ஆதி
New member
அறிவும் சுடரும்
அடர்ந்திருந்த போதும்
அன்பும் கண்ணீரும்
பெருகி வழிந்த போதும்
உறவும் உரசலும்
ஊற்றெடுத்து கொண்டிருந்த போதும்
உரிமையும் உடமையும்
ஊடாடி கொண்டிருந்த போதும்
சிரிப்பும் சிந்தனையும்
செரிந்திருந்த போதும்
கருத்தும் மோதலும்
கைகுலுக்கி கொண்டிருந்த போதும்
கலையும் கலாச்சாரமும்
கரை புரண்டிருந்த போதும்
படைப்பும் இலக்கியமும்
பரந்திருந்த போதும்
ஆன்றோரையும் சான்றோரையும்
அடையும் பாலமாய் இருந்த போதும்
சொல்லும் சிலம்பமும்
சுழன்று கொண்டிருந்த போதும்
பாசமும் பரிவும்
பால் மழையாய் பொழிந்த போதும்
நட்பில் நேசத்தில்
நனைந்த பூமியாய் இருந்த போதும்
விளையாட்டும் வேடிக்கையும்
விரவி கிடந்த போதும்
அப்படியே தான் இருந்தாய் தாயே
நீ
அப்படியே தான் இருந்தாய்
நிச்சலனமும் மௌனமும்
நிரம்பி பொங்கும் போதும்
அப்படியே தான் இருக்கிறாய் தாயே
நீ
அப்படியே தான் இருக்கிறாய்
புத்தனை போலவே
அடர்ந்திருந்த போதும்
அன்பும் கண்ணீரும்
பெருகி வழிந்த போதும்
உறவும் உரசலும்
ஊற்றெடுத்து கொண்டிருந்த போதும்
உரிமையும் உடமையும்
ஊடாடி கொண்டிருந்த போதும்
சிரிப்பும் சிந்தனையும்
செரிந்திருந்த போதும்
கருத்தும் மோதலும்
கைகுலுக்கி கொண்டிருந்த போதும்
கலையும் கலாச்சாரமும்
கரை புரண்டிருந்த போதும்
படைப்பும் இலக்கியமும்
பரந்திருந்த போதும்
ஆன்றோரையும் சான்றோரையும்
அடையும் பாலமாய் இருந்த போதும்
சொல்லும் சிலம்பமும்
சுழன்று கொண்டிருந்த போதும்
பாசமும் பரிவும்
பால் மழையாய் பொழிந்த போதும்
நட்பில் நேசத்தில்
நனைந்த பூமியாய் இருந்த போதும்
விளையாட்டும் வேடிக்கையும்
விரவி கிடந்த போதும்
அப்படியே தான் இருந்தாய் தாயே
நீ
அப்படியே தான் இருந்தாய்
நிச்சலனமும் மௌனமும்
நிரம்பி பொங்கும் போதும்
அப்படியே தான் இருக்கிறாய் தாயே
நீ
அப்படியே தான் இருக்கிறாய்
புத்தனை போலவே
Last edited: