என் பெயர் ஞானேந்திரன்......

gnanam51

New member
அனைத்து அன்பு உறவுகளுக்கும் இனிய காலை வணக்கம்.
ராஜேஸ்மணாளன், யாழவன் என்ற புனைபெயர்களால் அறியப்படும் ஞானேந்திரனாகிய நான் வாசிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் மிக்கவன். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பல்வேறு பத்தரிகைகள் ,சஞ்சிகைகளுக்கு எழுதிக் கொண்டிருப்பவன். 31 வருட கால அந்நிய வாழக்கையை(குவெத்(7வருடங்கள்), சுவிட்ஸிலாந்து(24வருடங்கள்)முடித்து விட்டு, பதவி ஓய்வு பெற்று தாயகத்தில்இருப்பவன். இன்று தொடராக உள்நாட்டுப் பத்திரிகைகளுக்கு எழுதிக் கொண்டிருப்பவன். ஆங்கிலத்தில் பிடித்த எழுத்தாளர் Arthur Hailey, Ken Follet. தமிழில் சாண்டில்யனும், பாலகுமாரனும் என் அபிமான எழுத்தாளர்கள்.
தமிழை நேசிப்போம் , நிறைய வாசிப்போம் என்பதே என் பேரவா
 
Back
Top