“படு தோல்வியைத் தழுவியிருக்கும் மே.இந்திய கிரிக்கெட் அணி பற்றிய ஒரு கண்ணோட்டம்”
விளையாட்டுத் துறை ஒவ்வொன்றிலுமே“ அசாத்திய வீரர்கள்” என்று பலர் வந்து போகிறார்கள். எத்தனை வருடங்கள் கழிந்தாலும், அவர்கள் நம் மனங்களை விட்டு அகல்வதேயில்லை. குத்துச் சண்டை விளையாட்டை எடுத்தால், மொகமட் அலி என்று தன் பெயரை மாற்றிக் கொண்ட காஸ்ஸியஸ் கிளே என்ற “வண்ணத்துப் பூச்சி குத்துச்சண்டை வீரரை ” எப்படி ஒரு ரசிகரால் மறக்க முடியும்? காற்பந்தாட்டம் பக்கம் சென்றால், மிக இலாவகமாக விளையாடி பலர் மனதையும் கொள்ளை கொண்ட பிரேசில் வீரர் பேலே , நம் மனங்களை விட்டு அகல மறுப்பவர். மின்னல் வேகத்தில் ஓடி, ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பதக்கங்களைக் குவித்த கார்ல் லுாயிஸ் என்ற கறுப்பின அமெரிக்கரின் மின்னல் வேக ஓட்டத்தை யார்தான் மறப்பார்? டென்னிஸ் மட்டையை இலாவகமாகப் பிடித்து எதிராளிகளைப் பந்தாடிய செக் நாட்டு டென்னிஸ் வீராங்களை மார்ட்டீனா உங்கள் ஞாபகத்திற்கு வருகிறாரா? கால்ப்ஃ விளையாட்டில் அமெரிக்கரான டைகர் வுட்ஸ், மீன் குஞ்சு போல மிக இலாவகமாக நீந்தி , உலகின் அதி சிறந்த நீச்சல் வீரராக ஜொலித்த அமெரிக்கரான மிக்கெயில் பெஃல்ப்ஸ், நீண்ட துார ஓட்டப் பந்தயங்களில் நான்தான் ராஜா என்று புகழ்பெற்ற சோமாலி நாட்டவரான மொகமட் ஃபாரா(இப்பொழுது சேர் பட்டம் பெற்ற பிரித்தானியப் பிரஜை)....... இப்படி நீள்கின்றது பட்டியல்
கிரிக்கெட் உலகின் இராட்சதர்கள்
இப்படி விளையாட்டு உலகின் நட்சத்திரங்களை பட்டியலிட்டால், அது தொடர் சங்கிலியாக நீண்டு கொண்டே போகும். இங்கே நாம் இன்றைய மே.இந்திய கிரிக்கெட் அணி பக்கம் நம் பார்வையைத் திருப்புவோம்.
மே.இந்திய தீவுகள் தனித்துவமான இசைக்கு மட்டும் பிரபல்யமானவை அல்ல. கிரிக்கட் என்றதும் சட்டென ஞாபகத்திற்கு வருபவர்கள் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட மே.இந்திய கிரிக்கெட் வீரர்கள்தான். அந்த அளவுக்கு ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தது இவர்கள் இராஜ்யம். சமீபத்தில் நடந்து முடிந்து விட்ட இரு டெஸ்ட் போட்டி அணிகளிலும் இவர்கள் இந்தியாவிடம் “ வாங்கிக் கட்டிக் கொண்ட”தோரணையைப் பார்க்கும்போது, அட கடவுளே என்று தலையில் அடித்துக் கொள்ளத்தான் முடிகின்றது. எனது பள்ளிக் காலத்தில் அதாவது 50 வருடங்கள் பின்னோக்கி நகர்ந்தால், பார்படோஸ் தீவுக்காக விளையாடிய வெஸ்லி ஹால் என்ற நெடுத்த தோற்றம் கொண்ட மே.இந்திய கிரிக்கட் வீரர் உங்கள் முன் வருவார். 