தின் அடியிலேயே சுற்றிக்கொண்டிருக்குமாம். கிட்டத்தட்ட முப்பது மீ. உயர மரங்களிலிருந்து கீழே விழும் பெரிய பழங்கள் இதன் தலையில் விழுந்தால் என்னாவது? தலைக்கு சேதமுறா வண்ணம் இயற்கை அளித்த ஒரு தலைக்கவசம் அதன் கொம்பு என்பது இன்னொரு விநோதம். ஆம். கொம்பின் உள்ளே எலும்புக்கு பதில் காற்றறைகள் இருப்பதால் கொம்பு ஒரு அதிர்வுத்தாங்கியாகவும் (shock-absorber) செயல்படுகிறது.
பறக்கவியலாத பறவையினத்தில் தற்போது உலகிலுள்ள மூன்றாவது பெரிய பறவை இது. முதலாவது பெரிய பறவை ஆப்பிரிக்காவில் உள்ள ஆஸ்ட்ரிச் (Ostrich) எனப்படும் தீக்கோழி, இரண்டாவது, ஆஸ்திரேலியப் பறவையான ஈமு (Emu). ஆனால் ஈமுவை விடவும் உடல் எடை அதிகமுள்ள பறவையினம் இது. சிறகிருந்தும் இப்பறவைகள் பறக்க இயலாமைக்குக் காரணம், இவற்றின் சிறகெலும்புகளை மார்புக்கூட்டோடு பிணைக்கும் இணைப்பெலும்பு இல்லாமையே. பறக்கவியலாத பறவையினம் ராட்டைட் (ratite) இனம் என்று குறிப்பிடப்படுகிறது. ராட்டைட் என்றால் லத்தீன் மொழியில் மிதவைத்தெப்பம் என்று பொருளாம். நியூஸிலாந்தைச் சார்ந்த மோவா பறவையும் மடகாஸ்கரைச் சார்ந்த யானைப்பறவையும் இந்த ராட்டைட் இனத்தின் அழிந்துபோன உயிரினங்கள்.
காஸோவரி பறவைகள் பொதுவாக 1.5 மீ. முதல் 1.8 மீ உயரம் வரை வளரும் என்றாலும் சில பெண்பறவைகள் 2 மீ. உயரம் கூட வளரக்கூடியவை. பெண் காஸோவரியின் எடை 75 கிலோ வரையிலும் ஆண் காஸோவரியின் எடை 55 கிலோ வரையிலுமாக இருக்கும். இவற்றின் ஆயுட்காலம் தோராயமாக நாற்பது முதல் ஐம்பது வருடங்கள் வரை இருக்கும். காஸோவரியால் 1.5 மீ உயரத்தைத் தாண்டவும், மணிக்கு ஐம்பது கி.மீ. வேகத்தில் ஓடவும் முடியும். பெருநதிகளிலும் கடலிலும் நன்றாக நீந்தவும் முடியும்.
காஸோவரி பறவையின் பிரதான உணவு பழங்கள் என்று முன்பே பார்த்தோம். வாழை, ஆப்பிள் போன்ற பழங்களை அப்படியே முழுங்கக்கூடியது. பழங்களை அப்படியே உண்பதால் விதைகள் எச்சத்தின் மூலம் வெளியேறி, மழைக்காடுகளில் விதை பரவுதல் சிறப்பான முறையில் நடைபெறுகிறதாம். பல கி.மீ. பரப்பளவில் இவை உலவுவதால் மழைக்காடுகளின் தாவரப்பெருக்கத்துக்கு இவற்றின் பங்கு மிக முக்கியமாம். ஏனெனில் மிகப்பெரிய அளவு பழங்களின் கொட்டைகள் பல இடங்களிலும் பரவுவதற்கு வேறு எந்த வழியும் இல்லையே. அது மட்டுமல்ல, இவற்றின் கழிவு மழைக்காட்டுக்கு நல்ல இயற்கை உரமாகிறது.
இப்பறவைகள் ஆப்பிள், காஸோவரி ப்ளம், காட்டுத் திராட்சை, பனம்பழம் போன்ற அநேக பழங்களோடு இதர உணவுகளாக துளிர்கள், பூக்கள், காளான், நத்தை, பூச்சிகள், தவளைகள், பறவைகள், மீன், எலி மற்றும் இறந்து அழுகிய பிராணிகளையும் தின்னக்கூடியவை. காஸோவரி பறவைகளுக்கு சீரணத்திறன் அதிகம். அவற்றின் சீரணத்திறனானது நச்சுப் பொருட்களையும் சீரணிக்கவல்லது. எனவே எதையாவது ஒரு காஸோவரி பறவை தின்றால் நாமும் அதைத் தின்னலாம் என்று முடிவெடுத்துவிடக்கூடாது. அது ஆபத்தில் முடியலாம்.
பொதுவாக காஸோவரி கூச்ச சுபாவமுள்ள பறவை என்றாலும் தாக்கப்படும்போது முழு வேகத்தையும் பிரயோகித்து எதிரியை வீழ்த்தக்கூடியது. ஆபத்து வேளையில் தற்காத்துக்கொள்ள, மனிதர்களையும் விலங்குகளையும் தன் வலிமையான காலால் ஒரு உதை விடும்போது கால்விரலிலுள்ள ஐந்தங்குல நீள நகத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு நேர்வதுமுண்டு. 2004 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் ‘உலகிலேயே மிகவும் ஆபத்தானப் பறவை’ என்று காஸோவரியின் பெயர் இடம்பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. (தொடரும்)

Last edited: