ஒரு விளம்பரம் :
மணமகன் தேவை .
மணமகள் பெயர்: பவானி
ஊர் : சென்னை
தந்தை : நரசிம்ஹன்
தாய் : சிவகாமி
வயது : 36 DOB : ON REQUEST
வேலை : கணினி கம்பனி, சென்னை
படிப்பு : . பி டெக் ( கம்ப்யூட்டர் சயின்ஸ் ). எம் பி எ,
வருமானம் : ரூபாய் : 14 லட்சம் / வருடம்
உயரம் : 5.4
எடை : 55 கிலோ
உடன் பிறப்பு : இரண்டு சகோதரிகள்
மொழி : தமிழ்
எதிர்பார்ப்பு :
மணமகன் குறைந்தது ஒரு மேல் பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும் . வேலையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. இருந்தால் நலம் . குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் . வீட்டு கணவனாக இருக்க வேண்டும் அது அவசியம் . (home maker )
வரதட்சினை எதிர்பார்க்க வில்லை நல்ல குணம், பார்க்க லக்ஷணம் அவசியம் தேவை . வீட்டு பெரியவர்களை அன்புடன் நடத்த வேண்டும் . கூட்டு குடும்பம் எதிர் பார்க்க கூடாது. தனி குடும்பம் அமைக்க வேண்டும் .
தொடர்பு கொள்ள முகவரி : பவானி மொபைல் : XXXXXXXXXX.
.
****
சம்பத் :நான் சம்பத் பேசறேன் . பையனோட அப்பா . மடிபாக்கம் சென்னை . உங்க பொண்ணு ஜாதகம் கணேசன் மேட்ரிமொனியல்லே பார்த்தோம் . ஜாதகம் பொருந்தியிருந்தது . அதுதான் மேலே பேசலாம்னுட்டு....உங்களுக்கு நேரமிருந்தா என் பையன் கல்யாண விஷயமா உங்க கூட பேச முடியுமா ?
நரசிம்ஹன் : பேசலாமே ! தாராளமா பேசலாம் . பையன் என்ன பண்றான் ?
சம்பத் : பையன் பேரு ராஜா . ஒரு பெரிய கம்பனியிலே சென்னையிலே தான் வேலை பண்றான் . எம் . டெக் மெகானிகல். எம் பி ஏ சம்பளம் ஒரு பதினைந்து லக்ஷம் வருஷம் வரும் . இன்னும் கல்யாணம் ஆகலே . பொண்ணு பார்த்துண்டு இருக்கோம்.
நரசிம்ஹன்: அடடா ! இது சரிபட்டு வருமா ? என் பொண்ணு பதினாலு லக்ஷம் இப்பவே வாங்கறா . இன்னும் இரண்டு வருஷத்திலே 20 எட்டிடுவா. சரி பாக்கலாம் . பொண்ணு கிட்டே பேசிட்டு சொல்றேன் !
சம்பத் : சரி சார்.
நரசிம்ஹன்:: பையனுக்கு என்ன வயசாறது ?
சம்பத் : நாப்பது முடிஞ்சு 41 ஆரம்பம் சார் .
நரசிம்ஹன்:: கொஞ்சம் வயசு வித்தியாசம் அதிகம் போல இருக்கே . நாங்க 2 – 3 வயசு வித்தியாசம் தான் பாக்கறோம். சரி, பரவாயில்லே , பையனுக்கு சமையல் பண்ண தெரியுமா ?
சம்பத் : தெரியாது சார். ஆனா, கல்யாணத்திற்கு முன்னாடி எல்லாம் கத்து கொடுத்திடுவோம் !
நரசிம்ஹன்: சரி போகட்டும் , சீர் என்ன செய்யாலாம்னு இருக்கீங்க ?
சம்பத் : நீங்க சொல்றபடி செஞ்சுடலாம் சார் .
நரசிம்ஹன்:: நல்ல கார் வாங்கி கொடுத்திடுங்க . மத்ததெல்லாம் உங்க விருப்பபடி .
சம்பத் : சரி சார்.
நரசிம்ஹன் : பையனுக்கு கார் ஓட்ட தெரியுமெல்லே ?
சம்பத் : பையனுக்கு கார் நல்லாவே ஓட்டத்தெரியும் சார் .