1958 தொடக்கம் 1969 வரை விளையாடிய இவர் களத்தில் இறங்கினால், துடுப்பாட்ட வீரர்களுக்குப் பயங்கரந்தான். இவர் பந்து வீசும்போது, இவர் கையசைவைப் பார்த்தே, துடு்பபாட்ட வீரர்கள், பந்து எங்கே நிற்கிறது என்றுகண்டு பிடிப்பார்களாம். அந்த அளவு வேகமாக பந்து வந்து விழும். றோகன் கன்ஹாய் என்ற ஓட்டங்கள் குவிக்கும் இயந்திரத்தை எவர் மறப்பார்? அதிசிறந்த தொடக்க ஆட்டக்காரரான கோர்டன் கிரீனிட்ஜ் எப்படி நம் மனதை விட்டகல்வார்? இன்றுவரையில் இவர் டெஸ்மன்ட் ஹெயின்ஸ் என்பவருடன் இணைந்தாடியவைதான், உலகின் அதிசிறந்த ஆரம்ப ஆட்ட ஜோடி ஆட்டங்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளன. சேர் பட்டம் பெற்றவரும் முன்னாள் அணித் தலைவருமான ஸோபேர்ஸ் என்ற ஒப்பற்ற துடு்பபாட்ட வீரரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். 1983 வரை விளையாடிய இன்னொரு மின்னல் வேக பந்து வீச்சாளர் அன்டி றொபேர்ட்ஸ், 1985 வரை விளையாடிய இன்னொரு பிரபல்யமான அணித் தலைவர் கிளைவ் லொயிட்ஸ், 1991இல் ஓய்வு பெற்ற விவ் றிச்சார்ட்ஸ் என்ற துடுப்பாட்ட மந்திரவாதி-யாரை விடுவது யாரைச் சேர்ப்பது? குழப்பமே மேலிடுகின்றது. அன்டி றொபேர்ட்ஸ், மிக்கெயில் ஹோல்டிங், மல்கம் மார்ஷல், ஜோயல் கார்ணர், கொலின் குரொப்ட்- இந்தப் பந்து வீச்சுப் படை வந்தால், எதிராளிகள் படை துவம்சந்தான். சந்தனக்காட்டு வீரப்பன் போல, எண்பதுகளில்,தொண்ணுாறுகளில் ”கிலியூட்டும் கிரிக்கெட் வீரர்களாக ” இருந்தவர்கள், இன்று “மிதிபடும் வீரர்களாகி” இருப்பது ஏற்புடையதல்ல!
போய்விட்ட பொற்காலம்
இந்த அணியினரது பொற்காலம் என்று 1976க்கும் 1995க்கும் இடைப்பட்ட காலத்தை துணிந்து சொல்லி விடலாம். இந்தக் காலகட்டத்தில் தாம் விளையாடிய 137 டெஸ்ட் போட்டிகளில் 71 மோதல்களை இவர்கள் வென்றுள்ளார்கள். 18 மோதல்களில் மாத்திரமே தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். கோலியின் தலைமையிலுள்ள இன்றைய இந்திய அணியினருக்கு தற்போதைய காலம் பொற்காலாக இருப்பதுபோல, மேற்கிந்திய அணிக்கு அந்தக் காலம் அப்பொழுது பிரகாசித்துள்ளது. “கலிப்ஸோ மன்னர்கள்” என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர்கள் எண்பதுகளிலும், தொண்ணுாறுகளின் நடுவிலும் 31 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 21 மோதல்களில் வென்றுள்ளார்கள். ஒன்றேயொன்றில் மாத்திரம் தோற்றார்கள் என்று அறிய வரும்போது, அவர்களின் அன்றைய அசுர பலம் உங்களுக்கு நன்றாகவே புலனாகி இருக்கும். “கிவிஸ்” என்ற செல்லப் பெயர் கொண்ட நியூசிலாந்து அணியே இவர்களை அப்பொழுது தோற்கடித்திருந்தது. மார்ஷல், கார்னர் என்ற அசுரப் பந்துவீச்சாளர்கள், எதிராளிகளைப் பந்தாடிய உச்சக்கட்ட காலம் அது.
ஒரு நாள் ஆட்டத்திலும் மன்னர்கள்தான்
டெஸ்ட் போட்டிகளில்தான் நின்று நிதானமாக ஆடி ஓட்டங்கள் குவித்தார்கள் என்றில்லை. இடையில் புகுந்த ஒருநாள் ஆட்டங்களிலும் இவர்கள் கைவரிசை நன்றாகவே தெரிந்தது. 1975,1979ஆம் ஆண்டுகளில் உலக வெற்றிக் கிண்ணத்தை வென்றது ஒருபுறமிருக்க1979-1995 காலகட்டத்தில் விளையாடிய 270 ஒருநாள் ஆட்டங்களில் 173ஆட்டங்களில் வெற்றி நாயகர்கள் இவர்கள்தான்! இந்தக் காலகட்டத்தில் அணிக்கு தலைமை தாங்கிய விவி றிச்சார்ட்ஸ் என்பவர் களத்தில் புகுந்தால், எல்லாமே தலைகீழாக மாறிவிடும்!!!
