யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். இது வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உண்மையில் யோகா என்றால், உடல், மனம், ஆத்துமா இவை மூன்றையும் இணைக்கும் ஒரு செயல். இதற்கு உதவி செய்யும் கருவி தான், பதஞ்சலி முனிவர் எழுதிய “அஷ்டாங்க யோக சூத்திரங்கள்”. எட்டு பாகம் அல்லது அங்கம் கொண்ட 196 யோக சூத்திரங்கள். யோகாவில் ஏழாவது படி தான் தியானம். அதை அடைய (1)யம, (2)நியம, (3)ஆசனம், (4)பிரணாயாமம், (5)பிரத்யஹாரா, (6)தாரணா ஆகிய படிகளை தாண்ட வேண்டும் .
இந்து தத்துவத்தின் படி யோகம் என்பது ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது. பதஞ்சலிமகரிஷி ,யோகாவை திட்டமிட்டு நடைமுறைப் படுத்தப்படுத்தியுள்ளார். இவர் வழங்கிய பதஞ்சலி யோகசூத்திரம் சுருக்கமான 196 சூத்திரங்களை கொண்டுள்ளது.
அஷ்டாங்க யோகா (எட்டு-அங்கங்கள் யோகா) என்ற முறைக்கு பதஞ்சலியின் எழுத்துக்கள் அடிப்படையாக இருந்தன.
யோகத்தின் எட்டு அங்கங்கள் பதஞ்சலியின் அட்டாங்க யோகம்
1. யமம் (5) பின்பற்றவேண்டியவை /எடுத்துக்கொள்ளத் தக்கவை) மிதவாதம், சாராதிருத்தல், பேராசை அற்ற தன்மை ,விவேக மற்ற தன்மை மற்றும் உரிமை கொண்டாடாதிருத்தல் . (அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிறன்மனை விழையாமை அதாவது பிரமச்சரியம், பிறர் பொருளை அபரிக்காமை )
2. நியமம் (5) கவனிக்கவேண்டியவை) புனிதம், போதுமென்ற மனம் / திருப்தி, கண்டிப்பு/ எளிமை, கற்றல் மற்றும் கடவுளிடம் சரணாகதி..
3. ஆசனம், இதன் பொருள் அமர்தல் அல்லது உடலின் நிலை.
4. பிராணாயாமம் (மூச்சை அடக்குதல்)ப்ராணா , மூச்சு, அயமா, அடக்குதல் அல்லது நிறுத்துதல்.மேலும் வாழ்க்கை ஓட்டத்தைக் கட்டுபடுத்துதல் எனவும் பொருள்படும்.
5. ப்ரத்யாஹரம் (தனியாக நீக்குதல்) புற உலக பொருள்களில் இருந்து ஐம்புலன்களையும் விலக்குதல்.
6. தாரனை ( மன ஒருமைப்பாடு/மனதை ஒரு நிலைப் படுத்துதல்) ஒரே பொருளின் மீது கவனத்தை நிலைப் படுத்துதல்.
7. தியானம் (தியானம்) தியானதிற்கு எடுத்துக்கொண்ட பொருளின் உண்மைத்தன்மையை ஆழ்ந்து சிந்தித்தல்.
8. சமாதி (விட்டு விடுதலை ஆதல்) உணர்வுகளை தியானிக்கும் பொருளுடன் இணைத்துவிடுதல்.
யோகாவின் குறிக்கோள்
யோகாவின் குறிக்கோள் ஆரோக்கியத்தை முன்னேற்றுவதில் தொடங்கி, மோட்சத்தை அடைவது வரை பல வகைப்படும்.
உங்கள் உடல் உங்களுடன் ஒரு நிரந்தர/ நிலையான உறவை பேணி வர வேண்டும் , எப்படி என்றால் ஒரு அமைதியான , நடுநிலையான மனஅமைதி பெற்று விளங்கவேண்டும் என்பதே!.
(நன்றி : விக்கிபீடியா , கூகிள் (ta.wikipedia.org/wiki/யோகக்_கலை)
அதற்கான ஆரம்பமே பிராணாயாமம் மற்றும் ஆசனாக்கள். அது பற்றி இங்கு சிறிய குறிப்பு !
