திருமண அழைப்பு!!

ஆதவா

New member
வணக்கம்,

மன்றத்தின் அனைத்து உறவுகளும் நலமா?
வருகின்ற மாசி மாதம் 18ஆம் நாள் அதிகாலை 5.00 மணிக்கு எனக்கும் பாரியூர் வெள்ளாளபாளையம் மணி என்பவரின் மகளான கீதாராணிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கோபி அருகே கவுந்தப்பாடியில் நிகழவிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழ்மன்ற உறவுகளை நினைவு கூர்ந்தும், வாழ்த்தியருளும்படி வேண்டியும் கேட்டுக் கொள்கிறேன்.

பழைய நண்பர்கள் அனைவரும் என்னை அறிவார்கள். எல்லாருடனும் தொடர்பில் இருக்கிறேன். இருப்பினும் அறிஞரை தொடர்பு கொள்ள முடியவில்லை, இன்னும் பலரை எப்படி தொடர்பு கொள்ளவேண்டுமென்றே தெரியவில்லை, ஒவ்வொருவரும் எனக்கு மிகவும் வேண்டியவர்களே. தமிழ்மன்றத்தின் வருகைக்குப் பின்னர், முன்னர் என்று வாழ்க்கையைப் பிரித்துப் பார்க்குமளவுக்கு இங்கே பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதன் பொற்காலத்தில் நானும் ஒரு பங்காளன் என்ற பெருமையும் உவகையும் இருந்துகொண்டேயிருக்கிறது. என்றாவது ஒருநாள் பழைய நண்பர்கள் பார்வையிடுவார்கள் என்ற ஆசையிலும், இங்கே பகிர்கிறேன்..

அன்புடன்
ஆதவா.
 
இல்லறமல்லது நல்லறமல்லதென்ற வாக்குக்கிசைந்தே
பத்தாம் கிரகத்திலிருந்தேகி என்றும் திகட்டா
கரும்பு விளையும் கவிந்தபாடியில்
இல்லறக்கால்பதிக்கும் ஆதவா!
அடிக்கரும்பின் அருசுவைபோல் இனியதாய் இன்பம் பெருக்கி
அருகின் பெருகுவேர்போல் நனியதாய் உறவு பெருகி
வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!
 
Last edited:
சில ஆண்டு இடைவெளி பிறகு இப்பது தான் மன்றத்தில் நுழைந்தேன், மிகவும் தாமதமான திருமண வாழ்த்துக்கள் ஆதவரே.
அன்று உங்களை சந்தித்த பொழுதில் கைப்பேசி எண்ணை வாங்க மறந்துவிட்டேன்.
 
நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு இன்றுதான் மன்றம் வந்திருக்கிறேன்.. தங்களின் மணவாழ்வு சிறப்பாக இருக்க எங்களின் வாழ்த்துக்கள்


கண்ஸ்
 
Back
Top