வியாபாரப் பொருளாக மாறிவிட்ட கிரிக்கெட்
தொண்ணுாறுகள் தொடக்கம் கிரிக்கெட்-குறிப்பாக ஒரு நாள் கிரிக்கெட் ஒரு வர்த்தகப் பண்டமாக மாறி விட்டது கொடுமையிலும் கொடுமை. பணம் கொட்டும் இயந்திரம் என்று நன்றாக அறிந்து, ஒருநாள் ஆட்டத்தை உப கண்டத்திற்கு, 1996.ல் இழுத்து வந்த பெருமை ஜக்மோகன் டல்மியா என்ற இந்திய(கல்கத்தா) வர்த்தக பிரமுகரையே சார்கிறது.உழைப்பிற்காக விளையாடும் நிலை கிரிக்கெட்டில் நிலைகொள்ள ஆரம்பித்தபோது, மே.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் ஆட்டம் காணத் தொடங்கியது. எமது திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அணிவீரர்கள் குரல்கொடுக்க, பல் இழந்த வேட்டைச் சிங்கங்களின் நிலைதான் உருவாகிற்று. 2000மாவது ஆண்டுகளில் ஓப்பந்தப் பிரச்சினைகள் தலைதுாக்கலாயின. பணம் பந்திக்கு வரத் தொடங்கி விட்டது. இதன் விளைவாக சிதறியது பலமான மேற்கிந்திய அணி.
பூனையாகிய யானை
ஐபிஎல் என்ற இந்தியன் பிரிமியர் லீக் ஒரு தங்கச் சுரங்கமாகியது. அன்றைய காலத்தில் தங்க வேட்டைக்குப் புறப்பட்டதுபோல, உலக நாட்டு வீரர்கள் பலர் இதனால் ஈர்க்கப்ப்ட்டு, இந்தக் களததில் குதித்தனர். மே.இந்திய அணி வீருாகள் பணமுடை காரணமாகவே , தங்கள் கிரிக்கெட் சபையுடன் முரண்பட்டுக் கொண்டதால், இந்த வாய்ப்பை அவர்கள் நழுவ லிடத் தயாராக இல்லை. கிரிஸ் கைல், பிராவோ, பொலார்ட், சமி, போன்ற சிறந்த விரர்கள், ஐபீஎல் நட்சத்திரங்களாகியது நாமறியாத கதை அல்ல.
இன்று இவர்கள் இந்திய அணியிடம் படு மோசமாகத் தோல்வியைத் தழுவியிருக்கலாம். ஆனால் இது அவர்கள் முடிவல்ல. இன்றும் கூட அவர்களது ரி20 அணி மிகச் சிறப்பானதாக இருந்தாலும், டெஸ்ட் அணியும், 50 ஓவர் அணியும் நிலைகுலைந்து போயிருக்கின்றன. இலங்கை அணி இன்று பல பிரச்சினைகள் காரணமாக சீாகுலைந்து இருப்பதுபோல, இவர்கள் அணியும் மோசமான நிலையில் இருக்கின்றது.
ஆனால் மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அணி இவை என்று நாம் ஒதுக்கி விட முடியாது. சாம்பரிலிருந்து உயிர்த்தெழுந்து, புத்துயிர் பெற்ற ஃபீனிக்ஸ் பறவைபோல , இவர்கள் கிரிக்கெட் புத்துயிர் பெற வேண்டும்1928இல் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அங்கீகாரத்தைப் பெற்ற ஓர் அணி, 90 வருடங்கள் விளையாடி விட்டு, ஒரேயடியாச் சுருண்டு விட முடியுமா? கூடவே கூடாது....
யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் என்பார்கள். யானையாய் இருந்தவை பூனைகளாகத் தான்றுவதால், யானைகள் பூனைகளாகி விடலாமா? இந்த அற்புத அணி மீண்டும் திரண்டு பலம் மிக்க ஆனைகளாக மிளிர வேண்டும் என்பதே ரசிகர்கள் விருப்பம்!
ஏ.ஜே.ஞானேந்திரன்
15.11
ajgswiss@gmail.com