ப்ராணாயாமம்
1 பஸ்த்ரிகாப்ராணாயாமம் : பஸ்த்ரிகா என்றால் உலை துருத்தி என்று பொருள். பழங்கால, கொல்லன் பட்டறையில், புஸ் புஸ் என காற்றை வேகமாக வெளியே அடிக்கும் தோல் பை. அதுபோல் இந்த ப்ராணா- யாமத்தில், வேகமாக, ஆழமாக மூச்சை உள்ளே இழுத்து, ஆழமாக மூச்சை வெளியே விடும் எளிதான மூச்சு பயிற்சி..
(முக்கிய பயன் : ரத்த ஓட்டம் சீராக, நுரையீரல் பலப்பட, மன அழுத்தம் குறைய உதவுகிறது. முக்கியமாக , உடலுக்கு தேவையான பிராண வாயு அதிகம் கிடைக்கிறது.)
XXXXX
2 கபால பட்டி (KAH-pah-lah-BAH-tee)) : கபாலம் என்றால் மண்டை. பட்டி (bhati) என்றால் பிரகாசிக்கும் என்று பொருள் கொள்ளலாம். இந்த பிராணாயாமத்தால், மண்டையோடு ,அத்துடன் சேர்ந்த மற்ற உறுப்புகள், முக்கியமாக மூளை , சிறு மூளை, சைனஸ் எனும் மூக்கை சார்ந்த இடங்கள் சிறப்பாக வேலை செய்ய உதவும். மூச்சை, வேகமாக, மீண்டும் மீண்டும் இடைவெளி இல்லாமல், வெளியே விடவேண்டும்
( முக்கிய பயன் : சைனஸ் தொந்திரவுகள் குறையும், கழிவுகள் வெளியேறும் .உடல் எடை குறையும், ஜீரண உறுப்புகளும் புத்துணர்வு பெறும்)
XXXX
3 பாஹ்யா ப்ராணாயாமம்: பாஹ்யா என்றால் வெளியே என்று பொருள். நுரையீரலிலிருந்து மூச்சை வெளியே விட்டு விட்டு,. தொண்டை (ஜலந்தர்), வயிறு/ நாபி கமலம் (உத்தியான்) மற்றும் மூலாதாரம் ( மூலம்) இவைகளை கட்டுபடுத்துவதால் (பந்தன்), இந்த பிராணாயாமம் பாஹ்யா என பெயர் பெற்றது.
( முக்கிய பயன் : மலச்சிக்கல், அஜீரணம், வாயு தொந்திரவுகள் குணமாகும் . சர்க்கரை நோய், ப்ரோஸ்ட்ரேட் போன்ற நோய்கள் குணமாகும்)
XXXXX
4 அக்னிசார் கிரியா: அக்னிஎன்றால் நெருப்பு. சார் என்றால் சுத்தப் படுத்துதல் என பொருள் கொள்ளலாம். நாபி கமலத்தின், மணிப்பூர் சக்ராவை (தீ சக்கரம்) சுத்தப் படுத்தும் ப்ராணாயாமம் என்பதால் இந்த பெயர் வந்தது.
முக்கிய பலன் : நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். மற்றும் சர்க்கரை நோய்க்கு நல்லது )
XXXXX
5.உஜ்ஜயி ப்ராணாயாமம் : உஜ்ஜயி என்றால் வெற்றி கோஷம். இதை கடலின் ஆரவார மூச்சுஎன்றும் சொல்லுவர்.
( முக்கிய பயன் : தைராயிட் பிரச்னைகளுக்கு இந்த ப்ராணாயாமம் சிறந்தது. தொண்டை சம்பந்தப்பட்ட நோய்களும் இதில் குணமாகும். )
XXXXX
6.அனுலோமா விலோமா ப்ராணாயாமம் : அனு என்றால் உடன் என்று பொருள். லோமா என்றால் ரோமம் (முடி மற்றும் முடியின் வேர்க்கால்கள்). மூச்சை, மூக்கு ரோமத்தை சார்ந்து இழுப்பது அனுலோமா. மூச்சை, மூக்கு ரோமத்தை எதிர்த்து இழுப்பது விலோமா.