நரசிம்ஹன்:: அப்புறம் , சொல்ல மறந்திட்டேன் ! பொண்ணு கல்யாணத்திற்கு பிறகும் , அவ சம்பளத்தை எங்க கிட்ட தான் கொடுப்பா ! நீங்க கேக்க கூடாது . சம்மதமா ?
சம்பத் : தாராளமா ! எங்களுக்கு ஓகே! ஆனா, எதுக்கும் பையனை ஒரு வார்த்தை கேட்டுக்கிறோம் . அவன் என்னமோ பாதி பாதி என்று சொல்லிக் கொண்டிருந்தான் .
நரசிம்ஹன்:அப்படியா ! இது பத்தி எங்க பொண்ணை கேட்டுண்டுதான் முடிவு சொல்ல முடியும் . இந்த வரதட்சினை ?
சம்பத் : பையன் கிட்டே ஒரு கோடி டெபாசிட் இருக்கு . அதை கொடுத்திடறோம் .
நரசிம்ஹன்:: பையனுக்கு சொந்தமா வீடு இருக்கா?
சம்பத் : இன்னும் வாங்கலே சார். சீக்கிரம் வாங்கிடுவான் . பாங்க்லே லோன் போட்டிருக்கான் . எப்படியிருந்தாலும், எங்க வீடு, எங்களுக்கு அப்புறம் அவனுக்கு தானே !
நரசிம்ஹன்:: ரொம்ப பழைய வீடோ ?
சம்பத் : இல்லே ! இப்போ தான் 2௦ வருஷமாகிறது . அது பேரிலே லோன் எதுவுமில்லே . புதுசு மாதிரி தான் இருக்கும் . மூணு பெட்ரூம் ஹால் கிச்சன் .
நரசிம்ஹன்:: அது ஓகே . பையனுக்குன்னு தனி வீடு இருந்தா நல்லா இருந்திருக்கும் . அப்புறம், கல்யாணத்திற்கு பிறகு பையனும் பொண்ணும் தனி குடுத்தனம் தான் போகணும் . நீங்க போய் அங்கே நிக்க கூடாது .
சம்பத் : அப்படியே ஆகட்டும் சார். எங்க வீட்டை பையன் எடுத்துக்கட்டும். நாங்க ரிடைர்மென்ட் ஹோம்லே போய் செட்டில் ஆயிடலாம்னு இருக்கோம் . குழந்தைங்க சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம் . இல்லியா !
நரசிம்ஹன்: சரி, அப்படின்னா, உங்க பையன் ஜாதகம் , உங்க அட்ரஸ்,போட்டோ எல்லாத்தையும் வாட்சப்லே அனுப்பி வையுங்க. பார்த்துட்டு, ஒரு நல்ல நாளா பார்த்து , நாங்களும் பொண்ணும், உங்க பையனை, பிள்ளை பாக்க வரோம் . பொண்ணுக்கு பிடிச்சிருந்தா, மத்த விஷயங்களை மேலே பேசலாம் .
சம்பத் : அப்படியே ஆகட்டும் . ரொம்ப தாங்க்ஸ் .
****
நான்கு நாள் கழித்து :
நரசிம்ஹன் மொபைல் சிணுங்கியது . எடுத்தார் .
நரசிம்ஹன்: ஹல்லோ !
சம்பத் : நாந்தான் சம்பத் பேசறேன் . நீங்க வரேன்னு சொன்னீங்களே? .. என்னிக்குன்னு சொன்னா, சௌகரியமா இருக்கும் .
நரசிம்ஹன்: சம்பத்தா ! சொல்லுங்க ! என்ன விஷயமா ?
சம்பத்: . நாலு நாள் முன்னாடி என் பையன் ராஜா சம்பந்தமா உங்ககிட்டே பேசினேன். உங்க முடிவு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா ?
நரசிம்ஹன்: ஒ ! அதுவா ? நான் பொண்ணோட பேசினேன் . பொண்ணுக்கு இப்போ கல்யாணம் வேண்டாமாம். இப்போ தானே 36 வயசாறது . இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமேன்னு சொல்றாங்க. பையனுக்கு வேறே 4௦ வயசாரதாம் . கொஞ்சம் வயசு வித்தியாசம் ஜாஸ்தின்னு பீல் பண்றாங்க. இந்த சம்பந்தம் சரி பட்டு வராது போல் இருக்கு . நீங்க வேறே இடம் பாருங்க. ஆல் தி பெஸ்ட் .
