ஆண்டாள் பிறப்பும் திருப்பாவை தோற்றமும்

Senior

New member
ஸ்ரீமன் நாராயணனின் பெருமைகளுள் ஆழ்ந்து அவரைப் பாடிப் பரவியவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் பன்னிருவர்.அவ்ர்கள் பாடிய பாடல்களை கொண்ட
நூல் "திவ்யப்ரபந்தம்" அதில் முதற்பகு்தி "திருப்பல்லாண்டு". பாடியவர் விஷ்ணுசித்தர். இவரை "பெரியாழ்வர்" என்றும் கூறுவர். இவர் நந்தவனத்தில் துளசிச்
செடிகளுக்கு இடையே மண்வெட்டியால் பாத்திகளைச் செப்பனிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு கிடைத்த ஒரு பெட்டியில இருந்த பெண் குழந்தை தான்
"கோதை" என்னும் ஆண்டாள். பெரியாழ்வார் தினந்தோறும் மாலை ஒன்று கட்டி கோயிலுக்கு எடுத்துச் செல்வார். அந்த மாலையை பெரியாழ்வாருக்குத்
தெரியாமல் தன் கழுத்தில் அணிந்து கண்ணாடி முன் நின்று தன் அழகைக் காண்பாள, ஆண்டாள். இறைவனும் பெரியாழ்வாரின் கனவில் தோன்றி
கோதை சூட்டிய மாலையே தமக்கு வேண்டும் என்று பணித்தார்.ஆண்டாள் எப்போதும் திருமால் நினைவாகவே இருந்தாள்; கண்ணனைப் பற்றியே எண்ணி
பாவை நோன்பு நோற்றாள். இந்த நோன்பு பற்றி ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே "திரு்ப்பாவை".
 
நல்ல தகவல். திருமால் மார்பில் உறையும் இலக்குமி தேவியாரே ஆண்டாளாக அவதரித்ததாக சொல்வார்கள். ஸ்ரீ ராமரின் மனைவி சீதா தேவியாரும் பூமியில் இருந்து தானே தோன்றினார். நல்ல தகவல்களை தொடருங்கள். வாழ்த்துக்கள்.
 
Back
Top