(முக்கிய பயன் : ஆஸ்த்மா மற்றும் நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களுக்கு நல்ல தீர்வு. வாத, பித்த கப தோஷங்களை நீக்க வல்ல பிராணாயாமம்)
XXXXX
7 ப்ராம்ஹரி ப்ராணாயாமம்:ப்ராம்ஹரி என்பது கரு வண்டினை குறிக்கும். இந்த பிராணாயாமத்தில், மூச்சை வெளியே விடுகையில், வண்டின் ரீங்காரம் போல் ஒலிக்கும். எனவே இந்த பெயர்.
(முக்கிய பயன் : மனதை ஒரு முகப் படுத்தத உதவும். கோப தாபங்களை உடனடியாக கட்டுப்படுத்த உதவும். எளிதான ப்ராணாயாமம், மன உளைச்சலை, எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் குறைக்க உதவும் )
XXXXX
8 உத்கீத் ப்ராணாயாமம்: உத்கீத் என்றால் ஜபம் இதை ஓம்காரி ஜபம் என்று சொல்லலாம் இது மிக எளிதான மூச்சு பயிற்சி. ஒவ்வொரு முறை மூச்சை வெளிவிடும் போதும் ‘ஓம்’ என்று சொல்வது, இருபது வினாடிகளுக்கு குறையாமல் !
( முக்கிய பலன் : மன உளைச்சலை குறைக்க, தூக்கமின்மையை தவிர்க்க, நினைவாற்றலை மேம்படுத்த உதவும்)
XXXXX
9 பிரணவ் (த்யான்) ப்ராணாயாமம் : பிரணவ் என்ற சொல்லிற்கு ஓம் என்று பொருள் கொள்ளலாம். உத்கீத் பிராணாயாமம் முடிந்த பிறகு, பிரணவ் ப்ராணாயாமத்தை இரண்டு நிமிட தியானமாக செய்யலாம். உள்ளே இழுக்கும் மூச்சு, வெளி விடும் மூச்சு இரண்டிலும் மனதை ஒரு நிலைபடுத்தி ஓம் என்ற மந்திரத்திலோ அல்லது உள் வெளி மூச்சிலோ நிறுத்த வேண்டும்.
( முக்கிய பயன்: மனது ஒரு நிலைப் பட உதவும்.!)
XXXXX
ஆசனங்கள்
(முக்கிய பயன்: கணயத்தை (Pancreas) ஊக்குவிக்கிறது. இனிசுலின் அளவு அதிகமாவதால், சர்க்கரை நோய் குணப்படுத்தப்படுகிறது. வயிறு சம்பந்தப் பட்ட நோய்கள் குணமடைய, உதவும் இதயத்திற்கு நன்மை பயக்கக் கூடியது).
XXXXXXXXXXXXXX
2 சஷாங்காசனம்: சஷாங் என்றால் முயல் என்று பொருள். முயல் போன்று அமர்ந்து செய்யும் ஆசனம்
(முக்கிய பயன்: இதயத்தை ஸ்வபாகமாக மாலிஷ் செய்கிறது. இதனால், இதய நோய்களுக்கு பயனுள்ளது. குடல், பித்தப்பை, ஜீரண மண்டலம், சிறுநீரகம் வலிமையடையும். மன நோய், கவலை, கோபம் போன்றவை குறைய உதவும். பெண்களின் கர்ப்பப் பை வலிமையடைகிறது.)
XXXXXXXXXXXXXX
3 வக்ராசனம்: வக்கிரம் என்றாலே கோணல் மாணலாக வளைவது என்று கொள்ளலாம். உடலின் முதுகு தண்டை வளைத்து அமர்ந்து செய்யும் ஆசனம். முக்கிய பனிரண்டு ஆசனங்களில் இதுவும் ஒன்று.. இதை அர்த்த மத்ச்யேந்திர ஆசனம் என்றும் சொல்வதுண்டு (மீன் தன் உடலை வளைப்பது போல ஒரு ஆசனம்) . வக்ராசனத்திலேயே நிறைய வகை மற்றும் பிரிவுகள் உண்டு.
