முன்னாள் முதல்வர் ஜெ.ஜெ அவர்களுக்கு அஞ்சலி

ravisekar

New member
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெ அவர்களுக்கு அஞ்சலி.


எல்லாவற்றையும் அலைப்பேசியில் கையடக்கமாய் வாட்ஸப்பில் படித்து, கடந்துபோகும் காலம் இது.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் காலமானதும் அதை ஒட்டியும் பல்வகைச் சேதிகள், பதிவுகளையும் நாம் அப்படி படித்திருப்போம்.

மன்றத்தில் அம்முக்கிய நிகழ்வைப் பதிவாக்குவோம் வாங்க நண்பர்களே.

எல்லாருக்கும் இவரைப் பிடிக்க எதோ ஒரு காரணம் இருக்கு என்று ஊடகங்களில் வாசிக்கிறேன். அப்படி இவரிடம் உங்களுக்குக் பிடிச்சது/வை என்ன?


எனக்கு இவரின் தைரியம் பிடிக்கும். மைசூர் பக்கம் படப்பிடிப்பில் 1970களில் இவரைச் சுற்றி கன்னட ஆர்ப்பாட்டக்காரர்கள் இவரை கன்னடத்தில் மன்னிப்பு கேள், நீ தமிழச்சி இல்லை என பயமுறுத்தி மிரட்டியும் அஞ்சாமல் தாம் தமிழச்சிதான் என உறுதியாய்ச் சொன்னவர். அதனால்தான் இரும்பு மனுஷி என கவசம் போர்த்தி அவரை தமிழகம் அனுப்பி வைத்தது.
 
நல்லதோர் திரியை துவக்கியமைக்கு நன்றிகள் ரவிசேகர்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
என்ற மகாகவியின் வார்த்தை நிரூபித்தவர். ஆணுக்கு நிகராக பெண்ணால் அரசாள முடியும் என நிரூபித்த அவருடைய சக்தி

பெண்கள் பலருக்கும் இவர் ஒரு ஊட்ட சத்து டானிக்

அம்மா உணவகம் பற்றி என் நண்பர்கள் சிலர் தேவையற்றது என விமர்சனம் செய்தாலும் நம் நாட்டில் உள்ள பலதரப்பட்ட வருமானத்தில் உள்ள மக்களை பார்க்கும் போது அது தேவை என்றே நான் நினைக்கிறேன்

குடும்ப உறுப்பினர்கள் யாரும் அருகில் இல்லாத நேரத்திலும் சோர்ந்து விடாமல் தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருப்பது

மழை நீர் சேகரிப்பில் அவர் காட்டிய அக்கறை.

அவர் எழுதிய உறவின் கைதிகள் என்ற நாவலை முன்பு படித்திருக்கிறேன். கதை எழுத்துநடையைப்பற்றி நினைவில்லை. ஆனால் கதை நினைவில் இருக்கிறது. நல்ல எழுத்தாளரும் கூட.

இவையெல்லாம் அவ்ரிடம் பிடித்தவை.
 
Back
Top