தாமரையின் புத்தகங்கள் வெளியீடு!!!

தாமரை

Facebook User
சில மாதங்களாகவே என் எழுத்துக்களைக் கோர்த்து, புத்தகமாக்கி வெளியிட வேண்டுமென மிக ஆர்வத்துடன் இருந்தேன். அதன் பயனாக, 07-08-2017 ஆவணி அவிட்டத் திருநாளில் என்னுடைய படைப்புகளில் இரண்டை அமேசான் கிண்டில் வழியாக மின்பதிப்பாக பின்வரும் இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். புத்தகங்களை வாங்க விரும்புவோர், புத்தகத் தலைப்பின் மீது சொடுக்கி, அமேசான் கிண்டில் பதிப்பை பதிவிறக்கிக் கொள்ளலாம்.

புத்தகங்களின் அறிமுகங்கள் இதோ 👇


இந்து திருமணம்: சடங்குகளும் தத்துவங்களும்


Marr-cover.jpg



திருமணம் என்பது இல்லற வாழ்வின் மகத்துவம், அதன் பொருள், அதன் நோக்கம், அதன் பயன் போன்ற அனைத்தையும் எடுத்துச் சொல்லும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட பல சடங்குகளைக் கொண்டது ஆகும்.

மதம், சடங்குகள் என்பவை மூட நம்பிக்கைகள் அல்ல. அவை வாழும் நெறிகளாகும். அவை வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டும் கைகாட்டி மரங்கள் என்பதைப் புரிந்து கொள்ளுதல் மிக அவசியம்.

அந்தச் சடங்குகள் அனைத்தையும் விளக்குவதே இந்தப் புத்தகம்.


தினம் ஒரு திருமந்திரம்
பகுதி 1: பாயிரம் - 112 மந்திரங்கள்


Mandhiram-cover.jpg

திருமந்திரம் ஒரு மாபெரும் பொக்கிஷம். இது மனிதர்களுக்காக இறைவனால் அருளப்பட்டது. அது சாதாரண மனிதனைச் சென்று அடையா விட்டால் திருமூலரின் தவமே பயனற்றது போலே ஆகி விடும்.

எனவே சாதாரணத் தமிழில் அதற்கு விளக்கம் எழுத வேண்டும் என்ற ஆசை என் மனதில் எழுந்தது. அதைத் தமிழ் மன்றம் என்ற இணைய மன்றம் நீர் விட்டு வளர்த்தது. எனவே எளிய நடையில் செய்யுள்களின் உண்மையான பொருள்களை எழுதியிருக்கிறேன்.

திருமூலர், என்ன சொல்லி இருக்கிறார்? ஏன் சொல்லி இருக்கிறார்? எப்படிச் சொல்லி இருக்கிறார் என்று அறிய விழைபவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகச் சிறந்த கையேடாக இருக்கும் என எண்ணுகிறேன்.

இந்த நூலை நான் அமைத்த விதம் ஒரு நோக்கம் உடையது. ஒவ்வொரு செய்யுளையும் ஒரு பக்கத்திலேயே விவரித்து முடிக்க வேண்டும். தினம் ஒரு செய்யுளைச் சொன்னேன் எனத் திருமூலர் சொன்னார். அதே போல் தினம் ஒரு மந்திரம், ஒரே ஒரு பக்கம் கற்றுத் தெளியட்டும் என்பதற்காக ஒரு செய்யுளுக்கு ஒரு பக்கம் என ஒதுக்கப்பட்டுள்ளது.


இவ்விரண்டு புத்தகங்களுக்காக காரணிகளாகவும், கர்வியாகவும் இருந்த, ஜானகி அம்மாள், கரிகாலன்.ஜி, கீதம், ஆதவா, அமரன் இன்னும் பிற தமிழ் மன்ற நண்பர்களுக்கும் நன்றி
 
வாழ்த்துக்கள் தாமரை அவர்களே ! மிக்க மகிழ்ச்சி !
 
வாழ்த்துகள் அண்ணா. வாங்கிவிட்டேன், படித்துவிட்டு வருகிறேன்
 
படித்துக்கொண்டே வருகிறேன்.

தாமரை அண்ணாவின் புத்தகங்கள் இன்னும் வர வேண்டும் என்பதே எனது கோரிக்கை


Sent from my iPhone using Tapatalk
 
இதுகாறும் கவணிக்காமல் விட்டுவிட்டேன்.
நானிருக்கும் நாட்டில் தரவிறக்கம் செய்யவியலவில்லை
எனக்கு திருமந்திரம் நூல்கள் வேண்டும்.
எப்படியென்று தெரிவியுங்கள்!
நன்றி!
 
Back
Top