(முக்கிய பயன் : இடுப்புப் பகுதியின் கொழுப்பு கறைய, பித்தப் பை மற்றும் மண்ணீரல் வீக்கத்திற்கு பயனுள்ளது. )
XXXXXXXXXXXXXX
4 கோமுகாசனம்:கோ என்றால் பசு . பசுமுக ஆசனம். கால் தொடை மற்றும் முழங்கால் மடித்து தலை தூக்கி அமரும் விதம், பசுவின் முகம் போல இருப்பதால் இந்த பெயர்.
(முக்கிய பயன்: குடல்களுக்கு நன்மை பயக்கும். தாது நோய்கள், அதிகம் சிறுநீர் கழித்தல் மற்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பயனுள்ளது. முடக்கு வாதம், சுளுக்கு போன்றவை விலகுகிறது. பித்தப் பை, சிறுநீரகம், மற்றும் மார்பு பகுதிக்கு வலிமை அளிக்கிறது. )
XXXXXXXXXXXXXX
5 மக்ராசனம் 1&2 : மக்ர என்றால் முதலை . முதலை போன்று படுத்து செய்யும் ஆசனம்.
(முக்கிய பயன்:, முதுகு தண்டு வட பிரச்னைகள், ஸ்லிப் டிஸ்க் , செர்விகல் ஸ்பாண்டிலிடிஸ் கோளாறுகளை குறைக்க, நீக்க உதவும். சியாடிக்கா ( நரம்பு சம்பந்த கால் வலிக்கு) பயனுள்ளது. ஆஸ்துமா, மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட எந்த நோயும் மற்றும் மூட்டு வலி போன்றவைகளுக்கு பயனளிப்பது.
XXXXXXXXXXXXXX
6 புஜங்காசனம் + பூரண புஜங்காசனம் : புஜங்க என்பது பாம்பை குறிக்கும். பாம்பு தலை தூக்குவது போன்ற தோற்றத்தை கொடுப்பதால், இந்த பெயர் இந்த ஆசனத்திற்கு வந்தது . பாதி தலை தூக்கி செய்யும் ஆசனத்திற்கு அர்த்தபுஜங்காசனம் என்று பெயர்.
(முக்கிய பயன்: முதுகு தண்டு வட பிரச்னைகள் .செர்விகல் ஸ்பாண்டிலிடிஸ், ஸ்லிப் டிஸ்க் கோளாறுகளை குறைக்க, நீக்க உதவும். சியாடிக்கா மற்றும் கழுத்து வலிக்கு பயனுள்ளது.
XXXXXXXXXXXXXX
7 ஷலபாசனம்: சலபா என்றால், வெட்டுக்கிளி. சாதகர்கள் , தங்கள் முதுகை வளைத்து, தொடை இடுக்கில் கை வைத்து, கால்களை தூக்குவது இந்த ஆசனம். பார்க்க வெட்டுக்கிளி அமர்ந்தது போல இருப்பதால், இது ஷலபாசனம் என்று அழைக்கப் படுகிறது. இதை தாமரை நிலை என்றும் சொல்வதுண்டு
(முக்கிய பயன்: தண்டு வடத்திற்கு கீழுள்ள பகுதிகளில் உண்டாகும் எல்லா நோய்களும் விலகும். இடுப்பு வலி மற்றும் காச நோய் குணமாகும்.)
XXXXXXXXXXXXXX
8 மர்கடாசனம்1,2 &3: மர்கட் என்றால் வானரம். படுத்த படி, காலை மடித்து சாய்த்து,, கையை நீட்டி, முகத்தை மறு புறம் திருப்பி , செய்யும் ஆசனம் என்பதால், வேடிக்கையாக இந்த பெயர் வந்தது.
(முக்கிய பயன்: இடுப்பு வலி, செர்விகல் ஸ்பாண்டலய்டிஸ், ஸ்லிப் டிஸ்க் போன்ற உபாதைகளுக்கு தீர்வு காணலாம். வயிற்று வலி, வயிற்று போக்கு, மலச்சிக்கல், மற்றும் வாயுத்தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறலாம் இடுப்பு தசை ஒழுங்கு பட, முட்டி வலி குறைய உதவும் )
XXXXXXXXXXXXXX
9 பவன முக்தாசனம்: பவன் என்றால் வாயு (Gas) . முக்தா என்றால் விடுவிப்பு . இந்த ஆசனத்தின் பயன், குடல் வாயுவை நீக்குவது என்பதால் இந்த காரணப் பெயர்.