சம்பத் : சரி ! அப்போ வெச்சுடறேன் !
****
சம்பத்தின் மனைவி : என்னங்க ஆச்சு ! என்னிக்கு வராங்களாம் ?
சம்பத்: இந்த இடமும் அமையலே ஜானகி ! இந்த பொண்ணு வீட்டுக் காரங்க, மேட்ரிமொனியல்லே போடறது ஒண்ணு. நேரக்க பேசறது ஒண்ணு. பையனை பிடிக்கல. நிறைய சம்பளம், வெளி நாட்டு வேலைன்னுட்டு ஏதோ எதிர்பார்க்கறாங்க போல . நம்ம கிட்ட சாக்கு போக்கு சொல்லி மழுப்பறாங்க. சரி விடு, வேறே வரன் பாக்கலாம். பொண்ணு கிடைக்கறது தான் குதிரை கொம்பா இருக்கு ! பாப்போம் ! கடவுள் விட்ட வழி .
சம்பத்தின் மனைவி : எவ்வளவு தான் பாக்கறது ? என்னிக்கு நம்ப பையனுக்கு கல்யாணம் ஆகப் போறதோ தெரியலியே . இப்பவே நாப்பது வயசாச்சு ! இப்படியே இருந்துடுவானோ ? அன்னிக்கே சொன்னேன் ! கம்ப்யூட்டர் படிடான்னு ! கேக்கலியே ! இன்னிக்கு கஷ்டப் படறோம் !
சம்பத்: கம்ப்யூட்டர் படிச்ச எல்லாரும் ஓஹோன்னு இருந்திடரதில்லை ஜானகி. ஒரு சில பேருக்கு தான் அந்த அதிர்ஷ்டம் அமையறது . அதையெல்லாம் பெருசு படுத்திக்காதே . ஏதோ ஜாதகம் பொருந்தி வரதேன்னு பார்த்தேன். இருக்கட்டும், வேறே தேடலாம் . ஜாதகமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். பொறுத்திருந்து தேடுவோம். இப்போதான் ராஜாவுக்கு 4௦ ஆறது. இன்னும் காலம் இருக்கு . பொண்ணு கிடைக்கும். காலம் மாறும் . நம்ம பையனுக்கும் நல்லது நடக்கும் . கவலைப் படாதே .
சம்பத்தின் மனைவி: அதுவும் சரிதான் .எல்லாம் அவன் பார்த்துப்பான் .
நடப்பதை கேட்டுக் கொண்டிருந்த மகன் ராஜா ,ஏதோ சொல்ல வந்தான்.அதை பார்த்த சம்பத் கேட்டார் .
சம்பத் : சொல்லு ராஜா, என்னவோ சொல்ல வந்தியே ? என்ன விஷயம் ?
ராஜா : ஒண்ணுமில்லேப்பா!இந்த காலத்திலே போய் சாதி, சமூகம், ஜாதகம் இதெல்லாம் பார்த்துகிட்டு . நான் ஒன்னு சொன்னா கேப்பீங்களா?
சம்பத் : சொல்லு ராஜா.
ராஜா : எங்க ஆபீஸ்லே உமான்னு ஒரு பொண்ணு இருக்கா. நம்ம ஜாதி இல்லே . வேறே ஜாதி . என்னை விட ரெண்டு வயசு சின்னவ. பி டெக் படிச்சி என்கூட வேலை செய்யறா. அவளுக்கு என்னை பிடிச்சிருக்கு . எனக்கும் அப்படித்தான் . எனக்குன்னு பொண்ணு தேடி அலையறதை விட்டு விட்டு, பேசாம அவளையே எனக்கு பேசி முடியுங்களேம்பா!
சம்பத் : அதுவும் சரி தான். அப்படியே செய்யலாம் . ஜாதகத்தை தூர போடு . அந்த பெண்ணோட அப்பாவை போய் நாளைக்கே பாக்கலாம். என்ன சொல்றே ஜானகி ?
ஜானகி : சரிங்க. ராஜாவுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான். ஜாதியாவது மதமாவது, எல்லாம் நம்ம மனசுதான் !
சம்பத் : அவன் பாத்துப்பான் அப்படின்னு நீ சொன்னது, ராஜாவை தானா?
ஜானகி : அட போங்க ! நீங்க வேறே !
......முற்றும்