முக்கிய பயன்: வயிற்றிலுண்டாகும் வாயுத் தொல்லையிலிருந்து நிவாரணம் பெற உதவும். பெண்கள் கர்ப்ப சம்பந்த நோய்கள் குறையும். புளி ஏப்பம், இதய நோய், கடின ரத்த போக்கு மற்றும் உஷ்ணம் சம்பந்தப் பட்ட நோய்களுக்கு பயன் அளிக்க வல்லது. வயிற்று ஊளைச்சதையை குறைக்க உதவும்)
XXXXXXXXXXXXXX
10 அர்த்த ஹாலாசனம்: ஹல் என்றால் கலப்பை . படுத்த படி காலை தூக்கி செய்யும் இந்த ஆசனத்தின் போது, சாதகர் கலப்பை போல தெரிவார். காலை முழுமையாக தலையை தொடும் வரை கொண்டுவராமல், தொண்ணுறு பாகை வரை காலை நேராக நிறுத்தி செய்யும் ஆசனத்தை அர்த்த ஹாலாசனம் என்பர். அர்த்த என்றால் வடமொழியில் அரை அல்லது பாதி என பொருள். ( இந்த ஆசனம் உத்தான பாதாசனம் போன்றது)
(முக்கிய பயன்: உடல் பருமனை குறைக்கஉதவும். . குடலை வலிமையாக்க, அஜீரணம், வாயுத்தொல்லை, உடல் பருமன் குறைகிறது. முதுது தண்டை பலப்படுத்தி மற்றும் வளையும் தன்மையாக்கி, கால் தசைகள், முட்டி, இடுப்பு தசைகள் பலப்பட துணை நிற்கும். டிஸ்க் விலகல், இதய நோய், மற்றும் சுவாச கோளாறுகள் குறையும்).
XXXXXXXXXXXXXX
11 பாத வ்ரித்தாசன்: காலை தூக்கி வட்டம் உண்டாக்கிய வண்ணம் சுற்றும் ஆசனம். இரண்டு கால்களையும், தனித்தனியாக மற்றும் சேர்ந்து, இடமிருந்து வலமாக மற்றும் வலமிருந்து இடமாக சுற்றும் பயிற்சி.
(முக்கிய பயன்: அதிகமாக உள்ள தசைகளை குறைக்க உதவும். தொடை, பக்கங்கள் மற்றும் இடுப்பு ஊளை சதைகளை விலக்கி வயிற்றை லேசாகவும் சிறியதாகவும் ஆக்குகிறது.
XXXXXXXXXXXXXX
12 திவிச்சக்கர ஆசனம்: . இரு சக்கர வாகனத்தை மிதிப்பது போன்ற செயலை செய்யும் ஆசனம்.
(முக்கிய பயன்: உடல் பருமனை குறைக்க, தொப்பையை குறைக்க, குடல்களை ஊக்குவிக்க உதவுகிறது. இந்த ஆசனம் செய்வதால், மலச்சிக்கல் குணமாகிறது, இடுப்பு வலி குறைகிறது)
XXXXXXXXXXXXXX
13 யோக நித்ரா / சாந்தி ஆசனா : இதை சவாசனம் என்று சொல்வதுண்டு. உடலில் எந்த அசைவும் இல்லாமல் தரையில் படுத்துக் கொண்டு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் நினைத்து ஓய்வு எடுக்க அனுமதிக்கும் பயிற்சி.
முக்கிய பயன்: மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், (இதய நோய் மற்றும் தூக்கமின்மை போன்ற நோய்களுக்கு சிறந்தது. தளர்ச்சி , சோர்வு மற்றும் எதிர்மறை எண்ணங்கள் நீக்கப்படும். உடல், மனம் மூளை மற்றும் ஆன்மாவிற்கு ஓய்வு கிடைத்து அவை வலிவு மற்றும் ஆனந்தத்துடன் இருக்கும்
XXXXXXXXXXXXXX
14 சிம்மஹாசனம் : வஜ்ராசனத்தில் அமர்ந்து முட்டியை சிறிது திறந்து இரு கைகளையும் கால்களின் இடுக்கில் வைத்து , நாக்கை வெளியே நீட்டி சிம்மம் போல் கர்ஜனை செய்வது.
(முக்கிய பயன் : டான்சில்ஸ், தைராயிட் மற்றும் கழுத்து பிரச்னைகள் குறைய, காது நோய்களுக்கு மற்றும் தவறான தெளிவற்ற உச்சரிப்பு பிரச்னைகள் குறையும். வாய் திக்குதல் குறையும் )
XXXXXXXXXXXXXX
15ஹாஸ்யாசன் : ஹாஸ்யம்என்றால் நகைச்சுவை. ஹாஸ்யாசன் நகைச்சுவை சிரிப்பை குறிக்கும் . வாய் விட்டு ,மனம் திறந்து , உரக்க சிரிப்பது.
(முக்கிய பயன் :முக தசை பயிற்சி)
XXXXXXXXXXXXXX
பொதுவாக, யோகிகளால் பயன் படுத்தப்படும் ஆசனங்கள் கீழே உள்ள இந்த சுட்டியில் விவரிக்கப்பட்டுள்ளது
https://en.wikipedia.org/wiki/List_of_asanas.
காலம், இடம், நேரம், வயது இவைகளுக்கு உட்பட்டு சில ஆசனங்கள் , சில யோகா மையங்களில் கூட்டப் படும், அல்லது குறைக்கப் படும் . சில ஆசனங்களை , வேறு சில யோகா மையங்களில் மாறுபட்ட பெயர்களில் குறிப்பிடுவதுண்டு. அதே போல், ஒரே பெயர் கொண்டு, சில மாற்றங்களுடன் , வித்தியாசமான ஆசனங்களும் உண்டு.
உதாரணமாக :
i நவகாசனம்:நாவ் என்றால், வடமொழியில் படகு என பொருள். கவிழ்ந்து படுத்தபடி, படகை போல் உடலை வளைப்பது.
( முக்கிய பயன்: இதயம் மற்றும் நுரையீரல்கள் பலப் படுகின்றன. குடல் வலிமை அடைகிறது. உத்தான பாதாசனம் செய்யும் போது ஏற்படும் நன்மைகள் இதிலும் உண்டாகும். உணவுக்குழல், வயிறு, இரப்பைக்கு பயனளிக்கிறது. )
ii.சேது பந்தாசனம் : சேது என்றால் பாலம் என்று பொருள். கணுக்கால்களை கைகளால் பிடித்துக் கொண்டு, இடுப்பை தூக்கி ஒரு பாலம் போல உடலை வளைத்து செய்யும் ஆசனம்.
(முக்கிய பயன் : ஸ்லிப் டிஸ்க், இடுப்பு மற்றும் கழுத்து வலி, வயிற்று நோய்களுக்கு தீர்வு காண உதவும்.)
iii. பாத ஹஸ்தாசனம் : பாதம் என்றால் கால். ஹஸ்தம் என்றால் கை. கைகளால் காலை தொடுவது
(முக்கிய பயன்: ஜீரண உறுப்பு பலப்பட, உடல் எடை ,தொந்தி குறைய)
iv ஊஸ்தர ஆசனம்:ஊஸ்தர என்றால் ஒட்டகம். முட்டியிட்டு, முதுகை வளைத்து கையால், கால் பாதங்களை தொடும் ஆசனம். பார்க்க ஒட்டகம் போல இருப்பதால் இந்த பெயர்.
(முக்கிய பயன்: ( சுவாச உறுப்புகளுக்கு பயனுள்ளது. தண்டு வட நோய்களுக்கு தீர்வு காண உதவும். தைராயிட் சுரப்பிக்கு பயனுள்ளது. முன்னர் செய்த ,முதுகை முன்னால் வளைக்கும் ஆசனங்களுக்கு எதிர் மறை ஆசனம். கவுன்ட்டர் பாலன்ஸ். உடல் தசைகளை தளரவைக்க, செரிமானத்தை அதிகபடுத்த உதவும் )
Courtesy : Google
**** முற்றும்
Last edited: